Daily Archives: ஜூலை 9th, 2014

அடக்கினால் ஆபத்துதான்! சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்…

அன்று யு.கே.ஜி. படிக்கும் அஸ்வினிக்கு திடீரென்று காய்ச்சல். அனலாய்க் கொதித்தது. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டி மாத்திரை மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. உடனே ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துவரும்படி பரிந்துரைத்தார் டாக்டர். பிறகுதான் அந்தப் குழந்தைக்கு சிறுநீரகப் பாதை தொற்று இருப்பது தெரியவந்தது. 

ஏன் இந்த வயதிலேயே சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று? என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது,  பள்ளிக்கூடத்தில் டாய்லெட் செல்ல  விருப்பம் இல்லாமல் சிறுநீரை அடக்கியிருக்கிறாள் அஸ்வினி. ரொம்ப அவசரம் என்றால் மட்டுமே, பள்ளிக்கூட டாய்லெட்டைப் பயன்படுத்தியிருக்கிறாள். அஸ்வினியைப் போல

Continue reading →

ஞாபகசக்தி அதிகரிக்க…

 

வல்லாரை கீரையைச் சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். அதிலுள்ள Asiaticosides,  மூளைச் சோர்வு தராமல் அறிவைத் துலங்கவைக்கும் என்று நவீன அறிவியல் நம் பாரம்பரியப் புரிதலுக்குச் சான்று அளிக்கிறது. கொத்துமல்லி சட்னி அரைப்பதுபோல் கொஞ்சம் மிளகாய் வற்றல், கொஞ்சமாக புளியைச் சேர்த்து சட்னியாக அரைத்து தோசைக்குச் சாப்பிடலாம். வல்லாரை தோசை, வல்லாரை சூப் இன்றைக்கு பாரம்பரிய உணவகங்களில் பிரபல உணவும்கூட.

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-1

மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..?

ஒவ்வொரு நொடியும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த  வருத்தமே ‘மனிதர்களின்’  வரவு செலவுக் கணக்கில் விஞ்சி நிற்கிறது. இரக்கம் ஏன் தேய்ந்து போகிறது? இதயம் ஏன் தொய்ந்து போகிறது? என்ற கவலை சமூக அக்கறையுள்ள அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது. இந்த வருத்தமும் அக்கறையும் இப்போதுதான் இருக்கிறதா? அல்லது முன்பும் இருந்ததா?

‘இன்றைய இளைஞர்கள் அகந்தை​யுடன் இருக்கிறார்கள்; அவர்கள் பெரியவர்கள் பேச்சை மதிப்பதில்லை; ஆசிரியர்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதில்லை’  என்று அங்கலாய்த்துக்​கொண்டார் ஒருவர். இவர் நம்முடைய சமகாலத்தவர் அல்லர்.

சுமார் 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த சாக்ரடீஸுக்கு இப்படி ஒரு வருத்தம் இருந்தது. எனவே, ‘காலம் கெட்டுப்போன புலம்பல்’ காலந்தோறும் உண்டு. ஆனால், இது வெறும் புலம்பல் மட்டும்தானா? உண்மை அதற்குள் ஒளிந்துகொண்டு இருக்கத்தானே செய்கிறது. நாம் ஏன் இப்படி மாறிப்போனோம்?

Continue reading →

வருமான வரி கணக்கு தாக்கல்… முழுமையான வழிகாட்டி!

மாதச் சம்பளக்காரர் கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014. இதற்கு இன்னும் 25 நாட்கள்தான் இருக்கின்றன. கடைசி வாரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்துகொள்ளலாம் என்று இருந்துவிட்டு, அவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறுகள் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க இப்போதே களமிறங்கிவிடுங்கள்.

வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்ய வேண்டும், எந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜுவிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

”மாத சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி, பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட வரிச் சலுகைகளைக் கழித்ததுபோக, மீதி உள்ள தொகைக்கு வரி கட்ட வேண்டும். இந்த முதலீடு, செலவு, வரிச் சலுகை பெற்ற விவரம், வரி கட்டிய விவரத்தை வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதுதான் வரிக் கணக்கு தாக்கல்’ என்று அடிப்படை விளக்கம் சொன்னவர், யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டினார்.

யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்?

Continue reading →

தொலைபேசி எண்ணை டாகுமெண்ட்டில் அமைக்க

வேர்ட் புரோகிராம், நிறுவனங்களின் செயல்பாட்டில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பலவகையான டாகுமெண்ட்களைத் தயாரித்து, கூடுதல் வசதிகளுடன் அவற்றை வழங்க அனைத்து வழிகளையும் தருகிறது. பல வேளைகளில், டாகுமெண்ட் ஒன்றை யார் தயாரித்தார்கள் அல்லது கடைசியாக யார் அதனைத் திருத்தினார்கள் என்று நாம் அறிய விரும்புவோம். கடைசியாகத் திருத்தப்பட்டு பல மாதங்கள் ஆகி இருந்தால், அதனைக் கண்டறிவது சற்று சிரமமான வேலையாக இருக்கும்.

Continue reading →