ஆல்ட் கீயுடன் கூடிய சில ஷார்ட் கட் கீகள்
வேர்ட் தொகுப்பில் ஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள்
Alt O, B: தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.
Alt O, E: ஆவணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சிறிய எழுத்தைப் பெரிய எழுத் தாகவும் பெரிய எழுத்துக்களை சிறிய எழுத்துக்களாகவும் மாற்ற இந்த கீகள் பயன்படுகின்றன.
Alt O, C: காலம், செக்ஷன் என்றழைக்கப்படுகிற பிரிவுகளை ஏற்படுத்த இந்த கீகளை முதலில் அழுத்தலாம். column format என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
Alt O, D: ஆவணத்தில் பத்தி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள முதல் எழுத்தைப் பெரிதாக, பெரிய எழுத்தாக மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம். ஆல்ட் ஓ மற்றும் டி அழுத்தியவுடன் ட்ராப் கேப் என்ற சிறிய விண்டோ கிடைக்கும். இதில் முதல் எழுத்து எப்படி அமைய வேண்டும் என மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். நாம் தேர்ந்தெடுக் கப்படும் வகையில் பத்தியின் முதல் எழுத்து மாற்றப்படும்.
இணைய வர்த்தகத்தில் இந்திய பெண்கள்
சென்ற ஆண்டில் மட்டும், இந்தியாவில் பெண்கள், இணையம் மூலம் 50 கோடி டாலர் மதிப்பில் பொருட்களை வாங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மூன்று ஆண்டுகளில், இது ஐந்து மடங்காக உயர்ந்து, 300 கோடி டாலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இணைய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 850 கோடி டாலராக இருக்கும். இதில் பெண்களால் 35% வர்த்தகம் மேற்கொள்ளப்படும். சென்ற ஆண்டில், மொத்த வர்த்தகம் 200 கோடி டாலர் மதிப்பிலும், பெண்களின் பங்கு 26% ஆகவும் இருந்தது. வர்த்தகம் மேற்கொண்ட மொத்த பெண்களில், வேலைக்குப் போகும் பெண்களின் பங்கு 43% ஆக இருந்தது. இதற்கு முதல் அடிப்படைக் காரணம், ஸ்மார்ட் போன் பயன்பாடும், அதன் மூலம் இணையத் தொடர்புமேயாகும். குறிப்பாக பெண்களிடம் இந்த பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றைப் பயன்படுத்தி பெண்கள் அதிகம் பொருட்களை இணைய தளங்களில் வாங்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக உள் ஆடைகளை வாங்குவது, இதில் அதிகமாக உள்ளது.
17 வருடங்கள் … திகில் ஜெயலலிதா கேஸ் .பகீர் பெங்களூரு ரேஸ்!-ஆனந்த விகடன்
பிறந்த மாநிலமான கர்நாடகம், நொந்த மாநிலமாக மாறிக்கொண்டு இருக்கிறது ஜெயலலிதாவுக்கு!
39-க்கு 37 கொடுத்த தமிழக மக்களின் தீர்ப்பைக்கூடக் கொண்டாட முடியாமல், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா கொடுக்கக் காத்திருக்கும் தீர்ப்புதான், ஜெயலலிதாவுக்கு நிம்மதியான தூக்கம் இல்லாமல் புரளவைக்கும் புலம்பலைக் கொடுத்துவருகிறது. இந்திய நீதித் துறை வரலாற்றில் இப்படி ஒரு வழக்கு இழுபறி படலத்தை எட்டியது இல்லை என்ற சிறப்புப் பெருமையை ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்… மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெற்றுவிட்டது.
மிஸ்டர் கழுகு: ”மாவட்டச் செயலாளர்கள் மீது கோபம் இருக்கிறது!”-ஜூனியர் விகடன்
அண்ணா அறிவாலயத்தில் இருந்து வந்துகொண்டு இருப்பதாகத் தகவல் சொன்னார் கழுகார். தி.மு.க மாவட்ட நிர்வாகங்களில் நடக்க இருக்கும் மாற்றங்கள் குறித்த தகவலோடு வந்தார்.
”தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிரடி மாற்றங்களுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறது தி.மு.க. இதுபற்றிய ஆலோசனைகளைச் சொல்வதற்காக ஒரு குழுவை அமைத்தார் கருணாநிதி. இதில் கலசப்பாக்கம் திருவேங்கடம், திருத்துறைப்பூண்டி கல்யாணசுந்தரம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், தங்கம் தென்னரசு, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஈரோடு சச்சிதானந்தம் ஆகிய ஆறு பேரை கருணாநிதி நியமித்துள்ளார். மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமைப்படுத்தி, மேலும் வலுவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்ந்து முடிவெடுப்பதற்கான அமைப்பு என்று இதனைச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு மூன்று நாட்களாக இந்தக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. முதல் கூட்டத்தில் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகிய மூவரும் பங்கேற்றனர்.”
”ஏதாவது வழிகாட்டுதலை கருணாநிதி அவர்களுக்குக் கொடுத்துள்ளாரா?”
பெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்?
முதலில் கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கவர்ச்சி என்பது ஆண்களைக் கவரக்கூடியது. இதை ஆங்கிலத்தில் sex appeal என்று கூறுவார்கள். அழகு என்பது அங்க உறுப்புகளின் அளவான தன்மையைப் பொருத்தது. அழகான ஒன்று கவர்ச்சியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைவுதான். பொதுவாக பருவத்தில் எல்லாப் பெண்களுமே அழகு இல்லாதவர்கள்கூட- கவர்ச்சியாகவே இருப்பார்கள். காரணம் இளமை. எல்லாப் பெண்களும் அழகும், கவர்ச்சியும் உடையவர்களாக இருக்கவே ஆசைப்படுவார்கள். ஆகவே, அவர்கள் அழகு சாதனங்கள் மூலம் தன் அழகையும், கவர்ச்சியையும் கூட்ட முடியும் என்று நினைக்கிறார்கள்.
உங்கள் ஹாட் மெயிலை மைக்ரோசாப்ட் படிக்கலாம்!
அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 குறித்த வர்த்தக ரகசியம் ஒன்றை, அதன் ஊழியர் ஒருவர் வெளியிட்டதை அறிந்த மைக்ரோசாப்ட், அது குறித்த தீவிர விசாரணையில் இறங்கியது. அப்போது, ஹாட் மெயில் தளத்தில் இருந்த மின் அஞ்சல்களைப் படித்து, அதன் மூலம் குற்றவாளியைப் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தது. அப்போதுதான் இந்த உண்மை உலகிற்குத் தெரிய வந்தது.