டெல்டா சர்ச் தேடலை நிறுத்தும் வழிகள்

Delta Search என்ற சர்ச் இஞ்சின், சற்று மிகையான இடத்தையே நம் பிரவுசரில் பிடித்துக் கொள்கிறது. இந்த தேவையற்ற புரோகிராம் இயங்குவதுடன், வர்த்தக ரீதியான சில தளங்களை நமக்கு பரிந்துரைக்கிறது. நம் தேடலுக்குச் சம்பந்தமில்லாத, ஆனால் அவை போலத் தோற்றமளிக்கின்ற இணைய தளங்களுக்கான லிங்க் வழங்குகிறது. இவை adwares எனப்படும் விளம்பர புரோகிராம்களால் ஏற்படுபவை. இவற்றில் சில வைரஸ் சார்ந்தவையும் இருக்கலாம். இந்த வைரஸ் கம்ப்யூட்டருக்குள் நுழைந்தவுடன் நாம் மாறா நிலையில் அமைத்த சர்ச் இஞ்சின் செட்டிங்ஸை மாற்றுகிறது. அதே போல, புக்மார்க் மற்றும் ஹோம் பேஜ் அமைப்புகளையும் மாற்றுகிறது. சிலவற்றில் Delta search.com என்ற தன் தளத்தினை முதன்மைத் தளமாக மாற்றி அமைக்கிறது. ஒவ்வொரு முறை புதிய தளம் ஒன்றை நம் பிரவுசரில் திறக்கும்போதும், இந்த தளமும் திறக்கும்படி அமைக்கப்படுகிறது. கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் பயர்பாக்ஸ் என அனைத்து பிரவுசர்களிலும் இந்த செட்டிங்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த தேடல் சாதனத்தை அனைவரும் கட்டாயமாக நீக்கியே ஆக வேண்டும். தேவையற்ற, போலியான இணைய தளங்களைத் தன் தேடல் முடிவுகளாக இது காட்டுவதால், இதனை அனு மதிக்கக் கூடாது. அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

ஏதேனும் புரோகிராம் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கையில், இதுவும் ஒட்டிக் கொண்டு வருகிறது. பின்னர், தன் செயல்பாடுகளை வலிந்து மேற்கொள்கிறது. இதற்குப் பல முகங்கள் உண்டு. முதலாவதாக Delta Search virus. இது டெல்டா சர்ச் டூலின் இன்னொரு முகம். இது உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளதா என நீங்கள் சோதனையிட்டுக் கொண்டு செயல்பட வேண்டும். இதனு டன் பல மால்வேர், ப்ரீவேர் மற்றும் ஷேர்வேர் எனப் பல புரோகிராம்கள் இணைந்து வருகின்றன. இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இரண்டாவதாக, Deltasearch.com redirect என்பதாகும். இது டெல்டா சர்ச் வைரஸினால் ஏற்படுத்தப்படுவது. நம் பிரவுசரின் செட்டிங்ஸ் பக்கத்தில் அனைத்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி, அடிக்கடி டெல்டா சர்ச் காம் என்ற தளத்தினைத் திறந்து காட்டும்.
அடுத்ததாக yhs.deltasearch.com. இது டெல்டா சர்ச் இஞ்சினின் காப்பி புரோகிராம். இதனைப் பயன்படுத்தவே கூடாது. ஏனென்றால், பல பிரபலமான இணையதளங்கள் போல அமைந்த போலியான தளங்களுக்கான முகவரிகளை தேடல் முடிவுகளாகத் தந்து நம் கம்ப்யூட்டரில் சிக்கல்களை இது ஏற்படுத்தும்.
இன்னொரு முகமாக நமக்குக் கிடைப்பது mixidj.deltasearch.com. டெல்டா சர்ச் வைரஸ் இணைந்து மிக அதிகமாகப் பரவுவது இதுதான். இந்த தேடல் சாதனமும், நம்மை போலியான இணைய தளங்களுக்கு அழைத்துச் செல்வதில் செயல்படுகிறது. இன்னொரு வகையான வைரஸ் தரும் தேடல் தளம் visualbee.deltasearch.com. குறிப்பிட்ட தளங்களுக்கு நம்மை வழி நடத்தி, அதில் அதிகம் பேர் வந்ததாகக் காட்டும் வேலையை இந்த தேடல் தளம் செய்கிறது. மற்றும் பல மோசமான விளைவு
களைத் தரும் தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இந்த தேடல் தளம் உங்கள் பிரவுசரில் இயங்குவதாக இருந்தால், உடனடியாக அதனை நீக்க வேண்டும். இல்லையேல் பல பாதகவிளைவுகள் ஏற்படும்.
எந்த இலவச புரோகிராம் அல்லது ஷேர்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இறக்கம் செய்வதாக இருந்தாலும், மிகவும் கவனமாக மேற்கொள்ளவும். இந்த டெல்டா சர்ச் மற்றும் சார்ந்த அனைத்து வகைகளும், இத்தகைய புரோகிராம்களுடன் தான் ஒட்டிக் கொண்டு வருகின்றன. டெல்டா சர்ச் சார்ந்த எந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்குவது தெரிந்தாலும், உடனே அதனை நீக்க வேண்டும்.
டெல்டா சர்ச் இஞ்சினை எப்படி நீக்குவது எனப் பார்க்கலாம். இது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால், பிரவுசரை இயக்கத் தொடங்கியவுடன் செயல்படத் தொடங்கும். அதனை அனுமதிக்கக் கூடாது. உடனே அந்த டேப்பினை மூடிவிட வேண்டும். பின்னர், Add/Remove Programs பட்டியலில் இருந்து இதனை நீக்க வேண்டும். இதற்கு ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, Settings > Control Panel > Add/Remove Programs எனச் செல்லவும். அங்கு டெல்டா சர்ச் இருந்தால் நீக்கவும். அத்துடன் Delta Chrome Toolbar, Delta toolbar, Yontoo, Browser Protect மற்றும் Mixi.DJ ஆகியவையும் தென்பட்டால் அனைத்தையும் நீக்கவும். அத்துடன் உங்கள் பிரவுசரில் இருக்கும் டெல்டா சர்ச் டூலையும் நீக்கவும். அதற்கான வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. இன் டர்நெட் எக்ஸ்புளோரர்: பிரவுசரைத் திறந்து ‘Tools’ > “Manage Addons’ >’Toolbars and Extensions’ எனச் செல்லவும். இங்கு Delta Search மற்றும் சார்ந்த அனைத்தையும் கண்டறிந்து அன் இன்ஸ்டால் செய்திடவும். தொடர்ந்து Tools கிளிக் செய்து Manage addons’ > ‘Search Providers’ எனச் செல்லவும். இங்கு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பாதுகாப்பான சர்ச் இஞ்சினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
2. மொஸில்லா பயர்பாக்ஸ்: பிரவுசரைத் திறக்கவும். Tools’ > ‘Addons’ >’Extensions’ எனச் சென்று டெல்டா சர்ச் இருப்பதைக் கண்டறியவும். மற்றும் இது சார்ந்த மற்ற புரோகிராம்களைக் கண்டறிந்து அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்திடவும். தொடர்ந்து ‘Tools’ > ‘Options’ எனச் சென்று, தொடக்க ஹோம் பேஜ் என்பதில் கூகுள் டாட் காம் அல்லது யாஹூ டாட் காம் அல்லது உங்களுக்குத் தேவையான தேடல் தளத்தினை அமைக்கவும்.
3. குரோம் பிரவுசர்: பிரவுசரினைத் திறந்து குரோம் மெனு பட்டனைக் கிளிக் செய்திடவும். Tools > Extensions எனத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Delta Search எக்ஸ்டன்ஷன் கண்டறிந்து, பின் Recycle Binல் கிளிக் செய்து அதனை நீக்கவும்.
தொடர்ந்து ரென்ச் ஐகான், அல்லது மூன்று கோடுகள் உள்ள ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Settings என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் பக்கத்தில் ‘Manage search engines’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்களுக்குத் தேவையான, பாதுகாப்பான சர்ச் இஞ்சினை, உங்கள் மாறா நிலை சர்ச் இஞ்சினாக அமைக்கவும். இதனைத் தொடர்ந்து, "On start” என்னும் பிரிவிற்குச் செல்லவும். இங்கு புதிய டேப் ஒன்றினைக் கிளிக் செய்கையில், எந்த தளமும் இல்லாமல் காலியான பக்கம் (blank page) கிடைக்கும்படி அமைக்கவும்.
நீங்களாக இன்ஸ்டால் செய்யாத புரோகிராம் ஏதேனும் உங்கள் கம்ப்யூட்டரில் இருப்பதாகவோ, இயக்கப்படுவதாகவோ தெரிந்தால், உடனே, முழு கம்ப்யூட்டர் சிஸ்டத்தினையும் ஸ்கேன் செய்து, வைரஸ் அல்லது மால்வேர் இருந்தால் அழிக்கவும். இதற்குக் கீழ்க்காணும் புரோகிராம்களும் உங்களுக்குத் துணை புரியும். அவை SpyHunter, STOPzilla மற்றும் Malwarebytes Anti Malware.

%d bloggers like this: