ஐ பேடில் எம்.எஸ்.ஆபீஸ்
வெகுநாட்களாக பேசப்பட்டு வந்த ஐபேட் சாதனத்தில் பயன்படுத்தக் கூடிய ஆபீஸ் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. ஐபேட், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனம். அதன் இயக்கமுறைமை, மைக்ரோசாப்ட் பின்பற்றும் விண்டோஸ் இயக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இருப்பினும் தன் ஆபீஸ் தொகுப்பைப் பழகியவர்கள் ஐபேட் டேப்ளட் பி.சி. பயன்படுத்தினால், அவர்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆபீஸ் தொகுப்பினை வழங்கி தன் மேலாண்மையை நிரூபிக்கும் எனப் பல ஆண்டுகளாக (2011 முதல்) எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
மிஸ்டர் கழுகு: மீண்டும் ‘பவர்’ காட்டும் டாக்டர் வெங்கடேஷ்!
மழையில் நனைந்து சிறகுகளைச் சிலிர்த்தபடி வந்து அமர்ந்தார் கழுகார். ”ஊரைச் சொல்லும்… நான் விஷயத்தைச் சொல்றேன்!” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.
”புரியலையே!” என்றோம்.
”தேர்தல் தோல்வி பற்றி பேச பிரேமலதா சொன்ன திட்டப்படி மாவட்டச் செயலாளர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் தனித்தனியாக விஜயகாந்த் சந்திக்கப்போகிறார் என்று கடந்த இதழில் சொல்லியிருந்தேன் அல்லவா? அந்தச் சந்திப்பு தொடங்கிவிட்டது. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பேசினார்கள் என்றுதான் சொல்ல வந்தேன்!”
”சுதீஷ் போட்டியிட்ட சேலம்?”
”சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வந்து அமர்ந்ததும், ‘சேலத்தைப் பற்றி எதுவும் சொல்லத் தேவையே இல்லை. அங்கே என்ன நடந்துச்சுன்னு எனக்கு நல்லாவே தெரியும். நம்ம கூட்டணியில அரசியல் நாகரிகம் தெரியாத கட்சியை
முடிவு உங்கள் கையில்!
உடல் நன்றாக இருக்க வேண்டும் என்றால், மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய சூழ்நிலையில், வேலைக்கு செல்லாத பெண்களுக்கு ஒரு வகை பிரச்னை என்றால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மற்றொரு வகை பிரச்னை. வாழ்க்கையில் பிரச்னைகள் வந்து கொண்டும், போகக் கொண்டும் தான் இருக்கும்.
இதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல், அதிலே மனதை மூழ்கவிட்டால், பின், அதிலிருந்து மீள முடியாது. அதற்கு பதில், பிரச்னைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை சமாளிக்கும் செயல்களில் ஈடுபட்டால், மனம் பலப்படுவதுடன், நம்மால் எதையும் சமாளிக்க முடியும் என்ற, தன்னம்பிக்கையும் ஏற்படும்.
இன்று நிறைய பெண்களுக்கு, தங்கள் மீதான நம்பிக்கை குறைவாக உள்ளது. ஒரு செயலை செய்து முடித்த பின்பும் கூட, அதில் மனதிருப்தி அடையாமல் உள்ளனர். வேலையை செய்யும் முன், மட்டுமல்லாமல், செய்து முடித்தபின்னும், படபடப்பாகவே இருக்கின்றனர். இது கூடாது. ஒரு செயலை செய்யும்போது, அதில், மனதை முழுமையாக செலுத்துவதுடன், அதில், திருப்தி அடைய வேண்டும்.
தடுப்பூசி ரகசியங்கள்
நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்!
உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, இவை உண்டாக்கும் நோய்களுக்கு ஆளாகி, பல ஆபத்துகளைச் சந்தித்திருப்போம். ஆனால், மனித இனத்துக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம், ‘தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படைதான்.
கூடுதல் கடிகாரங்களை அமைக்க
விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டங்களில் இல்லாத சிறப்புகளில் ஒன்று, விண்டோஸ் 7 அல்லது விஸ்டா சிஸ்டத்தில் அமைக்கக் கூடிய கூடுதல் கடிகாரங்கள் ஆகும். வழக்கமாக, ஒரு கடிகாரம் மட்டுமே டாஸ்க் பாரில் காட்டப்படும். உலகம் சுருங்கி, தகவல் தொடர்புகள் அதிகரித்துவரும் இந்நாளில் நாம் மற்ற நாடுகளில் அப்போது உள்ள நேரத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகளைச் சந்திக்கிறோம். இதற்காகவே, அண்மை யில் வந்துள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட, நான்கு வரையிலான, கடிகாரங்களை அமைக்கக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதியினை எப்படி அமைத்துப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
குருவருள் பெருகட்டும்!
குரு பார்க்க கோடி நன்மை’ என்று அறிவோம் சரி! குரு பகவான், தான் இருக்கும் இடங்களைப் பொறுத்து என்னென்ன பலன்களைத் தருவார்? தெரிந்துகொள்வோமா?
லக்னத்தில் குரு: அழகு, அதிர்ஷ்டம், அச்சமின்மை, நீண்டஆயுள், நல்ல குழந்தைகள் அமையும்.
2-ம் இடம்: பேச்சாளர், வசீகரமான முகம், செல்வம், புகழ், கல்வி உடையவர், நல்ல உணவுகளை ரசித்து உண்பவர்.
உணவு யுத்தம்!-13
ருசியில்லாத காய்கறிகள்!
காய்கறிக் கடைக்குச் சென்றிருந்தேன். முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட கடை; பகட்டான கண்ணாடியில் கீரைகளும் காய்கறிகளும் ஒளிர்கின்றன. காய்கறி கடைகள் இப்படியாகும் என நான் கனவிலும் நினைத்தவன் இல்லை.
ரஷ்ய முட்டைகோஸ்களில் இருந்து நாசிக் வெங்காயம் வரை பல்வேறு காய்கறி ரகங்கள். காய்கறிகளின் விலை கண்ணைக் கட்டுகிறது. ஒருவர்கூட பேரம் பேசவில்லை. புழு விழுந்திருக்கிறது என புகார் சொல்லவில்லை.