Daily Archives: ஜூலை 6th, 2014

டெல்டா சர்ச் தேடலை நிறுத்தும் வழிகள்

Delta Search என்ற சர்ச் இஞ்சின், சற்று மிகையான இடத்தையே நம் பிரவுசரில் பிடித்துக் கொள்கிறது. இந்த தேவையற்ற புரோகிராம் இயங்குவதுடன், வர்த்தக ரீதியான சில தளங்களை நமக்கு பரிந்துரைக்கிறது. நம் தேடலுக்குச் சம்பந்தமில்லாத, ஆனால் அவை போலத் தோற்றமளிக்கின்ற இணைய தளங்களுக்கான லிங்க் வழங்குகிறது. இவை adwares எனப்படும் விளம்பர புரோகிராம்களால் ஏற்படுபவை. இவற்றில் சில வைரஸ் சார்ந்தவையும் இருக்கலாம். இந்த வைரஸ் கம்ப்யூட்டருக்குள் நுழைந்தவுடன் நாம் மாறா நிலையில் அமைத்த சர்ச் இஞ்சின் செட்டிங்ஸை மாற்றுகிறது. அதே போல, புக்மார்க் மற்றும் ஹோம் பேஜ் அமைப்புகளையும் மாற்றுகிறது. சிலவற்றில் Delta search.com என்ற தன் தளத்தினை முதன்மைத் தளமாக மாற்றி அமைக்கிறது. ஒவ்வொரு முறை புதிய தளம் ஒன்றை நம் பிரவுசரில் திறக்கும்போதும், இந்த தளமும் திறக்கும்படி அமைக்கப்படுகிறது. கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் பயர்பாக்ஸ் என அனைத்து பிரவுசர்களிலும் இந்த செட்டிங்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த தேடல் சாதனத்தை அனைவரும் கட்டாயமாக நீக்கியே ஆக வேண்டும். தேவையற்ற, போலியான இணைய தளங்களைத் தன் தேடல் முடிவுகளாக இது காட்டுவதால், இதனை அனு மதிக்கக் கூடாது. அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

Continue reading →

மிஸ்டர் கழுகு: ”நான் சந்தோஷமாக இல்லை!”

கழுகார் உள்ளே நுழைந்ததும், ”அ.தி.மு.க செயற்குழுவில் இருந்து ஆரம்பியும்” என்று அன்புக் கட்டளை போட்டோம். அதற்குத் தயாராக வந்திருப்பவர் போலவே ஆரம்பித்தார்!

”அ.தி.மு.க செயற்குழு ஜூன் 21-ம் தேதி நடக்க இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏனோ திடீரென்று அந்த தேதி ஒத்திவைக்கப்பட்டது. ‘முதல்வர் சில நாட்கள் ஓய்வில் இருக்கிறார்’ என்று அதற்கு சிலர் காரணம் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜூலை 2-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் கட்சியின் செயற்குழு கூடியது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதா கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால், பிரமாண்டம் களைகட்டியது. ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘எதிர்த்து நின்றோர் அனைவரும் நிலைகுலைந்து போகும் வண்ணம் இந்திய அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரமாக வெற்றி முகட்டில் உயர்ந்து நிற்கும் இயக்கமாய் அ.இ.அ.தி.மு.க-வை உயர்த்தி இருக்கும் அரசியல் ஞானி, எளியோரின் நம்பிக்கை நட்சத்திரம், இளைய தொண்டர்களின் காவல் தெய்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இந்த செயற்குழு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது’ என்ற ரீதியில் பாராட்டு மழையைப் பொழிந்தார்கள். ‘அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும்’ என்ற சூளுரையும் மேற்கொள்ளப்​பட்டது!”

Continue reading →

சீன முதலீடு: மோடி பாணியை பின்பற்றுமா தமிழகம்?

சீன முதலீட்டை ஈர்ப்பதில், குஜராத் மாநிலத்தில், மோடி பின்பற்றிய பாணியை, தமிழகம் பின் பற்றுமா என்ற கேள்வி, தொழில் துறையினரிடம் எழுந்துள்ளது.
சீனா, தன் நாட்டில், பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையே முக்கிய பணியாக கொண்டுள்ளது. அதனால், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா நாடுகளைப் போல, உற்பத்தித் துறைக்காக, வெளிநாடுகளில், சீனா முதலீடு செய்வதில்லை.

பெரும் முதலீடு

Continue reading →

‘புகையிலையை சுவைத்தால் பிரச்னை இல்லையா!’

நிக்கோட்டினை எந்த ரூபத்தில் எடுத்தாலும், அது நுரையீரலில் சி.ஓ.பி.டி., என்ற நுரையீரல் அடைப்பு நோயை உருவாக்கும். இதை நிறுத்துவது தான் நல்லது. புகையிலையை தொடர்ந்து போடுவதால் வாய், தொண்டையில் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்
பள்ளிப் பருவத்தில், மாணவர்கள் சிலர் சிகரெட் பிடிக்கின்றனர். இது அவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் அல்லவா? இதற்கு என்ன செய்யலாம்?

Continue reading →