மேக்கப் இல்லாமல் பார்ட்டியா!

mekkab illamal barttiya!

எதற்கெடுத்தாலும் பார்ட்டி பண்ணுவதுதான் இளசுகள் மத்தியில் ஃபேஷன். அவர்கள் உலகத்தில் தினம் தினம் பார்ட்டிதான்! பிறந்த நாளுக்கு பார்ட்டி… பிரமோஷன் கிடைத்தால் பார்ட்டி! காரணமிருந்தாலும் பார்ட்டி… காரணமே இல்லாவிட்டாலும் பார்ட்டி! நியூ இயர் என்கிற பிரமாண்ட கொண்டாட்டம் காத்திருக்கும் போது, பார்ட்டிக்கு அதைவிட சிறப்பான காரணம் வேறு வேண்டுமா என்ன? புத்தாண்டு பார்ட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிற வேளையில், பார்ட்டி மேக்கப் பற்றிப் பேசுவோமா? ”தினசரி என்ன லுக்ல இருக்கோ மோ, அப்படியே பார்ட்டிக்கு போயிட முடியாது. தலை முதல் கால் வரைக்கும், பார்ட்டிக்கு தயாராகிற கெட்டப்பே வேற…. அப்ப தான் கூட்டத்துல எல்லார் பார்வையும் உங்க பக்கம் திரும்பும். ஆனா, நிறைய பேருக்கு பார்ட்டி கலாசாரம் தெரியறதில்லை. பொருந்தாத

ஹேர் ஸ்டைல், டிரெஸ், மேக்கப்னு தப்பு பண்றாங்க…” என்கிறார் அழகுக் கலை நிபுணர் மேனகா. பார்ட்டிக்கு போகும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் மேனகா. ஹேர் ஸ்டைல் பார்ட்டின்னா கொண்டை போடற பழக்கம் இப்ப இல்லை. முதல்ல நம்ம முகத்துக்கு எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் பொருந்தும்னு பார்க்கணும். பார்ட்டிக்கு போறப்ப, முன் பக்க முடி கலையாம இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். வெட் கர்ள்ஸும், ப்ளோ ட்ரையும் இப்ப பிரபலம். ரொம்ப ஸ்பெஷலான பார்ட்டிக்கு தற்காலிக ஹேர் கலர் பண்ணிக்கலாம். இது ஒரு நாள் மட்டும் இருக்கும். மேக்கப் மிதமான காம்பேக்ட் பவுடர், ஐ லைனர், காஜல், லிப்ஸ்டிக் அவசியம். இடத்துக்கும், பார்ட்டிக்கும் ஏத்தபடி, இதையே இன்னும் அதிகமா போட்டுக்கலாம். டிரெடிஷனல் பார்ட்டின்னா பொட்டு வச்சுக்கலாம். வெஸ்டர்ன் பார்ட்டிக்கு தேவையில்லை. நகங்களை அழகா ஷேப் பண்ணி, மேட்ச்சிங் நெயில் பாலீஷ் போடணும். அது பிடிக்காதவங்க, நகங்களை சின்னதா வெட்டி, நகங்களோட நிறத்துலயே நெயில் பாலீஷ் போட்டுக்கலாம். உடை சேலை கட்டறவங்களா இருந்தா, சேலையை மட்டுமில்லாம, உள் பாவாடையையும் இஸ்திரி செய்துதான் கட்டணும். மெல்லிசான மெட்டீரியல்ல, ஃபிஷ் கட் உள் பாவாடைகள், சேலை கட்டறவங்களோட உடம்பை அழகான ஷேப்ல காட்டும். குண்டானவங்களுக்கு மெல்லிசான, சாஃப்ட் சில்க் மற்றும் காட்டன் புடவைகள் அழகா இருக்கும். சேலையே கட்டத் தெரியாது, ஆனா, பார்ட்டிக்கு சேலைதான் கட்டியாகணும்னு நினைக்கிறவங்க, இப்ப பிரபலமா இருக்கிற ரெடிமேட் புடவைகளைக் கட்டலாம். மடிப்போ, பட்டையோ வைக்க வேண்டிய அவசியமில்லாம, அப்படியே உடுத்திக்கிற சேலை அது. சேலை கட்டத் தெரிஞ்சா மட்டும் போதாது. முந்தானையை அழகா முழங்கைல தாங்கிப் பிடிக்கிற ஸ்டைலும் முக்கியம். சல்வார் போடறவங்களா இருந்தா, அனார்கலி மாடலை தேர்ந்தெடுக்கலாம். ‘ஹை நெக்’, பேன்ட் அடில நிறைய சுருக்கம், கண்ணாடி மாதிரி துப்பட்டா… இதுதான் இப்ப ஃபேஷன். துப்பட்டாவை கழுத்தோட ஒட்டி போடணும். அதுக்குக் கீழேதான் நகைகள் தெரியணும். வெஸ்டர்ன் டிரெஸ் போட நினைக்கிறவங்க, கையில்லாததும், இறக்கமான கழுத்து வச்சதையும் தவிர்த்து, நீளமான டாப், அதுக்கேத்த பேன்ட் அல்லது ஸ்கர்ட் அணியலாம். நகைகள் பெரிய மோதிரம் போடறது இப்ப ரொம்பப் பிரபலம். ஒரு கைல வாட்ச், இன்னொரு கைல வளையல் போடலாம். ரெண்டு கைகளுக்கும் வளையல் போடறது ஹோம்லியான தோற்றத்தைத் தரும். லென்ஸ் இன்னிக்கு பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் அழகுக்காக லென்ஸ் போடறாங்க. கலர் லென்சுகள் கிடைக்குது. அதைப் போட்டதும், கண்கள்ல உள்ள களைப்பு மாறி, உங்க முகமே பிரகாசமா மாறும். நீலம், கிரே, பிரவுன் மாதிரி கலர்கள் இப்ப லேட்டஸ்ட்! செருப்பு லேசா ஹீல்ஸ் வச்ச செருப்புகள், ஒருத்தரோட தோற்றத்தையே மாத்திக் காட்டும். பார்த்துப் பார்த்து டிரெஸ்சையும் மேக்கப்பையும் பண்ணிட்டு, செருப்பு விஷயத்துல அலட்சியம் கூடாது. பார்ட்டிக்குனு தனியா சில செட் ஸ்பெஷல் செருப்புகள் வச்சிருக்கிறது அவசியம். நீளமான கை வச்ச டிரெஸ், டார்க் நிற நெயில் பாலீஷ், பளபளா கல் வச்ச நகைகள், மாட்டல், பெரிய பொட்டு… இதெல்லாம் பார்ட்டிக்கு வேண்டவே வேண்டாம் என்கிற மேனகா, உடையிலிருந்து நடத்தை வரை தன்னை அழகாக, மாடர்னாக காட்டிக் கொள்ள நினைக்கிற பெண்களுக்கு 3 நாள் சிறப்புப் பயிற்சி வகுப்பும் எடுக்கிறார். பார்ட்டிக்கு தயாராவதற்கான டிப்ஸும் உண்டு அதில்!

%d bloggers like this: