சிறிய அரசு- சிறந்த நிர்வாகம் தரும் புது அரசு; பார்லி.,கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி உரை

புதுடில்லி: இன்று நடக்கும் பார்லி., இரு அவைகளின் கூட்டுகுழு கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். இந்த உரையில், மோடி தலைமையிலான புதிய அரசு செயல்படுத்தவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பொருளாதார வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, கறுப்புபணம் மீட்பு, கட்டமைப்பு , வேலைவாய்ப்பு, வளர்ச்சி பணிகள் , கிராமப்புற முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும்,புதிய அரசு ஏழைகளுக்கான அரசாக இருக்கும் என்றும், என ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உரையின்போது குறிப்பிட்டார். முன்னதாக ஜனாதிபதி பிரணாப் குதிரைப்படை வீரர்கள் புடைசூழ அழைத்து வந்தனர். பார்லி.,யில் பிரதமர் மோடி பிரணாப்முகர்ஜியை வரவேற்றார்.
இந்த கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசியதாவது:

ஜனநாயகத்தின் தேர்தல் மூலம் நிலையான அரசு வேண்டும் என மக்கள் ஓட்டளித்துள்ளனர். இந்தியாவில் தற்போது வலுவான ஆட்சி தேவைப்படுகிறது என்பதை உணர்த்தியுள்ளனர். புதிய அரசுக்கும் , சபாநாயகருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எனது அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். ஊழல்கள் என்பதற்கு இந்த அரசில் இடமில்லாமல் இருக்க வேண்டும். புதிய அரசு மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும், எண்ணத்தையும் நிறைவேற்றும். வறுமையை ஒழிக்க நமது அரசு பாடுபடும். அனைவரது உரிமையும் பாதுகாக்கும் வகையில் இந்த அரசு செயல்படும். உணவுப்பற்றாக்குறை தீர்க்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். வேளாண்துறையில் அதிக முதலீடு செய்யப்படும். அனைவருக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
அனைவருக்கும் உணவு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படும். பொது விநியோகத்தில் சீரமைப்பு கொண்டு வரப்படும். பஞ்சாயத்ராஜ் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். கிராமப்புற குடிநீர் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். கிராமம், நகர்ப்புறம் என்ற பிரிவினை நீக்கப்படும். உணவுப்பபணவீக்கத்தை கட்டுப்படுத்துவதேச அரசின் முதல் பணியாக இருக்கும்.
புதிய சுகாதார கொள்கை : புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும். அனைத்து பள்ளிகளும் இணையதளத்தில் இணைக்கப்படும். சிறிய அரசு , சிறந்த நிர்வாகம் ( மினிமம் கவர்மென்ட், மேக்ஸிமம் கவர்னன்ஸ் ) என்ற கொள்கையுடன் செயல்படும். விளையாட்டு துறை மேம்படுத்தப்டும். பயிர் மற்றும் விசாயம் காத்திட புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். புதிய சுகாதார கொள்கை உருவாக்கப்படும், யோகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இளைஞர்கள் திறம் முழுமையாக பயன்படுத்தப்படும். தேசிய விளையாட்டு ஆணையம் அமைத்து கிராமப்புற மாணவர்கள் தரம் உயர்த்தப்படும். சிறுபான்மையினருக்கு சம அதிகாரம், அனைவரும் இணையாக நடத்தப்படுவர். இ கவர்னன்ஸ் முழு அளவில் செயல்படுத்தப்படும். நீர் பாதுகாப்பு அவசியமாக இந்த அரசு கருதுகிறது. நதி நீர் இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
பொது இடங்களில் ஒய்-பை : கறுப்புப்பணம் மீட்டு கொண்டு வர புதிய சிறப்பு குழு அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பொது இடங்களில் ஒய்-பை என்ற நெட் தொடர்பு உருவாக்கப்படும். இந்தியா முழுவதும் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். அணு உலை மற்றும் அணு சக்தி பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். வைர நாற்கர திட்டம் மூலம் அதிவேக ரயில் சேவை கொண்டு வரப்படும். வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாக நேரடி அன்னிய முதலீட்டுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
நரேந்திர மோடி தலைமையில் அமைந்துள்ள புதிய அரசிடம், மக்களுக்கும், தொழில் துறையினருக்கும் ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன.இந்நிலையில், 16வது லோக்சபாவின் முதல் கூட்டம், சமீபத்தில் துவங்கியது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள் பதவியேற்றனர். சபாநாயகராக, பா.ஜ.,வைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டார்.
முதல் முறையாக, ராஜ்யசபா மற்றும் லோக்சபா இணைந்த, பார்லிமென்ட் கூட்டு கூட்டம், இன்று நடந்தது. பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில், ஜனாதிபதி பேசினார்.
பயங்கரவாதம் ஒழிப்பு :
*மதரசாக்கள் நவீனப்படுத்தப்படும்,
*விவசாயிகள் தற்கொலை தடுக்கும் வகையில் அவர்களை காக்கும் திட்டம் கொண்டு வரப்படும்.
*கங்கை தூய்மைப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்படும்.
*பயங்கரவாதம் பொறுத்து கொள்ள முடியாது. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்படும்.
*பார்லி.,யில் 33 சத இட ஒதுக்கீடு
* ராணுவத்தில் ஒன் ரேங், ஒன் பென்சன் *
*பாதுகாப்பு துறையில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.
* அனைத்து மாநிலத்திலும் தேசிய தரத்தில் ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்,.
* பெண்களுக்கு எதிரான வன்முறை, குற்றச்செயல்கள் தடுக்க புதிய சட்டம்,
* பெண்களுக்கு பார்லி.,யில் 33 சத இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும். சுற்றுச்சூழல் துறையில் வெளிப்படையான அணுகுமுறை,
*ஏழ்மை ஒழிப்பில் இருக்கும் சவால்களை எதிர்கொள்வது,
* நாட்டில் உள்ள கோர்ட்டுகள் நவீனப்படுத்தப்படும்.
சீனா- ஜப்பான் உறவு : * சீனா- ஜப்பான் இடையிலான உறவு மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* எல்லை பகுதியில் ஊடுருவல் தடுப்பது முக்கியத்துவம் வழங்கப்படும்.
* மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வர நடவடிக்கை ,
* சோலார் மின் உற்பத்தி திட்டம் விரிவாக்கப்படும்.
*ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தேசிய நினைவு சின்னங்கள் * வரவிருக்கும் பார்லி., கூட்டம் பயனுள்ளதாக அமையும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு பல சிறப்பு அம்சங்கள் ஜனாதிபதியின் பேச்சில் இடம்பெற்றிருந்தன.

%d bloggers like this: