போன் மூலம் அறை விளக்கைக் கட்டுப்படுத்தலாம்
ப
டுக்கையில் விழுந்தவுடன் தான், அறை விளக்கை அணைத்திருக்கலாமோ என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரும். எழுந்து சென்று ஸ்விட்ச் போர்டில் அதனை அணைப்பது சோம்பேறித்தனமாக இருக்கலாம். இவர்களுக் காகவே, ஆண்ட்ராய்ட் சாதனங்கள் மூலம், கட்டுப்படுத்தக் கூடிய ஸ்மார்ட் பல்ப் ஒன்றை, சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு
புகைக்கு சாம்பலாகாதீர்; புகைப்பதையே கைவிடுங்கள்!
சிகரெட், பீடி பிடித்தால் டென்ஷன் குறையும் என நினைப்பது தவறு. குடும்பத்தில், தந்தை புகை பிடிப்பவராக இருந்தால் மனைவி, குழந்தைகளுக்கும் புற்றுநோய் பாதிப்பு வரும். புகைக்கு சாம்பலாவதை விட, புகைப்பதை கைவிடுவதே மேல்
1. புகை பிடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. இதனால் எந்த மாதிரியான பாதிப்பு வரும்?
புகை பிடித்தால், ‘ஹார்ட் அட்டாக்’ வரும் என்று எல்லாருக்கும் தெரிகிறது. ஆனால்,
பாரம்பரியம் பயன்படட்டும்!
சீயக்காய் தேய்த்துக் குளிப்பது, விளக்கெண்ணெயைக் கண்களில் விட்டுக் கொண்டு தூங்குவது, மஞ்சள் பூசுவது போன்ற பாரம்பரியமான பல அழகு-ஆரோக்கியப் பழக்கங்கள் இன்று இல்லை. காணாமல் போன அவற்றுடன் சேர்ந்து நாம் தொலைத்தது நம் அழகையும் இளமையையும்தான். அந்தக் காலத்தில் பின்பற்றிய எந்த விஷயமுமே அர்த்தமற்றவையல்ல என்பதைக் காலம் கடந்த பிறகுதான் உணர்கிறோம். ஆனாலும், இதுவும் தாமதமில்லை… பாரம்பரிய அழகுக் குறிப்புகளைப் பின்பற்றும் உங்கள் முயற்சியை இன்றிலிருந்தே தொடங்குங்கள்! எல்லோருக்கும் பயன்படக்கூடிய அத்தகைய அழகுக் குறிப்புகள் சிலவற்றை விளக்குகிறார் அழகியல் ஆலோசகர் ராஜம் முரளி. அந்தக் காலத்தில் காலையில் எழுந்ததுமே, கொல்லைப் பக்கத்துக்குப் போய், அங்குள்ள புல் தரையில் கால்களை நன்கு தேய்த்துக் கழுவுவார்கள். அந்தப் புல்லின் சாறு பட்டால், கால்கள் சுத்தமாவதுடன், வெடிப்புகள் வராமல் தடுக்கும். இன்றோ கால் கழுவுகிற பழக்கமே இல்லை. அதனால்தான் சிறுவயதிலேயே பாதங்கள் வறண்டு, வெடித்துக் காணப்படுகின்றன. உங்கள் வீட்டுக் குளியலறையில் கரகரப்பான கல்
உலகின் ‘கிக்’ திருவிழா!-ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது
உலகம் முழுக்க 100 கோடி ‘வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத ‘வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே…
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது
பணம் கொட்டும் தொழில்கள்- உடனடி சப்பாத்தி!
உணவுப் பொருட்கள் தயாரிப்பு எப்போதுமே லாபகரமான தொழில். குறிப்பாக, உடனடி உணவுகளுக்கான சந்தை அதிகரித்து வருவதால், வாய்ப்புகளைப் பயன்படுத்தி உணவுத் துறை சார்ந்த தொழிலை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிற தொழில், உடனடி சப்பாத்தி தயாரிப்பு.
நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் சப்பாத்தி இடம் பெற்றுவிட்டது. உடல்நலம் சார்ந்து மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள் என்பதால், மார்க்கெட்டிங் செய்வதில் பெரிய சிரமங்கள் கிடையாது. நினைத்த நேரத்தில் தயார் செய்து சாப்பிட முடியும்; இதனால் நேரமும் வேலையும் மிச்சம் என்பதால், இதற்கு நல்ல வரவேற்பும் இருக்கும்.
தவிர, நீங்கள் வசிக்கும் ஏரியாவில் இருக்கும் ஹோட்டல்கள், ஹாஸ்டல்களை குறிவைத்து இறங்கினாலே போதும் நல்ல வருமானம் பார்க்கலாம். உணவு பொருட்களைப் பொறுத்தவரை, தரமாகவும், சுவையாகவும் கொடுத்தால் எந்த ஏரியாவிலும் ஜோராக விற்கலாம்!
பாராக்களை ஒரே பக்கத்தில் அமைக்க
சில குறிப்பிட்ட வகை டாகுமெண்ட்களில் அமைக்கப்படும் சில பாராக்கள் ஒரே பக்கத்தில் அமைய விரும்புவோம். சட்ட விதிமுறைகள் சார்ந்து தயாரிக்கப்படும் ஆவணங்கள், சில வர்த்தக ஒப்பந்த கடிதங்கள், வரைவு ஆவணங்கள் ஆகியனவற்றை இந்த பிரிவில் இருக்கும். இவற்றில் எப்படி குறிப்பிட்ட பாராக்களை ஒரே பக்கத்தில் அமைப்பது எனப் பார்க்கலாம்.
வேர்ட் 2007ல் அமைக்க:
1. ஒரே பக்கத்தில் அமைக்க வேண்டிய பாரா அல்லது பாராக்களைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே ஒரு பத்தி எனில், அதில் கர்சரை அமைத்தால் போதும்.
2. ரிப்பனில் Home என்பது காட்டப்படட்டும்.
முருகா வருக!-ஜூன் 11 – வைகாசி விசாகம்
வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பிழம்பாய், முருகப்பெருமான் அவதரித்தார். ‘வி’ என்றால், வெற்றி. சாகம் என்றால், ஆடு. ஆடு வாகனத்தை உடையவனாக இருந்து, பின், இந்திரனிடமிருந்து மயிலை வாகனமாகப் பெற்றவர் முருகன். ஒரு சமயம், பத்மாசுரன் உள்ளிட்ட அசுரர்களின் கொடுமைக்கு, தேவர்கள் ஆளாயினர். அவர்கள் சிவனிடம் இதுபற்றி முறையிட, சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு நெருப்பு பொறிகள், சரவணப் பொய்கையில் வளர்ந்து, குழந்தையானது. கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர், அக்குழந்தையை சீராட்டி வளர்த்தனர். அவர்களிடம் வளர்ந்ததால், கார்த்திகேயன் என்று, போற்றப்பட்டார்.
முருகன், ஆறுமுகங்களும், 12 கரங்களும் கொண்டவர். ஒரு முகம், உயிர்களின் ஆணவ இருளை அகற்றி, ஞானச்சுடரை ஏற்றி அருள்கிறது. இரண்டாவது முகம், தன்னை வழிபடும் அடியார்களுக்கு வரத்தை தருகிறது. மூன்றாம் முகம், அந்தணர்கள் செய்யும் யாகங்களை காவல் காக்கிறது. நான்காவது முகம், வாழ்க்கை என்றால் என்ன என்ற, மெய்ஞானத்தை உணர்த்துகிறது. ஐந்தாவது முகம், தீயவர்களை எதிர்த்து போர் புரிகிறது. ஆறாவது முகம், வள்ளி நாயகியிடம் புன்முறுவல் பூக்கிறது.
அவரது, 12 கரங்களில், முதல் கை, தேவர் மற்றும் முனிவர்களைப் பாதுகாக்கிறது. இரண்டாம் கை, முதல் கை செய்யும் பணிக்கு ஒத்தாசை செய்கிறது. மூன்றாம் கை, உலகத்தை தன் கைக்குள் அடக்கி வைக்கும் அங்குசத்தை தாங்கியுள்ளது. நான்காம் கை, ஆசைகளைக் குறைக்கச் சொல்கிறது. ஐந்தாம் கை, நிறைந்த அருளைத் தருகிறது. ஆறாம் கை, வேல் கொண்டு பக்தர்களைப் பாதுகாக்கிறது.
ஏழாம் கை, ‘சரவணபவ’ என்னும் சொல்லுக்குரிய பொருளை வெளிப்படுத்தும் வகையில், மார்பில் உள்ளது. எட்டாம் கை, மார்பில் இருந்து தொங்கும் மாலையைத் தாங்குகிறது. ஒன்பது, பத்தாம் கைகள், யாக பலனை ஏற்கின்றன. 11ம் கை, மழையைத் தருகிறது. 12ம் கை, வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது.
சிவன் வேறு, முருகன் வேறு அல்ல; சிவாம்சமே முருகனாகத் திகழ்கிறது. அதுபோல் பார்வதி தேவியும் முருகனை விட்டு அகலுவதில்லை. முருகன் சூரபத்மனை வெல்ல போருக்கு புறப்பட்ட போது, தாயிடம் ஆசி பெற்றார். பார்வதி தேவி தன் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி, வேலாக தந்தாள். அதனால் தான், சக்திவேல் இல்லாமல், தனித்து முருகன் காட்சி தருவதில்லை. சக்திவேலுடன் கூடிய முருகனே, சூரனை வென்று, வெற்றி வாகை சூடினார். ஆக தாயும், தந்தையும் அவனே! ‘வேல்’ என்றால் வெற்றி. வெற்றி தரும் வேலை வணங்கினால், நம் வாழ்வில் என்றும் வெற்றியே!
வெற்றிவேல் முருகனின் பிறந்த நாளான வைகாசி விசாகத்தன்று, ‘முருகா வருக’ என, வரவேற்போம்; அவன் திருவடியைச் சரணடைவோம்.