ஃப்ரான்சைஸ் பிசினஸ்: முதலீடு இருந்தால் முன்னேறலாம்!
மாதச் சம்பளத்துக்கு எங்காவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போகாமல், சொந்தமாகத் தொழில் செய்யும் ஆர்வம் இன்றைய இளைஞர்கள் பலரிடம் இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். எனக்கு தொழில் தெரியும்; ஆனால், என்னிடம் எந்த முதலீடும் இல்லை என்கிறவர்கள் ஒருவகை; எனக்கு எந்தத் தொழிலும் தெரியாது; ஆனால், என்னிடம் முதலீடு இருக்கிறது என்பவர்கள் இரண்டாவது வகை. இதில், முதல் வகையினர் தங்கள் தொழில் முதலீட்டுக்கு வங்கிகளை அணுகுவது நல்லது. இரண்டாவது வகையினர், தங்களிடம் இருக்கும் முதலீட்டை வைத்து, ஃப்ரான்சைஸ் (Franchise) பிசினஸ் செய்ய ஆரம்பிக்கலாம்.
ஃப்ரான்சைஸ் என்றால் என்ன?
ரயில்வே பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள்
நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா பட்ஜெட்டை தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் முக்கிய அம்சங்கள்:
தமிழகம்: மேல்மருவத்தூர், வேளாங்கன்னி போன்ற புனித் தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
ஷாலிமார் – சென்னை பிரீமியம் ஏ.சி. எக்ஸ்பிரஸ், காமாக்யா – சென்னை பிரீமியம் எக்ஸ்பிரஸ், மும்பை – ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் தொடங்கப்படும்.
புதிய ரயில்கள்: 5 ஜன்சதாரண் ரயில்கள், 5 பிரீமியம் ரயில்கள், 6 ஏ.சி. ரயில்கள், 27 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 8 பயணிகள் ரயில்கள் ஆகியன அறிமுகப்படுத்தப்படும். 11 ரயில்களின் சேவை நீட்டிக்கப்படும்.
நலம் 360’ – 4
மருத்துவர் கு.சிவராமன்
புத்திசாலியாக இருப்பதற்கும் ஞாபகசக்திக்கும் தொடர்பு இல்லை என்பதற்கு, வால்ட் டிஸ்னி, வின்ஸ்டன் சர்ச்சில், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்… எனப் பல உதாரணங்கள் உண்டு. ஆனாலும், ‘நேத்து படிச்சது இன்னைக்கு ஞாபகம் இல்லைன்னா எப்படி… மண்டைக்குள்ள அப்படி என்ன ஓடுது?’ எனும் கவலை நம்மில் பலருக்கும் உண்டு.
ஒன்பது வகையான அறிவாற்றல்கள் இருப்பதாக நவீன அறிவியல் சொன்னாலும், படித்ததை ஞாபகம் வைத்து, அப்படியே வாந்தி எடுக்கும் ஸ்கூல் இயந்திரத்தை, ‘பல தொழிலுக்கும் தகுதியானவர்’ என்று தேர்ந்தெடுப்பதுதான், அந்த ஒன்பது அறிவாற்றல்களில் ஞாபகசக்தியை மட்டும் சமூகம் உசத்திப் பிடிக்கக் காரணம்!