ஐ பேடில் எம்.எஸ்.ஆபீஸ்

வெகுநாட்களாக பேசப்பட்டு வந்த ஐபேட் சாதனத்தில் பயன்படுத்தக் கூடிய ஆபீஸ் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. ஐபேட், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனம். அதன் இயக்கமுறைமை, மைக்ரோசாப்ட் பின்பற்றும் விண்டோஸ் இயக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இருப்பினும் தன் ஆபீஸ் தொகுப்பைப் பழகியவர்கள் ஐபேட் டேப்ளட் பி.சி. பயன்படுத்தினால், அவர்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆபீஸ் தொகுப்பினை வழங்கி தன் மேலாண்மையை நிரூபிக்கும் எனப் பல ஆண்டுகளாக (2011 முதல்) எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா, பதவியேற்றவுடன், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ஐபேடில் இயங்கக் கூடிய, ஆபீஸ் தொகுப்பு (Word, Excel, PowerPoint) ஆப்பிள் ஸ்டோரிலேயே இலவசமாகக் கிடைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, இது எதிர்பார்க்கப்பட்டாலும், தொடு உணர் திரையில் இயங்கக் கூடிய எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினையே, மைக்ரோசாப்ட் முதலில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது வெளியாகியுள்ளது. இலவசமாக வழங்கப் படுவதெல்லாம் இப்போது "free mium” என அழைக்கப்படுகின்றன. எனவே, இதனை "freemium” ஆபீஸ் என அழைக்கத் தொடங்கி உள்ளனர்.

2 responses

 1. இலவசமாக தரவில்லை. அப்ளிகேஷனை இலவசமாக தரவிரக்கிக்கொண்டாலும் அதனை பயன்படுத்த வருட கட்டணம் ரூபாய் 3000 செலுத்தவேண்டும். செம வேஸ்ட்.

 2. Thanks

  On Thursday, June 12, 2014, “உங்களுக்காக”
  wrote:
  > vayal posted: ” வெகுநாட்களாக பேசப்பட்டு வந்த ஐபேட் சாதனத்தில்
  பயன்படுத்தக் கூடிய ஆபீஸ் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. ஐபேட்,
  ஆப்பிள் நிறுவனத்தின் சாதனம். அதன் இயக்கமுறைமை, மைக்ரோசாப்ட் பின்பற்றும்
  விண்டோஸ் இயக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இருப்பினும்”
  >

%d bloggers like this: