Daily Archives: ஜூன் 22nd, 2014

‘ஆ… அமெரிக்க மாப்பிள்ளை! ’ அக்கரையிலிருந்து ஓர் அலறல்

”இப்போவெல்லாம், ‘அமெரிக்க மாப்பிள்ளைங்க, இன்ஜினீயரிங் படிச்ச பொண்ணுதான் கேட்கிறாங்க’ என்ற காரணத்துக்காகவே, பெண்களை எல்லாம் பொறியியல் படிக்க வைக்கிறாங்க பெற்றோர்கள் பலர். ஆனா, படிச்ச பொண்ணை, பெரும்பாலான அமெரிக்க மாப்பிள்ளைங்க தேடிக் கல்யாணம் பண்றதுக்குக் காரணமே அங்க மனைவியை வேலைக்கு அனுப்பினா காசு கொட்டும், வீட்டு வேலைகளைப் பார்க்கவும் அடிமை கிடைச்ச மாதிரி இருக்கும்ங்கிற நினைப்புலதான். ஆக, ரெட்டை வேலைச்சுமையால வாடி, வதங்கதான் பல பொண்ணுங்களும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு கல்யாணமாகி இங்க வர்றாங்க.

Continue reading →

உணவு யுத்தம்!-16

இந்தியாவின் முதல் பேக்கரி!

வேட்டை சமூகத்தில் இருந்து வேளாண் சமூகமாக மனிதன் மாறிய காலத்திலேயே, ரொட்டி சாப்பிடும் வழக்கம் உருவாகிவிட்டது.

ரோமானியர்கள் ரொட்டி தயாரிப்பதில் முன்னோடியாக இருந்த தகவல்களை அவர்களின் வரலாற்று நூல்களில் காண முடிகிறது. கி.மு. 168-ல் ரோமில் அடுமனை தொழிலாளர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் செய்யப்பட்ட ரொட்டியும், இன்று நாம் சாப்பிடும் ரொட்டியும் ஒன்று இல்லை. அப்போது அவை அரைத்த தானியத்துடன் உப்பும் வெண்ணெய்யும் சேர்த்து செய்யப்பட்டவை. மாவு அரைக்கும் இயந்திரங்கள் உருவாகாத காலம் என்பதால், ரொட்டி கடினமானதாக இருந்தது. ஏதென்ஸ் நகரின் சாலையில் வைத்து ரொட்டிகள் கூவி விற்கப்பட்டன.

Continue reading →

மிஸ்டர் கழுகு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு!

”தைலாபுரம் பக்கம் போயிருந்​தேன்…” என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார்.

”செயற்குழு என்று அறிவித்து இருந்தாரே டாக்டர் ராமதாஸ்?” என்று எடுத்துக் கொடுத்தோம். ‘ஆமாம்’ என்று தலையாட்டிவாறு கழுகார் ஆரம்பித்தார். ”நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தர்மபுரியைத் தவிர வேறு எங்கும் தலைகாட்டாமல் இருந்த டாக்டர் ராமதாஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திண்டிவனத்தில் நடந்த பா.ம.க செயற்குழு கூட்டத்துக்கு வந்திருந்தார். வழக்கத்தைவிட ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தார். மாநிலத் தலைவரான ஜி.கே.மணி முதலில் பேசினார். ‘தேர்தல் பிரசாரத்துக்கு அய்யா ஏன் வரவில்லை என்று எல்லாரும் கேட்கிறார்கள். அந்தக் கசப்பான நிகழ்வுகள் எல்லாம் மாறும் விதமாகத்தான் இந்தச் செயற்குழு கூட்டம் அமைந்துள்ளது. அ.தி.மு.க 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அதை விஞ்சி நிற்கிற வெற்றியை தர்மபுரியில் நாம் பெற்றிருக்கிறோம். தர்மபுரி தொகுதியில் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டிருந்தால்கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்தளவுக்கு நாம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம். எல்லோருடைய கருத்தையும் கேட்டுத்தான் அய்யா எந்த முடிவையும் எடுப்பார். இனி அய்யா சர்வாதிகாரியாக இருந்து எந்த உத்தரவைப் பிறப்பித்தாலும், நாங்கள் பின்பற்றத் தயாராக இருக்கிறோம்’ என்று எடுத்த எடுப்பிலேயே பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி வைத்தார்.”

Continue reading →