Daily Archives: ஜூன் 30th, 2014

பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது; பிரதமர் மகிழ்ச்சி

ஸ்ரீஹரிகோட்டா : பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. பிரதமர் நரேந்திரமோடி இந்த நிகழ்வை பார்ப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்தார். விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய பின்னர் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை ஆரத்தழுவி பாராட்டினார்.பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்ச்சி தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ, வர்த்தக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பி.எஸ்.எல்.வி., சி – 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது.

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு ; ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக

Continue reading →

சசிகலா என் உறவினர் அல்ல… சுதாகரன் வளர்ப்பு மகனும் அல்ல!

”ஜெயலலிதாவுக்கு சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் உறவினர்களும் அல்ல. சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் அல்ல. அவர் திருமணச் செலவை ஜெயலலிதா செய்யவும் இல்லை. நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார்தான் சுதாகரனின் திருமணத்துக்கான செலவுகள் அனைத்தும் செய்தார்” என்ற அதிரடி வாக்குமூலத்தைக் கொடுத்து அதிர்ச்சியைக்  கிளப்பியிருக்கிறார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார். இது அந்த வழக்கில் மட்டுமல்லாமல், தமிழக அரசியலிலும் முக்கியமான வாதமாக அமைந்துவிட்டது.

பெங்களூரில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு இறுதி வாதம் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதங்கள் தொடங்கியுள்ளன. முதலில் ஜெயலலிதா தரப்பின் வாதங்களை மூத்த வழக்கறிஞர் குமார் வைத்து வருகிறார். அவர் முதல் இரண்டு நாட்கள் வைத்த வாதங்களை, கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வைத்த வாதங்கள் அதிர்ச்சிரகமாக அமைந்து இருந்தன. பல்வேறு வழக்குகளை மேற்கோள்காட்டி குமார் வாதிடுவதால், நீதிபதி குன்ஹாவும் உற்று கவனித்து வருகிறார். 

Continue reading →

டெஸ்க்டாப் மேலாக பைல்களைப் பதியலாமா?

விண்டோஸ் இயக்க முறைமையை அதன் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தி வருகிறேன். அதில் உருவாக்கப்படும் பைல்களை, டெஸ்க்டாப் மேலாக சேவ் செய்திடும் செட் அப் எதிலும் இல்லை. மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் தான் அவை சேவ் செய்யப்படும். ஆனால், நம்மில் பலர், டெஸ்க்டாப் மேலாகப் பைல்களைப் பதிவதனையே பழக்கமாகக் கொண்டுள்ளோம். இது நல்ல பழக்கமா? இல்லையா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று பார்க்கலாம்.
டெஸ்க்டாப்பில் பைல்களைப் பதிவு செய்து வைப்பதற்கு முதல் காரணம், இந்த பைல்களை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ளலாம் என்பதே. நம் கண்கள் முன்பு இவை எப்போதும் காட்சி தரும் அல்லவா? எனவே தான் பலரும் பைல்களை இதில் சேவ் செய்கின்றனர்.

Continue reading →

மாங்கல்யம் காக்கும் ஆனித் திருமஞ்சன தரிசனம்! நமசிவாய…

ரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது காங்கேயம்பாளையம். இங்கே, காவிரியாற்றின் நடுவே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநட்டாற்றீஸ்வரர். ஆற்றின் இக்கரை ஈரோடு மாவட்டமாகவும், அக்கரையானது நாமக்கல் மாவட்டமாகவும் உள்ளது.

ஈசன் அகத்தியருக்கு அருளிய தலம் இது. ‘நான் இங்கேயே இருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க உள்ளேன்’ என அசரீரியாகச் சொல்லி, அதன்படி தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் சிவனார். ஆற்றின் நடுவே குடிகொண்டிருப்பதால், சிவனாருக்கு ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது

Continue reading →