Daily Archives: ஜூன் 21st, 2014

வெளிநாடுகளில் உள்ள இந்திய கறுப்பு பணத்தின் அளவு ரூ.120 லட்சம் கோடி : ஆய்வில் தகவல்

புதுடில்லி : வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தின் அளவு சுமார் ரூ.120 லட்சம் கோடி என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கணக்கிடப்பட்டுள்ளது. அசோசம் தொழில்துறை நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு கறுப்பு பணத்தின் அளவு இந்தியாவின் சராசரி உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ரூ.114 லட்சம் கோடி ஆகும்.

Continue reading →

தி.மு.க.வில் அதிரடி நடவடிக்கை: மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 33 நிர்வாகிகள் நீக்கம்!

சென்னை: தி.மு.க.வின் 3 மாவட்ட செயலாளர்கள் உள்பட 33 தி.மு.க. பொறுப்பாளர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க. தலைமை விடுத்துள்ள அறிவிப்பில், ”நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்ததையடுத்து, கட்சியில் மறுசீரமைப்புக்காக குழு அமைக்கப்பட்டது.

Continue reading →

தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் – மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.
* சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.
* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாற-லும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.

Continue reading →

யாமறிந்த மொழிகளிலே, எல்லாமே இனிக்குமென காண்போம்! (ஜெர்மன், ஜாப்பனீஸ், ஃபிரெஞ்ச்….)

‘ஆங்கிலம் கற்றுக்கொண்டால் மட்டுமே உலகில் எந்த மூலைக்கும் சென்று சமாளிக்கலாம்’ என்கிற நினைப்பு… நியாயமானதாக இருக்கலாம். அதேசமயம், படிப்பு, வியாபாரம் என்று அனைத்துத் துறைகளிலும் தங்கள் தாய்மொழி வழியில் மட்டுமே இன்றும் இயங்கக்கூடிய நாடுகள் இங்கே அதிகம் என்பதை மறந்துவிட வேண்டாம். ஜெர்மனி, அரபு நாடுகள், ஃபிரான்ஸ், ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகளைப் பட்டியலிட முடியும். இங்கெல்லாம் பணி நிமித்தம் செல்ல நேர்ந்தால், அந்தந்த மொழியைக் கற்க வேண்டியது அவசியம் என்பதால், இப்போது அந்த பயிற்சி வகுப்புகள் சென்னையில் பெருகியுள்ளன. அவற்றில் முதன்மையான மொழிகளின் விவரங்கள் இங்கே…

ஜெர்மன்: ”ஜெர்மன் மொழியில் ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2 என மொத்தம் ஆறு நிலைகள் உள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரையிலும் ஒரு செட் வகுப்புகள், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் என்ற கணக்கில், ஒரு நிலைக்கு ஆறு வாரங்கள் ஆகும். சனி, ஞாயிறு செட் வகுப்புகள் என்றால், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் என நான்கு மாதங்கள் நடக்கும். ஞாயிறு மட்டும் நடக்கும் வகுப்புகளில், ஒரு நிலைக்கு ஆறு மாதங்கள் எடுக்கும். வார நாட்களில் நடைபெறும் வகுப்புகளுக்கு 14 ஆயிரம் ரூபாயும், வார இறுதி நாட்கள் வகுப்புகளுக்கு 16 ஆயிரம் ரூபாயும் ஒரு நிலைக்கான கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 17 வயது நிரம்பியவர்கள் இதைக் கற்கலாம். மொழியோடு சேர்த்து கலாசாரத்தையும் கற்றுத்தருகிறோம்” என்கின்றனர், ஜெர்மன் மொழி கற்றுத்தரும் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ‘கொத்தே’ நிறுவனத்தினர்.

அராபிக்: சென்னை தி.நகரில் உள்ள ‘அராபிக் இன்ஸ்டிடியூட்’ நான்கு வருடங்களாக அராபிக் மொழியைக் கற்றுத்தருகிறார்கள். ஒரே வருடத்தில் மொழியை எழுத,

Continue reading →

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்!

அன்னையரே… உங்கள் குழந்தைகளின் எதிர்காலம், உங்களிடம் தான் உள்ளது. "ஏன்… தந்தையிடம் இல்லையா…’ என்று கேட்கலாம்; அவர்களுக்கு பொறுப்பு இருந்தாலும்,பொறுமை இருப்பதில்லை. குழந்தைகளும், தந்தைக்கு பயந்து நடப்பரே தவிர, தாயின் சொல்லை தான் கேட்பர். தந்தையைவிட, தாயிடம் தான் அதிக அன்பு வைத்திருப்பர்.எனவே, குழந்தையில் எதிர்காலத்தை உணர்ந்து, நீங்கள் தான் செயல்பட வேண்டும்.இதில், போட்டிக்கே இடமில்லை. எனவே, உங்களுடைய விரக்தி, எரிச்சல், கோபம் போன்றவற்றை குழந்தைகளின் மனதை பாதிக்கும் அளவுக்கு வெளிப்படுத்தாதீர். மேலும்,குழந்தைகள் எதிரே பெற்றோர் சண்டையிடுவது, அவர்களது மனதை பாதித்து, படிப்பில் கவனத்தை சிதறச் செய்யும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அதேபோன்று,
குழந்தைகளின் மீது நம்பிக்கை வையுங்கள்.
அத்துடன், சிறு வயதிலேயே தெய்வ பக்தி மற்றும் வயதில் மூத்தோரிடம் பணிவு போன்ற நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுங்கள். அதேநேரம், நல்ல செயல்,

Continue reading →

மாயையிலிருந்து விடுபடமுடியுமா?

மனிதர்கள், அறிவில் சிறந்தவர்களாக, அனைத்து வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களாக, முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும், பிறவி என்று ஒன்று எடுத்து விட்டால், அதன் கர்மங்களிலிருந்தும், மாயைகளிலிருந்தும் விடுபடவே முடியாது. இது குறித்து, தேவி பாகவதம் எனும் நூலில், மகா விஷ்ணுவே, நாரதருக்கு, ஞான உபதேசம் செய்துள்ள சம்பவம் ஒன்று…
மகாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக, பாற்கடலுக்குச் சென்றார் நாரதர். அவரைப் பார்த்ததும், மகாவிஷ்ணுவின் அருகில் இருந்த மகாலட்சுமி, நாணத்தோடு உள்ளே சென்று மறைந்து விட்டார்.
நாரதருக்கு மனம் பொறுக்கவில்லை. ‘பரந்தாமா… என்ன இது! நான் பொறி, புலன்களையும், ஆசை, கோபம் போன்ற மாயைகளை வென்றவன்; அப்படிப்பட்ட என்னைப் பார்த்து, லட்சுமிதேவி ஏன் வெட்கப்பட்டு மறைய வேண்டும்…’ என்றார்.
நாரதரின் கர்வம் கண்டு, நாராயணன் சிரித்தபடியே, ‘நாரதா… மாயையை, யாராலும் வெல்ல முடியாது; வென்றவர்கள், இப்படி வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். உருவமில்லாத காலமும், மாயைக்கு உருவமாக இருக்கிறது. காலமும், மாயையும் சேர்ந்து செய்யும் விளையாட்டை, அறியவோ, வெல்லவோ முடியாது…’ என்றார்.
நாரதர் விடவில்லை. ‘மாயையைப் பற்றி, ஆழமாக அறிய ஆசைப்படுகிறேன்; மாயையை எனக்குக் காட்டுங்கள்…’ என்றார்.
‘சரி, வா…’ என்று கூறி, நாரதரை ஓர் அழகான குளத்திற்கு அழைத்துச் சென்ற மகாவிஷ்ணு, ‘இக்குளத்தில் நீராடி விட்டு வா…’ என்றார்.
அதன்படியே, குளித்து, கரையேறிய போது, பெண்ணாக உருமாறியிருந்தார் நாரதர்.
பெண்ணாக மாறியிருந்த நாரதரை, காலத்வஜன் என்ற மன்னன், மணந்து கொண்டான். நாரதருக்கு பழைய நினைவுகள் ஏதுவும் நினைவில் இல்லை. இத்தம்பதிகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வீரவர்மன் என்று பெயர் சூட்டினர். அப்படியே, 12 பிள்ளைகள் பிறக்க, பேரன், பேத்திகள் என, குடும்பம் பெரிதானது. அரச போகத்துடன், இல்லற வாழ்க்கையில் திளைத்திருந்தார் நாரதர்.
திடீரென்று போர் மூண்டது; கணவன், பிள்ளைகள், பேரன்கள் என, அனைவரும் மடிந்தனர். அப்போது, மகாவிஷ்ணு கிழ வேதியராக வந்து, ‘பெண்ணே… இறந்தவர்களுக்கான கர்மாவைச் செய்ய வேண்டும்; அதற்காக, குளத்தில் மூழ்கி எழ வேண்டும்…’ என்று கூறி, பெண்ணாக இருந்த நாரதரை அழைத்துக் கொண்டு, புருஷ தீர்த்தம் எனும் தடாகத்திற்குச் சென்றார். அத்தடாகத்தில் மூழ்கி எழுந்தவுடன், பழைய உருவத்திற்கு மாறியிருந்தார் நாரதர்.
எதிரில் இருந்த கிழவேதியர் மறைந்து, அங்கே மகாவிஷ்ணு இருந்தார். ‘நாரதா… மாயை குறித்து இப்போது அறிந்து கொண்டாயா…’ என்றார்.
வேத, வேதாந்தங்கள் அறிந்து, பொறி, புலன்களை வென்று, ஆசை, கோபம், மாயைகளை அடக்கியதாகப் பெருமை பாராட்டிய நாரதர், வாய் மூடி, மகா விஷ்ணுவை பின் தொடர்ந்தார்.
உயிர்களின் தோற்றமே மாயை எனும், பிம்பங்களால் ஆனாது; இதில், அனைத்தையும் அறிந்து விட்டோம் என்று நமக்குள் எழும் ஆணவம் கூட, மாயை தான் என்பதை, அறிந்து தெளிய வேண்டும். அனைத்தும் மாயையின் சொரூபம் என்பது தெரிந்து விட்டால், நம்மிடம் இருக்கும், ஆணவம், கோபம், வெறுப்பு, விரோதம், கயமை அத்தனையும் மறைந்து, சக மனிதரை நேசிக்கும் பண்பு நமக்குள் ஏற்படும்.