Daily Archives: ஜூன் 8th, 2014

எக்ஸெல் டிப்ஸ்-காப்பி – பேஸ்ட்:

காப்பி – பேஸ்ட்: எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில் உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் தகவல்கள்.
வாட்ச் விண்டோ: பார்முலாக்களைப் பயன்படுத்துவது எக்ஸெல் ஸ்ப்ரெட் ஷீட்டில் ஓர் அத்தியாவசிய செயல்பாடாகும். பார்முலாக்கள் அதிகமாகும்போது எந்த பார்முலா, எந்த செல்களையெல்லாம் இயக்கும் என்பதனைப் பல வேளை களில் நம் நினைவில் வைத்துக் கொள்ள இயலாமல் போய்விடும். சில வேளைகளில் செல்களில் மதிப்புகளைத் தருகையில் இந்த பார்முலாக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் கணக்குகளை மேற்கொண்டு முடிவுகளை செல்களில்

Continue reading →

மிஸ்டர் கழுகு: ”முன்கூட்டியே சட்டசபைத் தேர்தல்!”

‘கத்திரி முடிஞ்சாலும் அடிக்கிற அனல் இன்னும் குறையலையே…’ என்றபடி உள்ளே வந்தார் கழுகார்.

”வெயிலை மட்டும் சொல்லவில்லை; தே.மு.தி.க அனலையும் சேர்த்துதான் சொல்கிறேன்!” என்று லிங்க் பிடித்தபடி தொடங்கினார். ”தேர்தல் தோல்விக்குப் பிறகு கடந்த 4-ம் தேதி தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளர்களும் எம்.பி-க்கு போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். நிறைய பேசலாம் என்ற நினைப்புடன் வந்திருந்தார்கள் நிர்வாகிகள். ஆனால் அது நடக்கவில்லை. மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கு மௌன அஞ்சலி செலுத்தியதும், யாரையும் பேச விடாமல் மைக்கை வாங்கினார் விஜயகாந்த். ‘நடந்து முடிஞ்ச எலெக்ஷன்ல மாவட்டச் செயலாளர்கள் யாரும் தேர்தல் வேலையே பார்க்கலை. பல பேரு அ.தி.மு.க-காரங்க கொடுத்த காசுக்கு விலை போயிட்டீங்க. அது யார் யாருன்னு நான் இப்போ சொன்னா உங்களுக்குத்தான் அசிங்கம். நான் யாரைச் சொல்றேன்னு அவங்கவங்க மனசாட்சிக்குத் தெரியும். நீங்க யாரும் மக்களை சந்திக்கிறதே இல்லை. எல்லோரும் செல்போன் அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க. எங்கேயும் போகாமல் என்ன நடக்குதுன்னு போன்ல கேட்டா போதும்னு நினைக்கிறீங்க’ என்று கர்ஜித்திருக்கிறார்.”

Continue reading →

உணவு யுத்தம்!-12

p30

வாழைப்பழ யுத்தம்!

வாழைப்பழம் என்றதும் நம் நினைவுக்கு வரக்கூடிய இன்னொரு விஷயம் வாழைப்பழ குடியரசு என்ற பிரயோகம். அதாவது, பனானா ரிபப்ளிக் எனப்படும் இது எதைக் குறிக்கிறது? பெயரளவுக்கு மட்டுமே குடியரசாக இருக்கும் பொம்மை அரசைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல்லுக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் வாழைப்பழ யுத்தத்தின் கதை.

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் உள்ள நாடுகளின் வாழைப்பழ சந்தையை ஏகபோகமாக தங்கள் கைவசம் வைத்துக்கொள்வதற்காக அமெரிக்கா உருவாக்கிவைத்த பொம்மை

Continue reading →

பூமியின் நிலத்தோற்றம் மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறார்களே… அது ஏன்? எப்படி?

boomiyin nilathorram marikkonde irukkirathu enkirarkale... athu

பூமியின் நிலத்தோற்றம் மாற்றமடைய சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற செயற்கை காரணங்கள் பல உண்டு. அவை மனிதனாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றை தாண்டி பூமியின் நிலத்தோற்றத்தை பெரிதும் மாற்றியமைப்பது நதிகளே. தேவைக்கு அதிகமான தண்ணீரை நிலத்திலிருந்து கடலுக்கு கொண்டு செல்வது மட்டுமா நதியின் வேலை? ஒரு

Continue reading →

கட்டங்கள் அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க!

வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக் ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து

Continue reading →