Daily Archives: ஜூலை 7th, 2014

பைசாவுக்கு டாட்டா சொன்ன கிரீட்டா!

கிரீட்டாவை உங்களுக்குத் தெரியுமா? பாக்கெட்டில் பைசா வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நபர் கிரீட்டா. இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர். உலகத்துக்கு தனது நடத்தையால் ஒரு வாழ்க்கைப் பாடத்தை நடத்த ஆரம்பித்து இருக்கிறார் கிரீட்டா!

நிம்மதி, மகிழ்ச்சி, சொந்தபந்தங்களின் அன்பு, உடல் ஆரோக்கியம் என்று அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, ‘பணம்… பணம்… பணம்’ என்று  பணத்தைத் தேடியே ஓடிக்கொண்டிருக்கிறான் மனிதன். தேவைக்குப் பணம் சம்பாதித்த காலம் போய், ‘எவன் ஒருவன் பணம் சம்பாதிக்கிறானோ, அவனே வெற்றியாளன். பணம் சம்பாதிக்க முடியாதவன் உதவாக்கரை’ என்று நம்பும் அளவுக்கு பெரும்பான்மையானவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். தனது சௌகரியத்துக்காக மனிதன் படைத்த பணத்துக்கு இன்று அவனே அடிமையாகிக் கிடக்கிறான்.

Continue reading →

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

1. தேங்காய் எண்ணெய் – 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)

2. வெள்ளைக் கரிசாலைச் சாறு – 0.5 லிட்டர்

3. கீழாநெல்லிச் சாறு – 0.5 லிட்டர்

Continue reading →

பொடுகு, டை… சில நம்பிக்கைகள்!

1. பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படு வதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. ‘பொடுதலை’ என்ற ஒரு மூலிகை நம் மண்ணில் உண்டு. அதன் சாற்றை, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். SCALP PSORIASIS எனும் தோல் நோயைப் பலரும் பொடுகுத் தொல்லை என தவறாக நினைத்து அலட் சியப்படுத்துகின்றனர். அதிக அளவில் பொடுகுத் தொல்லை இருந்தால் குடும்ப மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

Continue reading →

நலம் 360’ – 3

முடி பற்றிய புரிதலும் வரலாறும் மிக மிக நீட்சியானது. முடியைப் பராமரிக்க, அலங்கரிக்க, அதை வைத்து அடையாளப்படுத்திக்கொள்ள மனித இனம் காலம்தொட்டு எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அதற்கான பதிவுகளும் வியப்பையும் விஞ்ஞானத்தையும் உள்ளடக்கியவை.

‘ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே’ என, காதலோடு நெருங்கிய கணவனைக் காண வெட்கி, ஆம்பல் மலர் கொய்த தன் கூந்தலை விரித்து அதன் கருமைக்குள் புதைந்த கவித்துவம் முதல், ‘அரிவை கூந்தலின் நறியவும் உளவோ…’ என ஆண்டவரும் அரசாங்கக் கவியும் அடித்துக்கொண்டது வரை சங்க இலக்கியத்தில் கூந்தல் குறித்த செய்திகள் ஏராளம். ஆணும் பெண்ணும் பன்னெடுங்காலமாகக் கூந்தலை ஆற்றலின் வடிவமாக, ஆண்மையின் அடையாளமாக, பெண்மையின் அழகியலாக, மனச்செம்மையின் சின்னமாக… எனப் பல வடிவில் வைத்திருந்தனர். சமணர்கள், துறவின் அங்கமாக மழித்ததும், சமயம் கிடைத்தபோதெல்லாம் சைவம் அதைப் பழித்ததும் வரலாறு சொல்லும் முடி குறித்த செய்திகள்.

Continue reading →

‘ஒற்றை செருப்பை யாராவது அணிவார்களா?

‘அரபு மொழியில் ஃபார்மிசைடு ஃபீஸ்ட் என்று சொல்வார்கள். கற்பனையிலேயே வாழை மரத்தை வளர்த்து, கற்பனையிலேயே அதில் இலையை அறுத்து, கற்பனையிலேயே சமையல் செய்து, கற்பனையிலேயே இலையில் சாப்பாடு போட்டு, கற்பனையிலேயே சாப்பிடுவார்கள். உண்மையில் சாப்பிட்டீர்களா என்றால் சாப்பிட்டோம் என்பார்கள். அதுபோல சுதாகரன் திருமணத்தைப் பார்க்காமல், எங்களிடம் கேட்காமல், கற்பனையிலேயே மதிப்பீடு செய்து மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்’ என்று ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தன் வாதத்தை முன்வைக்க… மற்ற வழக்கறிஞர்கள் அவரை உற்று நோக்க ஆரம்பித்தனர். குமாரின் இறுதி வாதம் 10 நாட்களைக் கடந்தும் சூடு குறையாமல் அனல் பறக்கிறது.

Continue reading →

பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரை வெளியில் இருந்து இயக்க

விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்று, மால்வேர் அல்லது வைரஸினால், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டால், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இயக்குவதில் எந்த மாற்றமும், தீர்வும் கிடைக்காது. ஏனென்றால், அந்த மால்வேர் அல்லது வைரஸ், முதலில் உங்கள் ஆண்ட்டி வைரஸ் இயக்கத்தினைத்தான் முடக்கும். சில மால்வேர் புரோகிராம்கள், தங்களை எந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும் கண்டறிய முடியாதபடி பதுங்கிக் கொள்ளும். சில, ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைச் சரியாகச் செயல்பட விடாமல் தடுக்கும். புதியதாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திட முயன்றாலும், அது தடுக்கப்படும். எனவே, கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் சிஸ்டத்தினை வெளியே இருந்து இயக்கினால்தான், மால்வேர் புரோகிராமின் தாக்குதலில் இருந்து விடுபட முடியும். இதற்கான தீர்வுகளை, அவற்றைப் பெற நாம் மேற்கொள்ள வேண்டிய வழிகளை இங்கு காணலாம்.

Continue reading →

உணவு யுத்தம்!-20

பொதுவாகப் பூமியில் விளைகிற தாவரங்கள் எதற்கும் எந்த வணிக நிறுவனமும் காப்புரிமை பெற முடியாது. ஆனால், இதே தாவரத்தில் சில மாற்றங்களை உருவாக்கி புதிய விதை ரகத்தைத் தயார் செய்துவிட்டால், அதற்கான காப்புரிமையைப் பெற்றுவிடலாம்.

இப்படிக் காப்புரிமை பெற்ற தாவரங்களை 20 ஆண்டுகளுக்கு வேறு யாருமே உற்பத்தி செய்ய முடியாது. அதன் மூலம் கிடைக்கும் அத்தனை லாபமும் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே போய்ச் சேரும். அதன் பிறகு இந்த விதைகளை யாராவது பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்குப் பெரும் பணம் தர வேண்டும். ஆக, விவசாயிகளின் மூலவிதைகளைத் தாங்கள் கைப்பற்றி விற்பனைப் பொருளாக மாற்றுவதற்கு உருவாக்கப்பட்டதே மரபணு மாற்றத் தொழில்நுட்பம்.

Continue reading →

ஊழ்வினை – அனுபவித்தே தீரவேண்டும்!

மண், மனை, வாழ்க்கை துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று, சாஸ்திரம் கூறுகிறது. இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.
பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற துறவி. ஒருநாள், இவரது சீடர்கள், ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர்.
‘இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன…’ என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார். அதற்கு சீடர்கள், ‘குருவே… காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார். அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை…’ என்றனர்.
உடனே நாராயண தீர்த்தர், ‘இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம்…’ என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.
இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார். வலியின் வேதனை தாளாமல், பகவானை நோக்கி, தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
அதன் விளைவாக, பெருமான், பூபதிராஜபுரம் எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, ‘நாராயண தீர்த்தரே… நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய். அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய். அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய். அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய். நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய்.
‘அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய்.
‘நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன. அதே சமயம். உணவுப்பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது…’ என்றார்.
இதன் பின், பகவான் கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ எனும் பாடல்களைப் பாடி, தன் துயரம் தீர்த்தார் நாராயண தீர்த்தர். தவறு செய்தவர்கள், அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இறைவன் அருளால் மட்டுமே, துயரம் தீரும் என்பதை விளக்கும் வரலாறு இது.