வெளிநாட்டு மருத்துவப்படிப்பு! – உஷார்… உஷார்!
”எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு சில நாடுகளைச் சேர்ந்த கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. சில நாடுகளில் அது அவசியமில்லை. வெளிநாட்டில் மருத்துவம் படிக்க, அந்தக் கல்வி நிறுவனத்தின் வலைதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். ஆன்லைன் நுழைவுத்தேர்வு, ப்ளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் என்றெல்லாம்கூட சில கல்லூரிகளில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
எம்.டி போன்ற முதுகலை மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேக நுழைவுத் தேர்வுகள் உண்டு. அமெரிக்காவில் படிக்க விரும்பினால்… இ.சி.எஃப்.எம்.ஜி (ECFMG-Educational Commission for Foreign Medical Graduates), யு.எஸ்.எம்.எல்.இ (USMLE-United States Medical Licensing Examination) நுழைவுத் தேர்வுகளையும், இங்கிலாந்தில் படிக்க விரும்பினால்… பி.எல்.ஏ.பி (PLAB-Professional and Linguistic Assessments Board) என்ற நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி ராஜினாமா?இமேஜை உயர்த்த விஜயகாந்த் திட்டம்
எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து, ஆலோசனை செய்து வரும் விஜயகாந்த், இது குறித்து முடிவெடுக்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில், தே.மு.தி.க., வெற்றி பெற்றது.இதனால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பெற்றார்.ஆனால், அந்த பொறுப்பை அவர் சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டைச் சொல்லி, கட்சியின், எட்டு எம்.எல்.ஏ.,க்கள்,
இப்படியும் ஒரு ‘திரில்’ அனுபவம்!
காற்று வாங்க, தண்ணீரில் நிற்க, அலைகளுக்கு நடுவே புகுந்து விளையாட, நீச்சலடிக்க போன்றவற்றுக்கு தானே நாம் கடற்கரைக்கு செல்வோம். ஆனால், டச்சு நாட்டு கடற்பகுதியில் உள்ள காரபியன் தீவுகளில் ஒன்றான செயின்ட் மார்டென் என்ற கடற்கரையை ஒட்டிய பகுதிவாழ் மக்கள், தாழ்வாக பறக்கும் விமானத்தின் கீழ் நிற்கவே விரும்புகின்றனர்.
செயின்ட் மார்டென் தீவை ஒட்டி, ஜூலியானா சர்வதேச விமான நிலையம் உள்ளது. விமானத்தின் ஓடுபாதை, 2,300 மீட்டர் நீளமுள்ளது. விமான நிலையத்தில் விமானம் இறங்கும்போதும், மேலே எழும் போதும், அவை இக்கடற்கரையை மிகக்குறைந்த உயரத்தில், கடந்து செல்லும்.
சீனாவில் சுட சுட நாய்கறி….!!
சீனர்கள், பாம்பு, பல்லி, தேள் என்று பல உயிரினங்களை உணவாக உட்கொள்வர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த ஜூன் மாதத்தில், நம்மில் பலர் ஆசையாக வளர்க்கும் நாய்களும் சீனர்களின் உணவுப் பட்டியலில் இடம்பெறுகின்றன என்பது தெரியுமா… சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்ஸியில் உள்ள யூளின் நகரில் தான் இந்த நாய் இறைச்சி விருந்து நடைபெறுகிறது.
வேர்ட் டிப்ஸ்-தலைப்புகளைத் தானாக அமைக்க
தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் "Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் "Table1, Table2, Table3” என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் அமைக்கும் போதும், தானாகவே இந்த தலைப்பினை அமைத்துக் கொள்ளும் வகையில், செட் செய்திடலாம். இதே போல படங்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை அமைக்கையிலும் இந்த தலைப்புகளைக் கொண்டு வரலாம். இதற்குக் கீழ்க்காணும்
சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி
உடல் உழைப்புக் குறைவு, தவறான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் 40-50 வயதில் வந்த சர்க்கரை நோய் இன்று 20 வயதினருக்குக்கூட வர ஆரம்பித்துவிட்டது என்பதே கசப்பான உண்மை. நோய் வந்தபின் அவஸ்தைப்படுவதைவிட, வரும் முன் காப்பதுதான் புத்திசாலித்தனம்;
”சர்க்கரை நோயை ‘மெட்டபாலிக் டிசீஸ்’ என்போம். நாம் சாப்பிடும் உணவு செரிமானத்தின்போது சர்க்கரையாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரைதான் நம் உடலில் உள்ள திசுக்களுக்கான உணவு. ரத்தம் உடல் முழுக்கப் பாயும்போது திசுக்கள் ஆக்சிஜனையும், சர்க்கரையையும் எடுத்துக்கொள்ளும். இந்தச் சர்க்கரையை திசுக்கள் நேரடியாக எடுத்துக்கொள்ளாது. இதற்கு இன்சுலின் தேவை.
உயிரைப் பறித்ததா லிச்சி பழம்? அதிர்ச்சியில் வட மாநிலங்கள்!
லிச்சி பழம் உயிரை மிரட்ட ஆரம்பித்துள்ளது!
வட மாநிலங்களில் கோடைக்காலத்தில் கிடைக்கும் மிகவும் பிரபலமான பழம் லிச்சி. இந்த ஆண்டு லிச்சி பழம் உற்பத்தி அதிகரித்துள்ளது. விலை குறைவு என்பதால், அதிக அளவில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதற்கும் வேட்டு வைப்பதுபோல் வந்திருப்பதுதான் லிச்சி வைரஸ் சின்ட்ரோம். மேற்கு வங்கத்தில் லிச்சி பழத்தைச் சாப்பிட்ட சிறுவர்கள் எட்டு பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று பீகார் மாநிலத்திலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதுவும் லிச்சி பழ உற்பத்திக்குப் பெயர்போன முசாஃபர்பூர் மாவட்டத்திலேயே இந்தப் பாதிப்பு அதிகம் ஆகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா மாவட்டத்தில் லிச்சி பழத்தைச் சாப்பிட்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட எட்டு குழந்தைகள் உயிரிழந்ததை, மால்டா மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ.ரஷீத் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”லிச்சி பழத்தைச் சாப்பிட்ட பிறகுதான் இந்தக் குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து வாந்தி எடுத்திருக்கிறார்கள். கடைசியில் வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர்கள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு