Daily Archives: ஜூலை 3rd, 2014

மிஸ்டர் கழுகு: சீண்டும் கன்னடப் படம்!

கழுகார் பெங்களூரில் இருப்பதாக ‘வாட்ஸ்-அப்’ தகவல் தந்திருந்தார். ஜெயலலிதா மீதான சிறப்பு நீதிமன்ற வழக்கு விவகாரங்கள் சூடுபிடித்து வருவதால் அவரது பயணம் அங்கு இருந்தது.

”பெங்களூரு சிறப்பு நீதிமன்ற விசாரணையின் லைவ் ரிலே காட்சிகளை உமது நிருபர் விளக்கி வருகிறார். ஆனால், நீதிபதி குன்ஹாவை மாற்றப்போகிறார்கள் என்பது செய்தியா, வதந்தியா என்பதை விசாரிக்க நான் சென்றேன். அதற்கு முன்னதாக ஒரு சினிமா செய்தி!”

”உமக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?”

Continue reading →

நலம் 360’ – 2

தொழில்நுட்பம், நம் விரல் நுனிக்குள் உலகை அடக்கிவிட்டது  உண்மைதான். நியூயார்க் நகரத்து வெள்ளைக்காரன், தான் பயணிக்க வேண்டிய விமானத்தின் இருக்கையை உறுதிசெய்ய, சென்னையின் கடற்கரை சாலையின் அடுக்குமாடி கம்பெனியில் இருந்து தெலங்கானா ராமண்ணாவிடம்தான் பேசியாக வேண்டும். ‘யோசனைகாத தூரங்கள்’ எல்லாம் எலெக்ட்ரான் துகள்களுக்குள் நெருக்கப்பட்டு மைக்ரோ விநாடிகளில் கடந்துபோக ஆரம்பித்தாயிற்று. அதே சமயம், நம்மில் பலருக்கும் அடிக்கடி எழும் கேள்வி… இந்தத் தொழில்நுட்ப வீச்சில் நாம் எல்லோரும் நெருங்கி இருக்கிறோமா… விலகி இருக்கிறோமா? என்பதுதான்.

Continue reading →

ஃபிக்ஸட் ரேட், ஃப்ளோட்டிங் ரேட்… எது பெஸ்ட்?

வீட்டுக் கடன் வாங்கும்போது, அதற்கான வட்டி எவ்வளவு என்பதை ஒரு வங்கிக்கு பல வங்கிகளில் விசாரித்துதான் வாங்குவோம். ஏனெனில், கடனுக்கான வட்டிவிகிதம் 0.5% குறைவாக இருந்தால்கூட, நீண்ட காலத்தில் சில லட்சம் ரூபாய்  மிச்சமாகும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகித  சதவிகிதத்தைக் கவனிக்கும் அதேநேரத்தில், அது மாறுபடும் வட்டி விகிதமா, நிலையான வட்டி விகிதமா என்பதையும் பார்ப்பது அவசியம். இந்த இரண்டில் எந்த வட்டி விகிதம் சிறப்பாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

Continue reading →

ஆரோக்கியம் தரும் எளிய இயற்கை வைத்தியம்

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும். அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம்

Continue reading →

ஹோம் பட்ஜெட்: சீட்டுத் திட்டம்: லாபமா, நஷ்டமா?

மாத சம்பளம் வாங்குபவர்கள், பிசினஸ் செய்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் என யாராக இருந்தாலும் ஏலச் சீட்டுப் போடாதவர்களைப் பார்க்கவே முடியாது. மகளுக்குக் கல்யாணம், வீடு வாங்க, குழந்தைகளின் உயர்கல்வி, அவசரத் தேவை என அனைத்துத் தேவைகளுக்கும் பலரும் வைத்திருக்கும் ஒரே ஆயுதம் சீட்டுதான். நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் நம்பும் ஒரு முதலீடாகவும் இந்தச் சீட்டுத் திட்டம் இருக்கிறது. இந்த நம்பிக்கை சரியா, சீட்டுத் திட்டத்தில் சேருவது லாபகரமாக இருக்குமா என்பதைப் பார்ப்போம்.

இரண்டு வகைச் சீட்டு!

சீட்டு என்பது இரு வகையில் நடத்தப்படுகிறது. ஒன்று, சில தனியார் நிறுவனங்கள் அரசின் அனுமதிப் பெற்று முறையாக நடத்துவது; இன்னொன்று, அரசு அனுமதி பெறாமல், ஒரே இடத்தில் இருக்கும் 10, 20 பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து நடத்துவது.

Continue reading →

கம்ப்யூட்டர் மானிட்டரைச் சுத்தம் செய்திடும் வழிகள்

பெரும்பாலும் தற்போது கம்ப்யூட்டர்களுடன் எல்.சி.டி. மானிட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. நாம் அடிக்கடி சுத்தம் செய்யாத கம்ப்யூட்டர் பாகம் ஒன்று உண்டு என்றால், அது எல்.சி.டி. மானிட்டரின் திரை தான். ஆனால், பல வேளைகளில் அதில்

Continue reading →