Daily Archives: ஜூன் 16th, 2014

திமுகவிலிருந்து விலகினார் குஷ்பு: பா.ஜனதாவில் சேர முடிவு?

 

சென்னை: திமுகவிலிருந்து விலகுவதாக பிரபல நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். அவர் விரைவில் பா.ஜனதாவில் சேருவார் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமது அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப்பாதையாகவே தொடர்ந்து நீடிப்பது தனக்கு தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், ஆகவே திமுகவிலிருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்தை இதயத்துடன் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

அதிகார குவிப்பை இழக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள்…நிர்வாக மாவட்டங்கள் 65 ஆக பிரிப்பு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, திமுகவை வலிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் அக்க்கட்சியின்  நிர்வாக மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டாண்டு காலமாக கட்சியில் கோலோச்சி வந்த பல திமுக மாவட்டச் செயலாளர்களின் அதிகார வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோற்றது தி.மு.க. இந்தத் தோல்வியால் அதிர்ச்சியடைந்த கருணாநிதி, கடந்த ஜூன் 2-ம் தேதி கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, அதுபற்றி ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து ”கழக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையொட்டி, மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமையாக்குவதற்கும் மேலும் வலிமைப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில், தேவையான சாத்தியக்கூறுகளை ஆய்ந்து முடிவெடுக்கவும் கழகத் தலைமைக்கு பரிந்துரைசெய்யவும் குழு அமைக்கப்படுகிறது” என்று அறிவித்த கருணாநிதி, அந்தக் குழுவில்  கலசப்பாக்கம் திருவேங்கடம், திருத்துறைப்பூண்டி கல்யாணசுந்தரம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், தங்கம் தென்னரசு, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஈரோடு சச்சிதானந்தம் ஆகிய ஆறு பேரை நியமிப்பதாக தெரிவித்திருந்தார்.
மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமைப்படுத்தி, மேலும் வலுவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவெடுப்​பதற்காக இந்த குழு ஏற்படுத்தப்பட்ட நிலையில், இக்குழுவினருடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், கடந்த சில தினங்களாக கட்சித் தலைவர் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வந்தனர்

Continue reading →

வேர்டில் பிரச்னை: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

சில வாரங்களாக, வேர்ட் தொகுப்பில் உள்ள குறியீட்டுப்பிழை வழியாக, ஹேக்கர்கள் கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றும் நிகழ்வுகள் ஏற்பட்டு வருவதாக மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
மைக்ரோசாப்ட் வழங்கும் அவுட்லுக் 2007, 2010, 2013 தொகுப்புகளின் மாறா நிலை டாகுமெண்ட் வியூவராக, புரோகிராமில் இணைந்ததாக வேர்ட் இயங்குகிறது. இதில் அமைக்கப்படும் ஆர்.டி.எப். படிவ பைல்களில் உள்ள பிழைக்குறியீடுகளை, ஹேக்கர்கள் பயன்படுத்தி, கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களைத் திருடி வருவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

Continue reading →

பொருளாதாரச் சீர்திருத்தம்: அர்த்தகிராந்தியின் யோசனைகள் சாத்தியமா?

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாகச் செய்யவேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றி   அக்கறையுடன் விவாதித்துவரும் புனேவைச் சேர்ந்த ஆடிட்டர்கள் சிலர் அர்த்தகிராந்தி என்கிற அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு  பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடியை சந்தித்து, சில  யோசனைகளை முன்வைக்க நேரம் கேட்டனர்.

நரேந்திர மோடி, அர்த்தகிராந்தி அமைப்பினருக்கு 9 நிமிடங்களை ஒதுக்கித்தந்தார். இந்த 9 நிமிடங்களுக்குள் அத்தனை யோசனைகளையும் சுருக்கமாகச் சொல்லிவிட வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை. ஆனால், தங்கள் யோசனையின் தாத்பரியங்களை அர்த்தகிராந்தி அமைப்பினர் எடுத்துச்சொல்ல ஆரம்பித்தவுடன், அதைக் கவனமாகக் கேட்க ஆரம்பித்த மோடி, ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஒதுக்கி, விளக்கமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டாராம்.

அர்த்தகிராந்தி அமைப்பினர் அப்படி என்ன யோசனைகளை மோடியிடம் எடுத்துச் சொன்னார்கள்?

Continue reading →

பணம் கொட்டும் தொழில்கள்- செயற்கை மலர்கள்!

வீடுகள், அலுவலகம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்களில் மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது ஃபேஷனாகவே மாறிவிட்டது. இப்படி மலர்களைக்கொண்டு அலங்கரிப்பதன் மூலம் அழகும் ரம்மியமும் கூடுவதால் அதற்கு முக்கியத்துவம் தருகின்றன நிறுவனங்கள். இயற்கை மலர்களைக் கொண்டு அலங்கரிக்க ஆகும் செலவு அதிகம் என்பதால், செயற்கை மலர்களைக்கொண்டு, அந்த இடத்தை அலங்கரிக்கும் போக்கு தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது.

செயற்கை மலர்களைப் பராமரிப்பதும், கையாள்வதும் எளிது. நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்கிற சாதகமும் உண்டு. தவிர, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் அலங்கார தேவைகளுக்கு அதிக அளவில் தேவைப்படுவதால், செயற்கை மலர்களுக்கான சந்தை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. குறைவான முதலீடு, எளிதான சந்தை வாய்ப்பு கொண்ட தொழில் இது. 

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்-படுக்கை வரிசை இணைக்க

செல்களைக் கட்டமிட: எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணு கிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + & அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா? முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + _ ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா!
படுக்கை வரிசை இணைக்க: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், புதிய படுக்கை வரிசைகளை குறிப்பிட்ட இடத்தில் இணைக்க நமக்கு வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த வரிசையின் கீழாகக் கூடுதல் வரிசை வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் கீணிதீண் தேர்ந்தெடுத்து கிளிக் செய்வோம். இதன் மூலம் ஒரே ஒரு வரிசை நமக்குக் கிடைக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வரிசை வேண்டும் எனில் என்ன செய்கிறோம்? இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மேலே கூறியபடி வரிசை ஒன்றை இணைத்த பின்னர், F4 பட்டனை அழுத்தினால், அடுத்தடுத்து வரிசைகள் இணைக்கப்படும்.
இன்னொரு வழி இதைக் காட்டிலும் எளிய வழியாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஐந்து வரிசைகள் இணைக்கப்பட வேண்டும் என விரும்பினால், அந்த வரிசை சென்று, தொடர்ச்சியாக ஏற்கனவே இருக்கும் ஐந்து வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் Rows தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுத்த முதல் வரிசைக்கு மேலாக, எக்ஸெல் ஐந்து வரிசைகளை இணைத்திருக்கும். இது சற்று வேடிக்கையாகக் கூடத் தோன்றலாம்.
ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க்ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க்ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப் படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்