Daily Archives: ஜூலை 2nd, 2014

இனிது இனிது வாழ்தல் இனிது!

பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் ‘காதலினால் சாகாம லிருத்தல் கூடும். கவலை போம்… அதனாலே மரணம் பொய்யாம்…’ என்கிறார் பாரதி. மரணத்தையே பொய்யாகச் செய்கிற அந்தக் காதலைத் தூண்டுவது ஒரு ஹார்மோன். காதல் கண்களை மறைக்க, அதில் நீங்கள் கரைந்து உருகவும், காதல் காணாமல் போகும் போது, உயிரை மாய்த்துக் கொள்ளவோ, உயிரை எடுக்கவோ துணியவும் காரணம் காதல்

Continue reading →

குண்டக்க மு.க.ஸ்டாலின் மண்டக்க!

ர்மத்தின் தலைவன்’ சினிமா மூலம் தமிழகத்தில் தடம்பதித்த குஷ்பு, இப்போது தன் கட்சிக்குள் அதர்மம் தலைதூக்கிவிட்டதாக நினைத்து வேண்டாவெறுப்பாக தி.மு.க-வில் இருந்து வெளியேறிவிட்டார். 

தி.மு.க-வை விட்டு குஷ்பு வெளியேறியது அந்தக் கட்சிக்கு ஒரு கெட்ட சமிக்ஞை. வெளியேறிய குஷ்பு தினமும் ஜெபித்து வந்தது, ‘தலைவர் கலைஞர் வழிதான் என் வழி’ என்பதுதான். அவரை வெளியேறவைத்ததன் மூலமாக, ‘கலைஞர் வழி’ செல்பவர்களுக்கான பாதை அடைக்கப்பட்டுவிட்டது என்பதன் அடையாளம் இது. ‘சூப்பர் குடும்பம்’ என்ற சீரியலில் நடிப்பதற்காக எ.வ.வேலுவால் அழைத்துவரப்பட்டு, அதன் பிறகு கோபாலபுரக் குடும்பத்துக்குள் ஐக்கியம் ஆனவர் குஷ்பு. இப்போது ‘சூப்பர் குடும்பமே’ அவரை ரிப்பேர் ஆக்கிவிட்டது.

Continue reading →

சர்க்கரை அளவை கட்டுக்குள் வையுங்கள்; அலட்சியம் வேண்டாம்!

உலகில், நீரிழிவு நோய் (சர்க்கரை) பாதிப்பில் சீனாவை மிஞ்சும் அளவுக்கு, நம் நாட்டில் பாதிப்பின் வேகம் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால், பக்க விளைவுகளால் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சர்க்கரை நோய் பாதிப்புள்ளோர், வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடுவது அவசியம்

1 நீரிழிவு நோய் பாதிப்பு என்றால் என்ன?; பாதிப்பின் தன்மை இந்தியாவில் எந்த அளவில் உள்ளது? Continue reading →

கண்டிஷன்ஸ் அப்ளை: படித்துப் பார்த்து வாங்குங்கள்!

இன்றைக்கு எந்த ஒரு பொருளைத் தயாரிக்கும் நிறுவனமும், ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற இரு வார்த்தைகளை  நட்சத்திரக் குறியுடன் அச்சிடத் தவறுவதில்லை. சோப்பு முதல் செல்போன்கள் வரை எல்லா பொருட்களிலும் இந்த வார்த்தைகளைக் கட்டாயம் பார்க்கலாம். நிறுவனம் தயாரிக்கும் பொருளில் ஏதாவது குறை இருந்தால் அல்லது சேவை சரியில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் செய்தால், ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற வார்த்தைகளைக் காட்டி தப்பித்துவிடுகிறது அந்த நிறுவனம்.

மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் என முதலீட்டு உலகிலும் ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற எச்சரிக்கை இருந்தாலும், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் எனப்படும் நுகர்வோர் பொருட்களில்தான் இந்த வார்த்தைகளை  சாதுரியமாகப் பயன்படுத்துகின்றன பல நிறுவனங்கள். நாம் வாங்கும் இந்தப் பொருட்களில் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிய எழுத்துகளில் லென்ஸ் வைத்துப் படிக்கிற மாதிரி அச்சிடப்பட்டிருக்கும் இந்த வாசகங்கள். ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என நிறுவனங்கள் அச்சிடுவதோடு சரி, என்ன நிபந்தனைகள் என்பதை எந்த நிறுவனமும் சொல்வதில்லை. என்ன நிபந்தனை என அந்த நிறுவனத்திடம் கேட்டால், அதை எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று படித்துக் கொள்ளுங்கள் என்கின்றன.

Continue reading →

இணைய தளம் கிடைப்பதில் சிக்கல்கள்

இணைய இணைப்பு பெற்று, சில தளங்களை நாம் காண்பதற்கு முகவரி அமைத்து இயக்கியவுடன், சில நொடிகளில் அந்த தளங்கள் நம் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்பட்டால், நாம் அத்தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால், அந்த தளம் நமக்குக் கிடைக் காமல், சில வேளைகளில் பிழைச் செய்திகள் காட்டப்படும். ஒவ்வொரு பிரவுசரும் இந்த பிழைச் செய்திகளை ஒருவித அமைப்பில் காட்டலாம். இருப்பினும் அவை தரும் தகவல்கள் பொதுவானதாகவே இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. பாதுகாப்பு சான்றிதழ் சிக்கல் (Certificate error): இத்தகைய பிழைச் செய்திகள் பெரும்பாலும் SSL certificate error அல்லது Security Certificate error எனக் கிடைக்கும். இது HTTPS சுருக்கத்தில் ஏற்பட்ட பிழை. ஏகூகூககு எனத் தன் முகவரி தொடக்கத்தினைக் கொண்ட இணைய தளங்களைப் பெற முயற்சிக்கையில் மட்டுமே

Continue reading →

புலவர் கோவில்!

ஜூலை 2 – மாணிக்கவாசகர் குருபூஜை

‘திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்…’ என்பார் ராமலிங்க அடிகளார். தேனினும் இனிய திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகர் குருபூஜை, ஆனி மகம் நட்சத்திரத்தன்று நடைபெற உள்ளது. இந்நாளில், தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மாணிக்கவாசகர் கோவிலுக்குச் சென்று வரலாம். தெய்வப்புலவர் ஒருவரை பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்த கோவில் இது.
மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்தவர் மாணிக்கவாசகர். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தன் அமைச்சராக்கி, ‘தென்னவன் பிரம்மராயன்’ என்று, பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து, தன் படைக்கு, குதிரைகள் வாங்கி வரும்படி அனுப்பினான். அவர், திருப்பெருந்துறையை (ஆவுடையார் கோவில்) அடைந்த போது, குருந்த மரத்தின் அடியில், சிவபெரு மான், குருவாக இருந்து, சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட மாணிக்கவாசகர், தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, அவரது திருவடியில் விழுந்து, தன்னையும் ஆட்கொண்டு அருளும்படி வேண்டினார்.
சிவனும் அவருக்கு திருவடி தீட்சை வழங்கினார். குதிரை வாங்க வைத்திருந்த பணத்தை, கோவில் திருப்பணிக்கு செலவிட்டார். பின், மன்னன் உத்தரவுபடி நாடு திரும்பினார். அவருக்காக, சிவன் நரிகளை, குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை, மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும், அவை நரிகளாக மாறவே, மாணிக்கவாசகரை தண்டித்தான் மன்னன். அவரை விடுவிக்க திருவிளையாடல் செய்து, தன் பக்தரின் பெருமையை ஊரறியச் செய்தார் சிவன்.
சிதம்பரம் சென்ற மாணிக்கவாசகர், சிவனை புகழ்ந்து பாடினார். அந்த பதிகங்களின் சொற்கள் ஒவ்வொன்றும், மாணிக்கம் போல இருந்ததால், அவருக்கு, மாணிக்கவாசகர் என, பெயர் வந்தது. ஏனெனில், இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் வாதவூரான். தன்னுடைய பாடல்களால் மாணிக்கவாசகர் என, பெயர் பெற்ற இவருக்கு, சின்னமனூரில் கோவில் எழுப்பப்பட்டது.
ஆனி மகம் மட்டுமன்றி, ஒவ்வொரு தமிழ் மாத மகம் நட்சத்திரத்தன்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்குள்ள சண்டிகேஸ்வரர் சிலை, நின்ற நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. சிவன் சன்னிதி முன், சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடுடன் அருளுகிறார். இங்கு ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். மாணிக்கவாசகர் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார்.
குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக, மாணிக்கவாசகருக்கு அர்ச்சனை செய்கின்றனர். தமிழால், சிவனருள் பெற்றவர் என்பதால், இவருக்கு தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படுகிறது. விழாக்களின் போது, இவர் மந்திரி அலங்காரத்தில் பவனி வருகிறார். ஆனி, மார்கழி மாத உத்திர நட்சத்திர நாட்களில், மாணிக்கவாசகரும், நடராஜரும் ஒரே சப்பரத்தில் வீதியுலா செல்கின்றனர். ஆனி மகம் குருபூஜையன்று, தனித்து உலா வருவார். திக்குவாய் உள்ளோர், பேச்சுத்திறமை வேண்டுவோர் திருவாசகத்தில் உள்ள, ‘திருச்சாழல்’ பதிகத்தை பாடி, வேண்டுகின்றனர்.
குருபூஜையன்று மதிய பூஜையில், மாகேஸ்வர பூஜை நடக்கும். அன்று, சிவனடியார்களை, சிவனாகக் கருதி திருநீறு, சந்தனம் பூசி, மலர் தூவி தீபாராதனை செய்து, விருந்து கொடுக்கின்றனர். தேனியிலிருந்து, 24 கி.மீ., தூரத்தில் சின்னமனூர் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரிலும், அவருக்கு தனிக்கோவில் உள்ளது. திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில் விழாக்காலங்களில், மாணிக்கவாசகர் வீதியுலா வருவார்.