Daily Archives: ஜூன் 13th, 2014

ராங்-கால்(நக்கீரன் 13.6.2014)

Pages from Nakkheeran 13-06-2014 [www.Themagnat.com]-2_Page_1

Continue reading →

குரோம் பிரவுசர் டிப்ஸ்

சில வாரங்களுக்கு முன்னர், குரோம் பிரவுசரில் நீங்கள் எளிதாக உலாவ, பயன்படுத்த, சில குறிப்புகளையும், ஷார்ட் கட் கீகளையும் தந்திருந்தேன். இந்த வாரத்தில் இன்னும் சில குறிப்புகளையும் காணலாம்.
1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச்செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4…) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.
2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.

Continue reading →

பொலிவான முகத்துக்கு எளிதான குறிப்புகள்

முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டு கலந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக, முகப்பருக்கள் மறையும். பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும். முகத்தின் நிறம் மாறும். தக்காளியை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும். முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய வேப்பங்கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்து பூசி

Continue reading →

இன்ஷூரன்ஸ் க்ளைம்: தீர்வு சொல்லும் தீர்ப்பாயம்!

இன்ஷூரன்ஸ்  பாலிசி எடுத்திருப்பவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கிறது. குறிப்பாக, க்ளைம் சார்ந்த பிரச்னைகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  க்ளைம் சார்ந்த பிரச்னைகளில் சிக்காமலிருக்க என்ன வழி என்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த நுகர்வோர் குறைதீர்க்கும் அமைப்பான ‘கான்சர்ட் டிரஸ்ட்’ (Concert Trust)  சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இதில் நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து ஓய்வுபெற்று, இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேனாக (தீர்ப்பாயம்) இருந்த வி.ராமசாமி, பாலிசி தாரர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தார். இன்ஷூரன்ஸில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன, எதற்காக இன்ஷூரன்ஸ் தீர்ப்பாயத்தை அணுகுகிறார்கள் என்று கேட்டோம்.

தகவல்களை மறைக்காதீர்கள்!

Continue reading →

இந்த வார டவுண்லோட் கண்ட்ரோல் + சி

நாம் காப்பி செய்திடும் டெக்ஸ்ட் மற்றும் படங்கள் அனைத்தும் கிளிப் போர்டில் தான் சேவ் செய்யப்படுகின்றன. அவ்வப்போது காப்பி செய்துவிட்டு, அடுத்த வேலைக்கு நகன்றுவிடுவோம். எப்போதாவது, நாம் எவற்றை எல்லாம் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்றோம் என நீங்கள் எண்ணியதுண்டா? நேற்று காப்பி செய்தது இன்றைக்கும் வேண்டுமே என எண்ணி, அதனை எப்படி பெறுவது என்று தேடியதுண்டா? இதற்கெனவே, கண்ட்ரோல் + சி (ControlC!) என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் நமக்கு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், நம் பிரவுசரில், நாம் கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்றதை எல்லாம் பெற்று பார்க்கலாம்.
இந்த புரோகிராம் http://controlc.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில்

Continue reading →