அமேஸான் நிறுவனத்தின் ஃபையர் ஸ்மார்ட் போன்
அனைத்து மக்களுக்கான ஸ்மார்ட் போன் என தன்னுடைய முதல் ஸ்மார்ட் போனை "Fire” என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது அமேஸான் நிறுவனம். இருபது ஆண்டுகளுக்கு முன்னால், நூல்களை இணையதளம் வழியாக விற்கும் நிறுவனமாக அமேஸான் தொடங்கப்பட்டது. இன்று, உலகின் மிகப் பெரிய வர்த்தக இணைய தளத்தினை நடத்தும் நிறுவனமாக உருவாகியுள்ளது.
தானே தயாரிக்கும் இ-புக் மற்றும் டேப்ளட் பி.சி.க்களை விற்பனை செய்தும் வருகிறது. எலக்ட்ரானிக் நூல்களைத் தயாரித்து வழங்குகிறது. க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் அதிக இடம் தரும் நிறுவனமாகவும் இயங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக, கட்டணம் பெற்றுக் கொண்டு வீடியோ, மின் நூல்கள் மற்றும் இசைக் கோப்புகளை வழங்கி வருகிறது.
பணம் கொட்டும் தொழில்கள்–சிஎல்சி பிரிக்குகள் -குறைந்த எடை காங்க்ரீட் கற்கள்
கட்டுமானத் துறையில் செங்கற்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் கற்கள்தான் சிஎல்சி (Cellular Lightweight Concrete) எனப்படும் இந்த எடை குறைந்த கற்கள். செங்கற்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமானத் துறையில் ஒரு மாற்றுத் தொழில்நுட்பமாக நிலக்கரிச் சாம்பலைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வகைக் கற்கள்தான் இப்போது பரவலாகக் கட்டடம் கட்ட பயன்படுத்தப்படுகின்றன.
ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் என்கிற வகைக் கற்களும் மாற்றுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதுதான். ஆனால், ஃப்ளை ஆஷ் கற்கள் நிலக்கரிச் சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம், மலை மாவு போன்றவற்றைக் கலந்து தயாரிக்கப்படுவதால், அதன் எடை அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகக் கட்டுமானத் துறையில் குறிப்பிட்ட சதவிகிதம் அளவுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்துவார்கள். ஆனால், சிஎல்சி கற்கள் நிலக்கரிச் சாம்பல் மற்றும் சிமென்ட் கொண்டு தயாரிக்கப்படுவதால் எடை குறைவாகவே இருக்கும். இதைக் கையாளுவதும் எளிதானது. மேலும், செங்கற்களைவிட அளவில் பெரியதாகவும் இருக்கும்.
வேர்ட் டிப்ஸ்!-டேபிள் செல் டெக்ஸ்ட் மாற்றம்:
டேபிள் செல் டெக்ஸ்ட் மாற்றம்: வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பதனை, நெட்டு வாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்பட வேண்டும்.