மிஸ்டர் கழுகு: கோபாலபுரம் வந்த கோபக் கடிதங்கள்
”அறிவாலயத்தில் புகார் புயலடிக்க ஆரம்பித்துவிட்டது” என்றபடி வந்தார் கழுகார். அவரே ஆரம்பித்தார்… ”நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக கடந்த 2-ம் தேதி தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் கூடியது அல்லவா? அந்தக் கூட்டத்தில், ‘தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க வேட்பாளர்களும், தேர்தல் பொறுப்பாளர்களும் 15-ம் தேதிக்குள் நடுநிலையோடு ஆராய்ந்து தலைவர் கலைஞரிடம் நேரில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘இது பேருக்காக இருக்கக் கூடாது. உண்மையிலேயே இந்தத் தேர்தலில் கட்சிக்குள் யார் வேலை செய்யவில்லை என்பதை தைரியமாகச் சொல்லுங்க. அப்போதுதான் கட்சியை சரிசெய்ய முடியும்’ என்றும் அழுத்தம்திருத்தமாக சொல்லி அனுப்பினார் ஸ்டாலின். அந்த அறிக்கைகளுடன் வேட்பாளர்களும் பொறுப்பாளர்களும் சென்னைக்கு வந்துவிட்டார்கள்.”
”கருணாநிதியே அந்த அறிக்கைகளை வாங்கினாரா?”
எல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் பாலிசி: பாலிசிதாரர்களுக்கு லாபமா?
இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாமே ஆன்லைன் டேர்ம் பாலிசியை ஏற்கெனவே வைத்திருக்க, எல்.ஐ.சி நிறுவனம் இப்போதுதான் இ-டேர்ம் எனும் ஆன்லைன் டேர்ம் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசியை எடுப்பதால் பாலிசிதாரர்களுக்கு பலன் உண்டா என நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம்.
”எல்.ஐ.சி-ன் இந்தத் திட்டம் காலம் கடந்த முயற்சி என்றாலும், வரவேற்கத்தக்கதுதான். டேர்ம் பாலிசி என்கிற செக்மென்டில் எல்.ஐ.சி பின்தங்கியே இருக்கிறது. இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த பாலிசி மூலம் எல்.ஐ.சி பல புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.
விண்டோஸ் 8: முக்கிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
விண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம். இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை:
தேடல்:
Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.
Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.
பறவை வளர்ப்பு… பணத்துக்குப் பணம்; மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி!
பறவைகள் மனிதர்களுக்குப் பிடித்தமானவை. அதனாலேயே பலரும் தங்கள் வீடுகளில் தனியாக ஒரு குடில் அமைத்து பறவைகளை வளர்த்து வருகிறார்கள். மனத்துக்கு மகிழ்ச்சி தருகிறது என்பதற்காகவே பறவையை வளர்க்க ஆரம்பித்தவர்கள், இன்று அதன்மூலம் நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள்!
பண்ணை வைத்து வியாபாரம்!
கடந்த 16 ஆண்டுகளாகப் பறவைகளை வளர்த்து வியாபாரம் செய்வதையே தொழிலாகச் செய்து வருகிறார் ஈரோடு மாவட்டம் சத்திரம் புதூரைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி. அவரைச் சந்தித்துப் பேசினோம்.
ஆரோக்கியம் காக்கும் அமிலங்கள்
அன்றாட வாழ்க்கையில் பலவகையான சத்துக்களும் வைட்டமின்களும் சேர்ந்துதான் உடலை ஆரோக்கியமாக செயல்படவைக்கின்றன. ஒவ்வொரு சத்தும் உடலின் வெவ்வேறு உறுப்புகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. சில வைட்டமின்கள் அமிலங்களாக உடலுக்கு சத்துக்களைக் கொடுக்கின்றன. இவை உடலில் இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவை அதிகமாக அல்லது குறைவாகச் சுரக்கும்போது, பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல்நலனுக்கு இன்றியமையாத சில முக்கிய அமிலங்கள் பற்றியும் அவற்றின் பயன்கள் மற்றும் எந்த மாதிரியான உணவுகள் மூலம் இவற்றை நிலைப்படுத்தலாம் என்பது பற்றியும் அறியலாம் .
நிக்கோடினிக் அமிலம் (நியாசின்)
குட்பை சொன்ன குஷ்பு! கடைசி நேர க்ளைமாக்ஸ் காட்சிகள்
‘என் மனத்தில் மிக உயர்ந்த மனிதர் தலைவர் கலைஞர். அவர் எனக்குக் கழகத் தலைவர் இல்லை. என்னுடைய அப்பா!’ – தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்த குஷ்பு, அடுத்த சில நிமிடங்களில் தனது ட்விட்டர் வலைதளத்தில், கனத்த இதயத்துடன் இப்படி ட்வீட் செய்திருந்தார்.
‘என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்தப் பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே தி.மு.க-வில் இருந்து விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்’ – இப்படி குஷ்புவின் அறிக்கையில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வலியும் வேதனையும் நிறையவே தெரிந்தது.
கட்சியில் சேர்ந்த நாளில் இருந்து பவர்ஃபுல்லாக இருந்த குஷ்புவுக்கு
உணவு யுத்தம்!-15
பிறந்தநாள் கேக்குகள்!
சில நாட்களுக்கு முன் நாளிதழ் செய்தி ஒன்றில் வெளியான செய்தி இது: மும்பையில் 60 வயதைத் தொட்ட ஒரு தொழில் அதிபர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஒரே நேரம் 60 கேக்குகளை வெட்டினார். அந்த கேக்குகளின் மொத்த எடை 6,000 கிலோ.
எதற்கு இந்த ஆடம்பரம்? வணிகச் சந்தை உருவாக்கிய பண்பாடு எந்த அளவு விபரீதமாக வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே, புத்தாடை அணிந்து கேக் வெட்டுவதும் சாக்லெட்