இந்த வார டவுண்லோட் கண்ட்ரோல் + சி

நாம் காப்பி செய்திடும் டெக்ஸ்ட் மற்றும் படங்கள் அனைத்தும் கிளிப் போர்டில் தான் சேவ் செய்யப்படுகின்றன. அவ்வப்போது காப்பி செய்துவிட்டு, அடுத்த வேலைக்கு நகன்றுவிடுவோம். எப்போதாவது, நாம் எவற்றை எல்லாம் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்றோம் என நீங்கள் எண்ணியதுண்டா? நேற்று காப்பி செய்தது இன்றைக்கும் வேண்டுமே என எண்ணி, அதனை எப்படி பெறுவது என்று தேடியதுண்டா? இதற்கெனவே, கண்ட்ரோல் + சி (ControlC!) என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் நமக்கு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், நம் பிரவுசரில், நாம் கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்றதை எல்லாம் பெற்று பார்க்கலாம்.
இந்த புரோகிராம் http://controlc.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில்

கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இது நம்மிடம் கேட்கும் முதல் தேவை ஒரு பாஸ்வேர்ட் தான். இதன் மூலம் நம் டேட்டாவினைச் சுருக்கி வைத்துக் கொண்டு பின்னர் கேட்கும் போது தரும்.
எனவே, ஏதேனும் நினைவில் வைத்துக் கொண்டு பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுத்து, அதனையே இந்த புரோகிராமிற்கான பாஸ்வேர்டாக அமைத்துவிடவும். பின்னர், இந்த புரோகிராமினைத் திறக்கவும். இது மாறா நிலையில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, அதாவது நீங்கள் செட் செய்த பிரவுசரில் திறக்கப்படும். உடன், நீங்கள் செட் செய்த பாஸ்வேர்ட் கேட்கப்படும். அதனைக் கொடுத்தவுடன், பிரவுசரில், நீங்கள் கிளிப் போர்டுக்கு அனுப்பிய டேட்டாவினைக் காணலாம். நீங்கள் எதனையும் காப்பி செய்திடவில்லை என்றால், காலியாக இடம் காட்டப்படும். நான், இந்த புரோகிராமினை நிறுவிய பின்னர், சோதனைக்காக சிலவற்றை காப்பி செய்து, பின்னர் எணி பட்டன் அழுத்திய போது அவை காட்டப்பட்டன.
இந்தப் பக்கத்தின் மேலாக உள்ள Advanced என்ற பட்டனைக் கிளிக் செய்தால், மற்ற செட்டிங்ஸ் பக்கத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு Advanced Search Settings, Settings, and Blacklist போன்ற டேப்களைப் பார்க்கலாம். Advanced Search Settings பகுதியில், நீங்கள் எந்த வகையில் தேடலை மேற்கொள்கிறீர்கள் என்பதனை வரையறை செய்திடலாம். தொடர்ந்து, சார்ந்த பல அமைப்புகளையும் உருவாக்கலாம். Admin Theme என்ற பிரிவில் கிடைக்கும் கீழ் விரி பட்டியல் பெட்டியில், பத்துவகையான கருத்துப் பொருட்கள், உங்கள் தேடலுக்கென கிடைக்கிறது. அத்துடன் உங்களுக்குக் காட்டப்படுபவை எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதனையும் இங்கு விருப்பமாக அமைக்கலாம்.
டெக்ஸ்ட், பைல் மற்றும் படங்கள், கிளிப் போர்டுக்குச் சென்ற பின்னர், எத்தனை நாட்கள் வைக்கப்பட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். மாறா நிலையில் இது இரு வார காலமாக அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல விருப்பங்களையும் இதில் அமைக்கலாம். விருப்பமுள்ளவர்கள் உடனே செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://controlc.com/

%d bloggers like this: