Daily Archives: ஜூலை 5th, 2014

வீட்டை அழகுபடுத்த, கூடுதல் அறை கட்ட… விதவிதமான வீட்டுக் கடன்கள்!

வீடு வாங்க/ வீடு கட்ட / ஃப்ளாட் வாங்கத்தான் வங்கிகள் கடன் தருவதாக நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால் இவை தவிர, விதிவிதமான பல்வேறு வீட்டுக் கடன்களை வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அவை எந்த மாதிரியான கடன்கள், எவ்வளவு கடன் கிடைக்கும், அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் காலம் எவ்வளவு, அதற்கான வரிச் சலுகை என்ன என்பது குறித்து விவரமாகத் தெரிந்துகொள்ள பஞ்சாப் நேஷனல் பேங்க் கிளை மேலாளர் கிருஷ்ணனிடம் பேசினோம். தெளிவான பதில் தந்தார் அவர்.

”பெரும்பாலான வங்கிகள், வழக்கமான வீட்டுக் கடனை தவிர, மனை வாங்க, வீட்டை மேம்படுத்த, அழகுபடுத்த, கூடுதல் அறை கட்ட, வீட்டுக்கான ஃபர்னிச்சர் வாங்க என இதர தேவைகளுக்கும் கடன் வழங்கி வருகின்றன. வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து மருத்துவச் செலவு, திருமணம், கல்வி என எந்தத் தேவைக்கும் கடன் வாங்கலாம். இந்த எல்லா தேவைகளுக்கும் அதற்குண்டான திட்ட மதிப்பீடு என்பது அவசியம் தேவை.

 

கடன் மதிப்பு!

Continue reading →

நாள் முழுவதும் களைப்பா?

தூக்கம் கலைந்த பின்னரும், உடலானது சோர்வுடன் ஆற்றல் இல்லாமல் இருப்பது போல் உள்ளதா? இத்தகைய சோர்வினால் பல நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு கூட எடுத்துள்ளீர்களா? எப்போது ஒருவருக்கு இப்படி அதிகம் வேலை செய்யாமல் அளவுக்கு அதிகமான களைப்பு ஏற்படுகிறதோ, அப்போது உடலின் மேல் சற்று கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் உடலில் ஒருசில பிரச்னைகள் இருந்தாலும், உடல் மிகுந்த சோர்வுடன் இருக்கும். உடலில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள். அதுமட்டுமின்றி, ஒருசில பழக்கவழக்கங்களாலும் உடல் அதிக அளவில் களைப்படைகிறது. ஆகவே திடீரென்று உங்கள் உடலில் போதிய எனர்ஜி இல்லாமல் அதிக களைப்புடன் இருப்பது போல் உணர்ந்தால், உடனே அதற்கான காரணத்தை கண்டறிய

Continue reading →