மேக்கப் இல்லாமல் பார்ட்டியா!
எதற்கெடுத்தாலும் பார்ட்டி பண்ணுவதுதான் இளசுகள் மத்தியில் ஃபேஷன். அவர்கள் உலகத்தில் தினம் தினம் பார்ட்டிதான்! பிறந்த நாளுக்கு பார்ட்டி… பிரமோஷன் கிடைத்தால் பார்ட்டி! காரணமிருந்தாலும் பார்ட்டி… காரணமே இல்லாவிட்டாலும் பார்ட்டி! நியூ இயர் என்கிற பிரமாண்ட கொண்டாட்டம் காத்திருக்கும் போது, பார்ட்டிக்கு அதைவிட சிறப்பான காரணம் வேறு வேண்டுமா என்ன? புத்தாண்டு பார்ட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிற வேளையில், பார்ட்டி மேக்கப் பற்றிப் பேசுவோமா? ”தினசரி என்ன லுக்ல இருக்கோ மோ, அப்படியே பார்ட்டிக்கு போயிட முடியாது. தலை முதல் கால் வரைக்கும், பார்ட்டிக்கு தயாராகிற கெட்டப்பே வேற…. அப்ப தான் கூட்டத்துல எல்லார் பார்வையும் உங்க பக்கம் திரும்பும். ஆனா, நிறைய பேருக்கு பார்ட்டி கலாசாரம் தெரியறதில்லை. பொருந்தாத
விண்டோஸ் 8க்கான பயர்பாக்ஸ் இல்லை
மொஸில்லா நிறுவனம் விண்டோஸ் 8ல் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கும் திட்டத்தினைக் கை விட்டது. தொடு உணர் திரை மற்றும் மவுஸ் இயக்கங்களில் இயங்கக் கூடிய இரு வகை செயல்பாட்டினை ஒருங்கே கொண்ட பிரவுசரினைத் தயாரிக்கும் இலக்குடன், இத்திட்டத்தினைத் தொடங்கி, இரண்டு ஆண்டுகளாக மொஸில்லா உழைத்தது. ஆனால், முயற்சியில் வெற்றி அடைய முடியாமல், அதனை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து பயர்பாக்ஸ் பிரிவின் துணைத் தலைவர் ஜொனாதன் நைட்டிங்கேல் குறிப்பிடுகையில் ""எங்களுடைய பொறியாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆனால், வடிவமைப்பு தொடர்ந்து கவனம் தேவைப்படுவதாகவும், விரிவாக்கம் தேவைப்படுவதாகவும் இருந்ததால், அதனைக் கைவிட வேண்டியதாயிற்று” என்றார்.
சேப் மோடில் விண்டோஸ் 8.1 தொடக்கம்
விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சேப் மோடில் தொடங்குவதற்கான வழிமுறைகள் வழக்கம் போல் அல்லாமல், சற்று மாறுதலுடன் தரப்பட்டுள்ளன. அதனை இங்கு காணலாம்.
பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில், அதன் பூட் மெனுவில் இருந்து, சற்றுக் கவனமாக கையாள்கையில், சேப் மோடுக்கான வழிகிடைக்கும். ஆனால், வழக்கம் போல் பூட் ஆகவில்லை என்றால், இன்ஸ்டலேஷன் டிஸ்க் கொண்டு பூட் செய்திடலாம். இங்கு சில செயல்முறைகளை மேற்கொண்டால், பூட் மெனு கிடைக்கும்.
1. விண்டோஸ் 8 அல்லது 8.1 சிஸ்டத்தினை இன்ஸ்டலேஷன் அல்லது சிஸ்டம் ரெகவரி மீடியா கொண்டு பூட் செய்திடவும். முதலில் கிடைக்கும் திரையில்
நன்மை தரும் நுங்கு!
மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. ‘பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்’ என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதன் உற்பத்தி குறைந்தாலும், நுங்கு தரும் நன்மைகள் ஏராளம்” .
”வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன?
‘கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே…’என்று, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பாடலில் கூறுவார். பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. வீட்டிலிருக்கும் பெரியோர் மற்றும் பெற்றவர்கள் ஒரு விஷயம் குறித்து எச்சரிக்கின்றனர் என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்பதை, பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, தர்க்கம் பேசினால், எத்தகைய ஆபத்து நேரிடும் என்பதற்கு வியாசர் சொல்லும் கதையை கேளுங்கள்…
ரைப்யன் – ருக்ம ரேகை என்ற அரச தம்பதிகளுக்கு, ஏகாவலி என்ற பெண் இருந்தாள். அவள், திரபதியைப் போல, யாக அக்னியில் தோன்றியவள்.
அரசகுமாரியான ஏகாவலியும், மந்திரி குமாரியாகிய யசோவதியும் இணை பிரியாத தோழிகள்.
அவர்கள் இருவரும், ஒரு காட்டில் இருந்த, தாமரைக்குளத்திற்கு நீராட செல்வது வழக்கம். அது ஆபத்து என்று சொல்லியும், அப்பெண்கள் கேட்கவில்லை. அதனால், அவர்கள் பாதுகாப்பிற்காக, வீரர்களை அனுப்புவார் அரசர்.
கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்பார்களே… அதுபோல, ஒரு நாள், வழக்கம் போல் பெற்றோர் சொல்லை மீறி, வனாந்தரத்திற்கு வந்து, குளத்தில் குளித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, காலகேது என்ற அரக்கன் அப்பெண்கள் இருவரையும், தூக்கி சென்று, சிறையில் அடைத்து விட்டான்.
அரக்கனுக்கு, அரச குமாரியான ஏகாவலி மீது ஆசை ஏற்பட்டு, திருமணம் செய்ய விரும்பி, அவளை தொந்தரவு செய்தான். யசோவதி, ஒரு சித்த யோகியிடம், அம்பிகையின் மஹாமந்திரத்தை, மூலத்தியானத்தோடு உபதேசம் பெற்றவள்.
அதனால், அம்பிகையின் மந்திரத்தை பக்திப் பூர்வமாக உச்சரித்து, ‘தாயே… எங்களைக் காப்பாற்று…’ என, வேண்டினாள்.
யசோவதியின் கனவில் அம்பிகை காட்சி தந்து, ‘யசோவதி, துயரப்படாதே… நீ கங்கைக் கரைக்குப் போ. அங்கே லட்சுமி தேவியின் மகனான ஏகவீரன் வருவான். தலை சிறந்த வீரனான அவன், தத்தாத்திரேயரிடம் மஹாமந்திரத்தை உபதேசம் பெற்றவன். அவன் உங்களை இந்த சிறையிலிருந்து விடுவிப்பான். ஏகாவலி அவனையே கணவனாக ஏற்கட்டும்…’ என்றாள்.
கனவு கலைந்தது. அம்பிகையின் அருளால், அவர் கூறிய படியே செய்தாள் யசோவதி. அரக்கனைக் கொன்று, அவர்களை விடுதலை செய்தான் ஏகவீரன். அவனுக்கும், ஏகாவலிக்கும் திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு கிருதவீர்யன் என்று பெயர் சூட்டினர். இந்த கிருதவீர்யன் மகன்தான், கார்த்தவீர்யார்ஜுனன். பரசுராமரால் கொல்லப்பட்ட கார்த்தவீர்யன் இவன் தான்.
ராமாவதாரத்திற்கு முன் நிகழ்ந்த, பரசுராம அவதார காலத்திற்கு முன்பே, அரக்கன் ஒருவன், பெண்களைப் பலவந்தமாகத் தூக்கிப் போயிருக்கிறான் என்றால்… அரக்க குணம் கொண்டவர்கள் எக்காலத்திலும் உண்டு; அது, இக்காலத்தில் நிரம்ப உண்டு என்பதை பெண்கள் புரிந்து, எப்போதும், ஆண்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வோடு பழக வேண்டும். அது அவர்களுக்கும், அவர்களைப் பெற்றவர்களுக்கும் நல்லது!