Daily Archives: ஜூன் 27th, 2014

‘சூரிய’ பலன்கள்! கிரகச் சேர்க்கை…

ருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து காணப்படுவது இயல்பு. ஒரு பாவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம்.

நவகிரகங்களில் சூரியனே முதன்மையானவர் என்பதால் சூரியனில் இருந்தே தொடங்குவோம்.

சூரியன் – சந்திரன்: – ஜனன ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து காணப்பட்டால், அந்த ஜாதகருக்கு ஸ்திரமான புத்தி இருக்காது. சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும் ஆளாகக் கூடும். கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும்.

Continue reading →

கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள்

இன்று பரவலாக அனைவரும் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக கூகுள் இமெயில் உள்ளது. இதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம். மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல் லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன. முதலில் இந்த ஷார்ட் கட் கீகளைச் செயல்படுத்த, கூகுள் மெயில் தளத்தில் சென்று, செட்டிங்ஸ் பக்கத்தில், ஷார்ட்கட் கீகளை இயக்கத் தேவையான வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
1. c (Compose): புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.

Continue reading →

தானத்தில் சிறந்தது அன்னதானம்!

மனிதர்கள் அனைவருமே ஒருவாய் சோற்றுக்குத் தான், எல்லா சிரமங்களையும் அனுபவிக்கின்றனர்.
சித்த புருஷர்களிலேயே, முதல்வராகக் கருதப்படும் பட்டினத்தாரே, ‘அன்ன விசாரம் அதுவே விசாரம்…’ எனப் பாடியிருக்கிறார் என்றால் நாம் எந்த மூலை?
இதை, நமக்கு அறிவுறுத்தவே, கடவுள் வழிபாட்டில் அன்னதானம் முக்கிய இடத்தை வகிக்கிறது.
அடுத்தவர் பசித்திருக்கப் பார்க்காததும், அடுத்தவர் பசியைப் போக்குவதுமே ஆன்மிகம்.
ஏழாம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அஞ்ஞான இருளை போக்கி, மக்களிடம் ஞான மார்க்கத்தை புகுத்திக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும், திருவீழிமிழலை எனும் திருத்தலத்தில் தங்கி, நேத்ரார்ப்பணேஸ்வரர் கோவிலில், சிவபெருமானை, வழிபட்டுக் கொண்டிருந்த வேளை—
அந்த ஊரில் மழையில்லாததாலும், நதிகளில் நீர்ப்பெருக்கு குறைந்ததாலும், பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் மிகுந்த பசித் துன்பம் அடைந்தனர்.
அப்போது சிவபெருமான், ‘நீங்கள் இந்தக் காலபேதத்தால் மனத்துயர் அடைய வேண்டாம். உங்களுக்காக தினமும் படிக்காசு தருகிறோம். அவற்றை வைத்து மக்களின் பசித் துன்பத்தை தீருங்கள்…’என்று கூறி, கோவிலின் கிழக்கு வாசல் படியிலும், மேற்கு வாசல் படியிலும், தினந்தோறும் படிக்காசு – பொற்காசு வைத்தருளினார்.
அந்த இரு காசுகளையும், திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் எடுத்து, அதன் மூலம் பண்டங்களை வாங்கி, உணவு தயாரித்து, ‘அடியார்கள் எல்லாரும் அமுது உண்ண வாருங்கள்…’ என, பறைசாற்றித் தெரிவித்து, அன்னமிட்டனர்.
இந்தச் செயல், பஞ்சம் தீரும் வரை தொடர்ந்தது.
‘அன்னத்தை இகழாதே; அன்னத்தை உற்பத்தி செய்…’ என, மறைகளும் முழங்குகின்றன. அதனால், எந்த விதத்திலும், ஒரு பிடி அன்னமாக இருந்தாலும், ஒரு பருக்கை அன்னமாக இருந்தாலும் அன்னத்தை வீணாக்கக் கூடாது.
இதிகாசங்கள், புராணங்கள், மறைகள், வழிபாட்டு முறைகள் என, எல்லாவற்றிலும் புகழப்படும் அன்னதானத்தை, முடிந்த வரை செய்வோம்!