தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள்: முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்துவைக்கிறார்
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் மருந்துகளை விற்பதற்காக சென்னை உள்பட 10 இடங்களில் அம்மா மருந்தகங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்.
அடுத்தகட்டமாக மேலும் 90 இடங்களில் இந்த மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளன.
அதிமுக அரசு பொறுப்பேற்றதும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்க பசுமைப் பண்ணை காய்கறி அங்காடி, அம்மா உணவகம், அம்மா குடிநீர் உள்ளிட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
உணவு யுத்தம்!-17
பாயசம் கசக்கிறதா?
‘திருமண விருந்தில் பரிமாறப்பட்ட ஜவ்வரிசி பாயசம் சாப்பிட்டு 16 பேர் மயக்கம், மருத்துவமனையில் அனுமதி’ என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். பாயசம் சாப்பிட்டு ஏன் மயக்கமடைந்தார்கள் என அரசு மருத்துவரான எனது நண்பரிடம் கேட்டேன். அவர் ஆதங்கமான குரலில் சொன்னார்: ”எங்கேயும் நம்பி பாயசம் குடித்துவிடாதீர்கள். சில கம்பெனிகள் தயாரிக்கிற ஜவ்வரிசிகள் கலப்படமானவை. அதில் மக்காச்சோள மாவும் செயற்கை ரசாயனங்களும் கலந்துவிடுகிறார்கள். அந்தப் பாயசம் சாப்பிட்டால் வாந்திபேதி ஏற்படும்.”
என்னால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. நிஜம்தானா என மறுபடியும் கேட்டேன்.
அதிக வீட்டுக் கடன்… என்னென்ன வழிகள்?
இன்றைய தேதியில் ரியல் எஸ்டேட் பிசினஸ் டல்லடித்தாலும், வீடுகளின் விலை என்னவோ உச்சத்தில்தான் இருக்கிறது. நகர்ப்புறத்தையட்டி வீடு வாங்க குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாயும், புறநகர்ப்பகுதி எனில் 25-35 லட்சம் ரூபாயும் தேவை. இவ்வளவு பணத்தைத் திரட்டுவது பலருக்கும் இயலாத காரியம். அந்தவகையில் சொந்த வீடு கனவு பலருக்கும் கைகூடக் காரணமாக இருப்பது வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன்தான்.
வீட்டுக் கடன் என்கிறபோது வீட்டின் மதிப்பில் சுமார் 80 சதவிகித தொகைக்குத்தான் கடன் கிடைக்கும். மீதி 20 சதவிகித தொகையை வீடு வாங்குபவர் தன் கையில் இருந்து போடவேண்டும். இந்த 80 சதவிகித தொகையானது, கடனை திரும்பச் செலுத்தும் தகுதிக்கு ஏற்பவே கடன் தரப்படும். திரும்பச் செலுத்தும் திறன் குறைவாக இருந்தால், குறைவான தொகையே வீட்டுக் கடனாகக் கிடைக்கும். அப்போது திட்டமிட்டபடி வீட்டை வாங்க முடியாமல்கூட, போக வாய்ப்பு இருக்கிறது
மிஸ்டர் கழுகு: சகோதரச் சண்டையில் சரிந்த தலைகள்!
தி.மு.க-வில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட 33 பேர் ஜூ.வி-க்கு அளித்த பேட்டிகளை, கழுகார் உள்ளே நுழைந்ததும் வாங்கிப் படித்தார்.
”முன்னாள் மத்திய அமைச்சரும் தஞ்சை மாவட்டச் செயலாளருமான பழனிமாணிக்கம் தவிர, மற்றவர்கள் அனைவரும் தைரியமாகத்தான் பேசியிருக்கிறார்கள்!” என்றபடி தி.மு.க தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.
”சனிக்கிழமை காலையில் கோபாலபுரம் பரபரப்பாக இருந்தது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர் பட்டியலுடன் கருணாநிதியைப் பார்க்க ஸ்டாலின் நுழைகிறார். ‘தேர்தலில் சரியாக வேலை பார்க்காதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் கட்சி நிர்வாகிகளிடம் பயம் இருக்கும்’ என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அதனை கருணாநிதி மறுக்கவில்லை. அதைத் தொடர்ந்து ஸ்டாலின் கொடுத்த பட்டியல்தான் கருணாநிதியைப் பதற வைத்துள்ளது!”
”ஏனாம்?”
விண்டோஸ் எக்ஸ்பியில் தொடர்பவர்களுக்கு
திரைப்படம் ஒன்றில், கவுண்டமணி, தான் வாடகைக்கு விடும் பெட்ரோமேக்ஸ் லைட் கெட்டுப் போன பின்னர், அதனை வாடகைக்கு கேட்டு வருபவரிடம், "பெட்ரோ மேக்ஸ் லைட்டே தான் வேணுமா?” என்று கேட்பார். இது தமிழ் அறிந்த மக்களிடம் வேடிக்கையான வாக்கியமாக மாறிவிட்டது.
இப்போது தொடர்ந்து, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவர் களைப் பார்த்து, அதே தொனியில், "எக்ஸ்பி சிஸ்டமே வேண்டுமா?” என்று கேட்க வேண்டியுள்ளது.
நகைப்புக்குரிய இந்தக் காட்சியைச் சற்றுப்புறம் தள்ளி, இதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தொடர்பவர்களுக்கான சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வேண்டாம்: எக்ஸ்பி சிஸ்டங்களில், பரவலாகப் பயன் படுத்தப்படும் பிரவுசர், இன் டர்நெட் எக்ஸ் புளோரர் 8 ஆகவே உள்ளது. இந்த பிரவுசரின் பதிப்பு 11 வெளியாகிப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, அது எவ்வளவு பழைய பதிப்பு என்பதனை நீங்கள் உணரலாம். இது அப்டேட் செய்யப்படுவதில்லை என் பதால், இணையம் வழி கம்ப்யூட்டர்களைக் கைப்பற்று பவர்கள் அனுப்பும் வைரஸ்களுக்கு, இந்த பிரவுசர் எளிதான வழியை அமைத்துத் தரும். எனவே, இதனைப் பயன்படுத்த வேண் டாம். இதன் இடத்தில், குரோம் அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்தவும். இந்த இரண்டு நிறுவனங்களும், தங்களின் பிரவுசர்களுக்கான பாதுகாப்பு பைல்களைத் தொடர்ந்து தர இருப் பதாக அறிவித்திருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது.