எக்ஸெல் டிப்ஸ்-காப்பி – பேஸ்ட்:

காப்பி – பேஸ்ட்: எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில் உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் தகவல்கள்.
வாட்ச் விண்டோ: பார்முலாக்களைப் பயன்படுத்துவது எக்ஸெல் ஸ்ப்ரெட் ஷீட்டில் ஓர் அத்தியாவசிய செயல்பாடாகும். பார்முலாக்கள் அதிகமாகும்போது எந்த பார்முலா, எந்த செல்களையெல்லாம் இயக்கும் என்பதனைப் பல வேளை களில் நம் நினைவில் வைத்துக் கொள்ள இயலாமல் போய்விடும். சில வேளைகளில் செல்களில் மதிப்புகளைத் தருகையில் இந்த பார்முலாக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் கணக்குகளை மேற்கொண்டு முடிவுகளை செல்களில்

அமைக்கும்படி ஏற்பாடு செய்திருப்போம். இதனால் புதிய பார்முலாக்கள் அமைக்கையில் அவை தொடர்பு டைய செல்களில் சரியாகச் செயலாற்றி விடைகளைத் தருகிறதா என்பதைக் கண் காணிக்க பல இடங்களில் உள்ள செல்களுக்குச் சென்று பார்க்க வேண்டியதிருக்கும். சில நேரங்களில் தவறான செல்களைப் பார்த்து தவறான தகவல்கள் மற்றும் பார்முலாக்களைத் தரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இவற்றைத் தவிர்க்க எக்ஸெல் தொகுப்பு தரும் வசதி தான் எக்ஸெல் வாட்ச் விண்டோ.
அடுத்தடுத்து எக்ஸெல் பார்முலாக்கள் கணக்கிடு வதனைக் கண்காணிக்க நமக்குக் கிடைத்திருக்கும் வசதிதான் வாட்ச் விண்டோ. நாம் செல் களின் மதிப்பை மாற்றும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட செல்களில் என்ன மாறுதல்கள் ஏற்படுகிறது என்று நமக்குக் காட்டும் ஜன்னல் தான் இந்த வாட்ச் விண்டோ. இதனால் நாம் ஒவ்வொரு செல்லுக்கும் தாவிச் சென்று கண்காணிக்கும் வேலை மிச்சமாகிறது. இந்த வாட்ச் விண்டோவினை அமைத்திட முதலில் Tools மெனு சென்று அதில் துணை மெனுவான Formula Auditing என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் உள்ள Show Watch Window என்பதனைக் கிளிக் செய்திட வேண்டும். Formula Auditing விண்டோவில் கண் கண்ணாடி படத்துடன் உள்ள சிறிய பிரிவுதான் Watch Window. இதனை கிளிக் செய்தவுடன் நமக்கு வாட்ச் விண்டோ கிடைக்கும். இப்போது எந்த செல்லில் உள்ள பார்முலா செயல்படுவதனைக் கவனிக்க விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுத்து Add Watch என்னும் பட்டனை அழுத்த வேண்டும். இப்போது வாட்ச் விண்டோவில் பார்முலா சம்பந்தப்பட்ட செல்கள் அவற்றின் மதிப்பு, கணக்கிடப்பட்ட விடை ஆகியவை தெரியும். இதே போல எந்த பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க விரும்புகிறீர்களோ அவற்றை வரிசையாகத் தேர்ந்தெடுத்து Add பட்டனை அழுத்தினால் அவை அனைத்தும் Watch விண்டோவில் சேர்க்கப்படும். இந்த விண்டோனை மானிட்டரின் எந்த மூலையிலும் வைத்துக் கொள்ளலாம். இனி செல்களில் மதிப்புகளை மாற்றும் போ தெல்லாம் இந்த பார்முலாக்கள் மூலம் எந்த செல்களில் மதிப்புகள் மாறுகின்றன என்று இந்த ஒரே விண்டோவில் கண்காணிக்கலாம். ஏதாவது ஒரு பார்முலா செயல்படுவதனைக் கண்காணிக்க விரும்பவில்லை என்றால் அதனை மட்டும் தேர்ந்தெடுத்து Delete Watch button ஐ அழுத்தி நீக்கிவிட்டு மற்ற பார்முலாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம். ஒவ்வொரு செல்லுக்காய் மவுஸ் மூலம் ஓடி ஓடிப் பார்ப்பதனைத் தவிர்த்து ஒரே ஜன்னலில் அனைத்தையும் கண் காணிப்பது எவ்வளவு எளிது பாருங்கள்.
பேஸ்ட் பட்டன்: எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற் கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்றும் இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட்டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டிருக்கும். உங்கள் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.

%d bloggers like this: