Daily Archives: ஜூன் 23rd, 2014

கச்சத்தீவு: நிலவியல் ரீதியாக இந்திய நிலப்பரப்பே!

சமீப காலங்களில், நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும், வளர்ந்து வரும் எல்லைப் பங்கீடுகள், மிகப்பெரிய பிரச்னைகளாக உருவெடுத்து வருகின்றன. இந்தியா – இலங்கை இடையே, வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள கச்சத்தீவும், இரு நாடுகளுக்கும் இடையே, மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது.

Continue reading →

தசாவதார தரிசனம்

ஜூன் 23 – கூர்மஜெயந்தி

தமிழகத்தில் தசாவதார கோவில்கள் குறைவு. ஸ்ரீரங்கம் மற்றும் திருநெல்வேலி அருகிலுள்ள அகரம் போன்ற இடங்களில் மட்டுமே இத்தகைய கோவில்கள் உள்ளன.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரோட்டிலுள்ள ஊர், வல்லநாடு; இங்கிருந்து, 2 கி.மீ., தூரம் சென்றால், அகரம் என்ற கிராமம் வரும். இவ்வூரிலுள்ள தசாவதாரப் பெருமாள் கோவில், சிறப்பு மிக்கது.
ஒரு காலத்தில், ராமாயணமும், மகாபாரதமும் மட்டுமே நாடகங்களாக நடிக்கப்பட்டன. ராமன், கிருஷ்ணன் பற்றி தெரிந்த அளவு, திருமாலின் மற்ற அவதாரங்களின் சிறப்பு குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை. இது, அகரம் கிராமத்தில் வசித்த, மித்ரசகா என்ற இளைஞரின் மனதில், தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், அவர் தசாவதார நாடகக்குழு ஒன்றைத் துவங்கி, அனைத்து அவதார வரலாற்றையும் நாடகங்களாக வெளிப்படுத்தினார். இந்த தகவல், தமிழகமெங்கும் பரவவே, பல ஊர்களிலும் அவரை அழைத்து, நாடகம் நடத்தினர்.
காஷ்மீர் மன்னன் குங்குமாங்கதன் சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு இந்த தகவல் கிடைக்கவே, தன் தேசத்திற்கு மித்ரசகாவை வரவழைத்தான். இங்கிருந்து குதிரை வண்டிகளில் பல மாதங்களாக பயணம் செய்து, காஷ்மீரை அடைந்தார் மித்ரசகா.
அவரது நடிப்பு மக்களை மட்டுமல்ல, குங்குமாங்கதனின் மகள் சந்திரமாலினியையும் கவர்ந்தது. அதனால், அவள் மித்ரசகா மேல் காதல் வயப்பட்டாள். மன்னன் முதலில் மறுத்தாலும், மகளின் பிடிவாதத்தால் மித்ரசகாவுக்கே பெண்ணைக் கட்டிக் கொடுத்தான். மணமக்கள் அகரம் கிராமத்துக்கே திரும்பினர். மாலினி, பாடும் திறன் கொண்டவள் என்பதால், கணவரின் நாடகங்களில் அவளே பாடி வந்தாள்.
முதுமையடைந்த மித்ரசகா ஒரு நாள் இறந்து போனார். சோகம் தாளாத மாலினி, தங்கள் கிராமத்தில் ஓடும் தாமிரபரணி வெள்ளத்தில் குதித்தாள். அப்போது, ஒரு அந்தணர் அவளைத் தூக்கி, ‘அஞ்சேல்’ என்று கூறி, ‘ஓம் வாசுதேவாய நமஹ’ என்ற மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து, இம்மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே மீதி காலத்தை கழிக்க வேண்டினார். அவளும் அவ்வாறு சொல்லி வரவே, அவளின் பக்தியால் மகிழ்ந்த திருமால், அவளுக்கு தசாவதார காட்சி அளித்தார்.
திருமால் காட்சி தந்த இடத்தில் உருவான கோவிலே, அகரம் தசாவதாரக் கோவில். பெருமாளை இங்கு தசாவதார பெருமாள் என்கின்றனர். பத்து அவதார மூர்த்திகளையும், இங்கு தரிசிக்கலாம்.
மாசி வளர்பிறை துவாதசியன்று, ‘தசாவதார ஜெயந்தி’ நடைபெறும். இதுதவிர, தனித்தனியாகவும் ஜெயந்தி நடத்தப்படும். கூர்ம ஜெயந்தி, ஆனி மாத தேய்பிறை துவாதசியன்று நடக்கிறது. சனி திசை, ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச்சனி நடந்தால், கூர்ம ஜெயந்தியன்று, தாமிரபரணியில் உள்ள தசாவதார தீர்த்த நீராடு துறையில் நீராடி, அகரம் பெருமாளை வணங்கி வரலாம். போன்: 98421 14287.

சொந்த வீடு என்பது உங்கள் கனவா? By Concert

Housing Loan press_Page_1

Continue reading →

பயன்படுத்தப்படும் மின்சார ப்ளக்குகள் மற்றும் சாக்கெட்டுகள் பாதுகாப்பனதா?-By Concert

Electric Plug & Socket Press_Page_1

Continue reading →