Daily Archives: ஜூன் 20th, 2014

பட்டம் மட்டுமே போதாது… துணைப்படிப்புகள் ஒரு பார்வை!

டிப்பு, மதிப்பெண்கள் இதையெல்லாம் தாண்டி, என்னென்ன திறமைகள் இருக்கின்றன என்று பார்க்க ஆரம்பித்துவிட்டன… வேலை தரும் நிறுவனங்கள். இப்படிப்பட்ட சூழலில், ‘கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே துறை சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ளவும், வேலைவாய்ப்பைச் சுலபமாகப் பெறவும் என்னென்ன பயிற்சிகளையும், துணைப்படிப்புகளையும் படிக்கலாம்’ என்ற கேள்விகள் எல்லோரிடமும் எழுந்து நிற்கும். முதலில், பொறியியல் மாணவர்களுக்கான சப்போர்ட்டிவ் கோர்ஸ்கள் பற்றி பேசுகிறார் சென்னை, சாய்ராம் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை

Continue reading →

வரிகளுக்கான எண்களை நீக்க

வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பில், வேர்ட் தானாக வரிகளுக்கு எண்களை இடும் டூல் ஒன்றினைக் கொண்டுள்ளது. இதனை இயக்கினால், வரிகளுக்கு எண்கள் தாமாக வழங்கப் படும். ஆனால், டாகுமெண்ட் தயாரிப்பு முடிவடைந்தவுடன், எண்களை நீக்க நீங்கள் விருப்பப்படுவீர்கள். எண்கள் இருப்பது, டாகுமெண்ட் டின் நோக்கத்தினைக் கெடுப்பதாக அமையும்.மொத்தமாக இவற்றை நீக்க கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
1. ரிப்பனில் Page Layout டேப்பினைக் காட்டவும்.

Continue reading →

கர்ப்பப்பை கவனம்… விழிப்புடன் இருந்தால் தப்பிப்பது சுலபம்!

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள் என்றால் அது இந்தியாவில்தான். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில் சரிபாதிப் பேர்தான் புற்றுநோய்க்கான போரில் வெற்றிபெறுகின்றனர். 72 ஆயிரம் பெண்கள் உயிரிழக்கின்றனர். ஆனால், இது தவிர்க்கக்கூடிய நோய்தான். இதுபற்றி தொடர் விழிப்புஉணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Continue reading →

சொரியாசிஸ்; பயம் வேண்டாம்… பாதுகாப்பு போதும்!

கல்லூரியில் படிக்கும்போது, வயிற்றில் சிவப்பு நிறத் திட்டுக்கள் போன்று தோல் பிரச்னை ஏற்பட்டது சுகுமாருக்கு. வெளியே காண்பிக்க வெட்கப்பட்டு, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். விளைவு… படித்து முடித்து, நல்ல வேலைக்கு சேர்ந்த நிலையில், வயது கூடக்கூட அந்த சிவப்புத் திட்டும் வளர்ந்து கொண்டே சென்றது. வயிற்றின் 50 சதவிகிதத்தை அந்த சிவப்புப் புள்ளிகள் ஆக்கிரமித்திருந்ததுடன், அந்த இடத் தில் அரிக்கவும் ஆரம்பித்தது. கண்ட கண்ட க்ரீம்களை வாங்கித் தடவிக் கொண்டிருந்தாரே தவிர, மருத்துவரிடம் செல்லவில்லை. ஒருமுறை சட்டை, பனியனைக் கழற்றியபோது அவரு டைய அம்மா பார்த்து டாக்டரிடம் அழைத்துச் செல்லும் வரை, சுகுமாருக்கு சொரியாசிஸ் பாதிப்பு பற்றித் தெரிந்திருக்கவே இல்லை.

தற்போது அதிகப்படியான இடங் களில் இந்த ‘சொரியாசிஸ்’ என்ற பெயர் பெரிதுபடுத்தப்பட்டு, ஒருவித பயத்தை ஏற்படுத்தி வருவதுடன், சமுதாயத்தில் ஒரு கொடூர வியாதியாகவே பார்க்கப் படுகிறது. சொரியாசிஸின் உண்மையான பாதிப்புகள் என்ன ?

Continue reading →

தொண்டை வலி, காது வலி, குறட்டையா? அலட்சியம் வேண்டாம்!

முடிந்த அளவு, காய்ச்சி ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்; குறைந்த விலையில் கிடைக்கிறது என, கண்ட குளிர்பானங்களை வாங்கி குடிப்பதை கைவிட வேண்டும்; சாப்பிடும் முன் கைகளை கழுவி விட்டு சாப்பிட வேண்டும் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வறுத்தெடுக்கிறது. வறட்சி காரணமாக, தாகம் அதிகமாக, கண்ட இடங்களில் கிடைக்கும் தண்ணீர், கூல் டிரிங்ஸ் குடிப்பதால், டான்சில்ஸ் பாதிப்பு (தொண்டை வலி), செவித்திறன் பாதிப்பு, குறட்டை ஏற்படும். அலட்சியம் காட்டினால் குறட்டையால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

1. ‘டான்சில்ஸ்’ பாதிப்பு என்றால் என்ன? Continue reading →

Invitation for Seminar on Housing Loans,Electrical Plugs and Socket Outlets-By Concert

Dream of owning your own home? See how Banks and HFCs help you realize your dreams

Electricity improves your daily life – How to use Plugs and Sockets safely in our homes?

TO KNOW THE FACTS ABOUT Housing Loans by Banks and Housing Finance Companies (HFCs) and Electrical Plugs and Socket Outlets 

Attend our Seminar on 21st June 2014

Venue: Madras Institute of Development Studies, 2nd Main Road, Gandhi Nagar, Adyar, Chennai

600 020

Time:  10 a.m. to 1.00 p.m. 

At this half day seminar on 21st June, 2014, CONCERT Team shall present their findings based on the tests conducted by them. We would deeply appreciate your deputing your Correspondent to cover the program and disseminate the information amongst your vast readership base.

We assure you that there will be a lot of information that would be of great interest to your readers.

Some important points:

Housing Loans by Banks and Housing Finance Companies (HFCs)

Some of the most common questions that come to your mind are

·          Will I be eligible?

·          Would it take a long time to process the Loan?

·          Would the documentation be tiring and cumbersome?

·          Would it be better to get the loan from a Bank? Or should I seek a Housing Finance Company?

·          What is Housing Finance Company?

·          What are KYC norms?

·          What is CIBIL Credit Score?

·          What is margin?

·          What are monthly rests?

·          What are BPLR and Base rate?

·          What is EMI?

Electrical Plugs and Socket Outlets

·          What are Electrical Plugs and Socket Outlets?

·          What are the interchange hazards?

·          What are the obvious dangers?

·          What are the safe practices?

·          What are the safe practices in a kitchen?

·          What are the safe practices in a bathroom?

·          How to check a plug?

·          What are the correct uses of Plugs and Sockets?

·          Why do the Socket Outlets get heated?

·          Are your Socket Outlets overloaded?

 

One to one discussions in the seminar will provide more answers and clear your doubts.

Please do participate in this seminar, gather valuable information, and join us for high tea thereafter.


For further details, Please contact Mr.V.Srinivasan (Admin Manager)- (+91) 9444830199 

Yours Sincerely,

G.Rajan

Secretary General

Consumers Association of India & The CONCERT Trust
A-5, 2nd Floor
Thiruvalluvar Nagar
Thiruvanmiyur, Chennai 600 041

Ph: 044 24513191/ 24513192 
Fax: 044 24511040
E-mail:
cai.india1@gmail.com

AGENDA

 

SEMINAR ON COMPARATIVE TESTING PROJECT – BY CONCERT

 

 

Date   : June 21st   2014                                                      Time: 10:00 AM to 1:00 PM

Venue: Madras Institute of Development Studies, 2nd Main Road, Gandhi Nagar,              Adyar, Chennai – 600 020.

                                                                                       

 

09:45 am         Registration

 

 

10.00 am         Tamil Thai Vazhthu

 

10.05 am         Welcome Address

                        Sri G. Rajan, Secretary General, CONCERT Trust

                       

10.15 am         Presidential Address

                        Sri D. Krishnan, Former Executive Director, LIC of India,

                        Former CEO LIC Housing Finance LTD. 

                        Presently Member, Advisory Committee, IRDA

                       

10.30 am         Need for the Comparative Testing Project

                        Sri M. Mohan, Program Manager, CONCERT Trust (CT Project)

 

10.45 am         Dream of owning your own home? See how Banks and HFCs help you                           realize your dreams

                        Sri M. Mohan, Program Manager, CONCERT Trust (CT Project)

 

11.15 am        Consumers Speak Out and Q & A    

 

11.40 am         Tea Break

 

12.00 pm         Electricity improves your daily life – How to use Plugs and Sockets safely                     in our homes?

                        Sri M. Mohan, Program Manager, CONCERT Trust (CT Project)

 

12.30 pm        Consumers Speak Out and Q & A    

           

12.55 pm         Vote of Thanks

                        Sri S. Senthamil Selvan, Statistical Officer, CONCERT Trust (CT Project)

 

01.00 pm         National Anthem

 

                                                            ************

கடவுள் நம் வேலைக்காரனல்ல!-

ஜூன் 21 – கலிக்காமர் குருபூஜை

இந்த உலகிலேயே கோபப்படாதவர் யார் என்றால், கடவுள் மட்டும் தான். அவரை துதித்தாலும், நிந்தித்தாலும் கோபப்படுவதில்லை. அவரிடம், அதைத் கொடு, இதைக் கொடு என, பக்தர்கள் கோரிக்கை வைத்தாலும், கோபப்படாமல், யாருக்கு என்ன தர வேண்டுமோ அதைத் தந்து கொண்டிருக்கிறார்.
இப்படித்தான் ஒருமுறை, சிவனைச் சந்தித்தார் சுந்தரர். சுந்தரருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது; இருப்பினும், சங்கிலி நாச்சியார் மேல் கொண்ட காதலால், அவரையும் தனக்கு திருமணம் செய்து வைக்கக் வேண்டுமென சிவனிடம் கோரிக்கை வைத்தார். சுந்தரரும், சிவனும் நண்பர்கள் என்பதால், பரவை நாச்சியாரிடம் தூது சென்றார் சிவன்.
இந்த விஷயம், கலிக்காமர் என்னும் சிவனடியாருக்கு தெரிய வந்தது. இவர் சோழ மன்னரிடம் தளபதியாக இருந்தார். சிவனடியாரான கலிகாமர், மற்றொரு சிவனடியாரான மானக்கஞ்சாற நாயனாரின் மகளைத் திருமணம் செய்தவர். சிவன் மேல் உயிரையே வைத்திருந்த கலிங்காமருக்கு காதலுக்காக, தன் உயிருக்கும் மேலான சிவனை தூது அனுப்பிய சுந்தரர் மீது, வெறுப்பு ஏற்பட்டது. இதை அறிந்த சுந்தரர், தன் செய்கையால், ஒரு சிவனடியார் மனம் புண்பட்டதே என்று வேதனை பட்டார்.
இவர்களுடைய மன வேதனையை அறிந்த சிவன், முற்பிறவி கர்மத்தால் சங்கிலியை, சுந்தரர் மணம் முடிக்கும் சூழல் வந்ததை உணர்த்தவும், சுந்தரரையும், கலிக்காமரையும் நண்பர்களாக்கவும் முடிவெடுத்தார். இதனால், கலிக்காமருக்கு தீராத வயிற்று வலியைக் கொடுத்தார். அவரைப் பார்க்க, கலிக்காமரின் சொந்த ஊரான பெருமங்கலம் புறப்பட்டார் சுந்தரர்.
அவர் வரும் செய்தி, கலிக்காமருக்கு பணியாளர்கள் மூலம் தெரிந்தது. ‘கடவுளை அவமதித்த சுந்தரர் முகத்தில் விழிக்க பிரியப்படவில்லை…’ என்று கூறியவர், வயிற்றை கத்தியால் குத்தி, இறந்து போனார். அங்கு வந்து, நடந்ததை அறிந்து, வேதனைப்பட்டார் சுந்தரர்.
அப்போது, அவர் முன் சிவன் தோன்றி, கலிக்காமருக்கு உயிர் கொடுத்தார். நடந்த விஷயங்களைச் சொல்லி, கலிக்காமரைத் தேற்றினார். அதன்பின், கலிக்காமரும், சுந்தரரும் நண்பர்களாயினர்.
கலிக்காமரின் குருபூஜை, ஆனி மாதம், ரேவதி நட்சத்திரத்தில் வருகிறது. இந்த நன்னாள் முதல், கடவுளிடம் நாட்டில் மழையும், அமைதியும் வேண்டும், எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற, பொதுவான கோரிக்கைகளை வைப்போம். மற்ற கோரிக்கைகளுக்காக, அவர் கொடுத்த உடலைக் கொண்டு உழைப்போம்