நாட் ரீச்சபிள் நோக்கியா! கார்ப்பரேட் கலவரங்களின் நிஜம்
25 வயதில் வேலை தேடுவார்கள்; வி.ஆர்.எஸ் வாங்குவார்களா? அந்தக் கொடுமையைக் காண சென்னை, நோக்கியா நிறுவனத்துக்கு வர வேண்டும். அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டாய ‘வி.ஆர்.எஸ்’ கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட நோக்கியா, இன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நடுரோட்டில் நிறுத்தியிருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளை கடவுளாகவும், பன்னாட்டு நிறுவனங்களை கடவுள் தந்த வரங்களாகவும் பலர் கருதும் நிலையில், அந்தக் கடவுளால் கைவிடப்பட்ட பக்தர்களின் நிலை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, நோக்கியா டெலிகாம் சிறப்புப் பொருளாதார மண்டலம். புகழின் உச்சியில் இருந்த நோக்கியா, தமிழ்நாட்டுக்கு வந்ததைப் பெருமிதமாகக் கருதினார்கள் ஆட்சியாளர்கள். மக்களும் அவ்வாறே நினைத்தனர். ‘ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு’ என்பது அப்போது கொடுக்கப்பட்ட பரபரப்பான வாக்குறுதி. சொன்னதுபோலவே சுமார் 8,000 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றனர். நோக்கியாவுக்கான உதிரி பாக விநியோக நிறுவனங்களில் சுமார் 14 ஆயிரம் பேர் பணிபுரிந்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை… என, சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து கொத்துக் கொத்தாக நோக்கியாவை நோக்கிப் படை எடுத்தனர். நான்கு திசைகளில் இருந்தும் நோக்கியாவின் பேருந்துகள், தொழிலாளர்களைச் சுமந்தபடி இரவும் பகலும் இழைந்தன.
2014 – எந்த பிரவுசர் செயல்திறன் மிக்கது?
முன்னொரு காலத்தில், இணையப் பயன்பாடு மக்களிடம் ஊன்றத் தொடங்கிய பொழுதில், அனைவரும் ஏறத்தாழ நெட்ஸ்கேப் (Netscape) கம்யூனிகேடர் என்ற பிரவுசரையே பயன்படுத்தி வந்தனர். எல்லாரும் அதனைப் பயன் படுத்துவதில் மனநிறைவு கொண்டனர். தொடர்ந்த காலங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரவுசர்கள் வந்தன. பயனாளர்கள் இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அதன் செயல் தன்மையின் அடிப்படையில், தர வரிசையில் வைத்தனர். இருப்பினும், அனைவரின் ஏகோபித்த பிரவுசராக நெட்ஸ்கேப் பல காலம் இருந்து வந்தது.