வரிகளுக்கான எண்களை நீக்க

வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பில், வேர்ட் தானாக வரிகளுக்கு எண்களை இடும் டூல் ஒன்றினைக் கொண்டுள்ளது. இதனை இயக்கினால், வரிகளுக்கு எண்கள் தாமாக வழங்கப் படும். ஆனால், டாகுமெண்ட் தயாரிப்பு முடிவடைந்தவுடன், எண்களை நீக்க நீங்கள் விருப்பப்படுவீர்கள். எண்கள் இருப்பது, டாகுமெண்ட் டின் நோக்கத்தினைக் கெடுப்பதாக அமையும்.மொத்தமாக இவற்றை நீக்க கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
1. ரிப்பனில் Page Layout டேப்பினைக் காட்டவும்.

2. Page Setup குரூப்பில், Line Numbers என்பதில் கிளிக் செய்திடவும். இனி, வேர்ட் Page Setup டயலாக் பாக்ஸின் Layout டேப்பினைக் காட்டும்.
3. அடுத்து Line Numbers பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Line Numbers டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
4. இங்கு கிடைக்கும் Add Line Numbering என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்துவிடவும்.
5. ஓகே கிளிக் செய்து Line Numbers டயலாக் பாக்ஸினை மூடவும்.
தொடர்ந்து பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடவும்.

%d bloggers like this: