கிளக்கோமா பார்வையை பறிக்கும் கண் அழுத்தம்!

ஐம்புலன்களில் முக்கியமானது கண். கண்ணை இமை காப்பது போல என்று சொல்வோம்… கண்ணின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சொல் இது. அந்த அளவுக்குப் பொத்திப் பாதுகாக்க வேண்டிய கண்ணில் பிரச்னை என்றால், உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியம். சாதாரண கண் நோய் அல்லது நாள்பட்ட கண் நோயைத்தான் பொதுவாக அனைவரும் அறிந்திருப்போம்.

அறிகுறிகள் இன்றி கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையை மங்கச் செய்து, பார்வையை முழுமையாகப் பறிக்கும் ஒருவகை நோய் தான் ‘கிளக்கோமா’ (glaucoma) என்னும் ‘கண் அழுத்த நோய்’. தற்போது, பரவலாகக் கண்டறியப்பட்டு வரும் இந்த நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைமுறைகள் .

 

அழுத்தம் இருக்கும். நம் கண்களின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையில் இருந்து படிப்படியாக அதிகரித்து, பார்வை நரம்பினால் தாங்கக்கூடிய அளவைத் தாண்டும்போது, ‘கிளக்கோமா’ என்னும் பிரச்னை ஏற்படுகிறது.

இந்த அழுத்தத்தை ‘கண் அழுத்தம்’ (Intraocular pressure) என்பர். சாதாரணமாக இந்த அழுத்தத்தின் அளவு 15முதல் 20 mm/Hg இருக்க வேண்டும். இதன் அளவு அதிகரிக்கும்போதும் ‘கிளக்கோமா’ ஏற்படும்.

கண் அழுத்த நோயை, ‘திறந்த கோண கண் அழுத்த நோய்’ என்றும், ‘மூடிய கோண கண் அழுத்த நோய்’ என்றும், இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

மூடிய கோண கண் அழுத்த நோய் (closed angle glaucoma ) சட்டென்று உருவாகக்கூடியது. மிகுந்த வலியை உண்டாக்கி, உடனடியாக பார்வை இழப்பை ஏற்படுத்திவிடும். ஆனால், இதில் உண்டாகும் அசௌகரியத்தினால், நிரந்தர சேதம் உண்டாகும் முன்னரே, நோயாளிகள் மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். திறந்த கோண (open angle Glaucoma நாள்பட்ட கண் அழுத்த நோய், மெள்ள முன்னேறும் தன்மை கொண்டது. இதில் நோய் மிகவும் முதிர்ந்த நிலையை அடையும் வரையிலும் நோயாளிகள் தாம் பார்வையிழப்பை அடைந்திருக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கக்கூடும். சில சமயங்களில் தாங்க முடியாத அளவில் வலி ஏற்படும்.

இதில், முதல் வகை கிளக்கோமா மற்றும் இரண்டாம் வகை கிளக்கோமா என 2 வகைகள் உள்ளன. முதல் வகை, மரபு வழி சார்ந்தது. பிறவியிலேயே இந்தப் பாதிப்பு இருக்கும். எனவே, இவற்றை முன்கூட்டியே கண்டறிந்து இந்தப் பாதிப்பை நீக்க வேண்டும்.

இரண்டாம் வகை கிளக்கோமா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் ஸ்டீராயிட் வகை மருந்துகளை அதிகம் உபயோகிப்பவர்களுக்கும் வரும். சமயங்களில் கண்ணில் ஏதாவது அடி, கண்ணில் சதை வளர்ச்சியினால் ஏற்படும் அழுத்தம், காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

p50

அறிகுறிகள்:

ஆரம்ப நிலையில் எந்த அறிகுறி களையும் இது வெளிப்படுத்தாது, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடியது இது. சில சமயங்களில் மேற்பரப்பான பார்வையில் ஒட்டு போன்றதொரு பார்வையிழப்பையோ அல்லது நிறங் களின் துல்லியம் குறைந்து காண்ப தையோ உணரலாம்.

கோணம் மூடிய கிளக்கோமாவின் அறிகுறிகள், விழிப்பந்தின் உள்ளே அல்லது அதைச் சுற்றிலுமான வலி, தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் விளக்குகளைச் சுற்றிலுமான வட்டம் போன்ற பார்வையில் இடையூறுகள் ஏற்படும். சில நேரங்களில் இத்தகைய அறிகுறிகள் ஒன்றும் இல்லாமலும் இருக்கலாம்.

சிகிச்சைகள்:

கோனியோஸ்கோப் மூலமாக உள் அறையின் (Angle of the anterior chamber)  அளவை அளவிடலாம். ‘ஆப்டிக்கல் கொஹிரண்ட் டோமோகிராபி’ என்னும் நவீன முறை இதனைக் கண்டறியப் பயன்படுகின்றது. இவை அனைத்தும் கண்ணில் உள்ள அழுத்தத்தை அளவிடப் பயன்படுகிறது.

ஆரம்ப நிலை எனில், இதனை சொட்டு மருந்து மூலமாகவே குணப்படுத்திவிட முடியும். கொஞ்சம் வலி ஏற்படும் ஆனால், நாளடைவில் அது சரியாகிவிடும். அப்படியும் சரியாகாமல் கண்ணில் அதிக வலி இருந்தால், லேசர் மூலம் சிகிச்சை மேற்கொள்ளலாம். அதற்கு சாத்தியப்படாத தருணத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவும் இதனைக் குணப்படுத்த முடியும்.

ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும், மற்றொரு கண்ணையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில், ஒரு கண் பாதிப்பின் பக்கவிளைவு, மற்றொரு கண்ணிலும் ஏற்படலாம்.

இந்த நோய்க்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. இதற்கு 40 வயதுக்கு மேல் சீரான இடைவெளியில் கண்பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பார்வை இழப்பில் இருந்து தப்பிக்கலாம்!’

அட்டை சிகிச்சை! மருத்துவ வரலாற்றில், கிளக்கோமா கண் நோய் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. கிரீஸ் நாட்டில் அப்போதே அட்டைகளை (leeches) கண்களில்விட்டு அந்த அதிகப்படியான திரவத்தை வெளியேற்றி சிகிச்சை அளித்துள்ளனர்.

பெண்களே அதிகம்! கண் அழுத்த நோயானது, 40 வயதில் பரவலாகக் காணப்படுகிறது. 50 அல்லது அதற்குக் கீழ் வயதானவர்களில் 200 பேரில் ஒருவரையும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்துல் ஒருவரையும் பாதிக்கிறது. ஆண்களைவிட, பெண்களே இந்த நோயில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

%d bloggers like this: