Advertisements

Daily Archives: ஜூலை 10th, 2014

Key Features of Budget 2014-2015

Key Features of Budget 2014-2015

 

 

 

 

THE CURRENT ECONOMIC SITUATION AND THE CHALLENGES

 

 

D         Decisive vote for change represents the desire of the people to grow, free themselves from the curse of poverty and use the opportunity provided by the society. Country in no mood to suffer unemployment, inadequate basic amenities, lack of infrastructure and apathetic governance.

 

 

D         Challenging situation due to Sub five per cent growth and double digit inflation.

 

 

D         Continued slow-down in many emerging economies a threat to sustained global recovery.

 

 

D         Recovery seen with the growth rate of world economy projected at 3.6 per cent in 2014 vis-à-vis in 2013.

 

 

D         First budget of this NDA government to lay down a broad policy indicator of the direction in which we wish to take this country.

 

 

D         Steps announced are only the beginning of the journey towards a sustained growth of 7-8 per cent or above within the next 3-4 years along with macro-economic stabilization.

 

 

D         Growing aspirations of people will be reflected in the development strategy of the Government led by the Prime minister Shri Narendra Modi and its mandate of “Sab ka Saath Sab ka Vikas”.

 

 

D         Need to revive growth in manufacturing and infrastructure sectors.

 

 

D         Tax to GDP ratio must be improved and Non-tax revenues increased.

Continue reading →

Advertisements

உணவு யுத்தம்!

 

ஏமாற்றும் எண்ணெய்!

கடற்கரைக்குப் போயிருந்தேன். தள்ளுவண்டியில் சூடாக வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு பொட்டலம் 10 ரூபாய் என வாங்கினேன். பிரித்துப் பார்த்தால் உள்ளே சூம்பிப்போன வேர்க்கடலை பருப்புகள். பள்ளி வயதில் ஒரு ரூபாய்க்கு ஒரு பொட்டலம் என பள்ளிக்கூட வாசலில் வேர்க்கடலை விற்பார்கள். ஒரு பொட்டலத்தில் உள்ளதை இரண்டு பேர் சேர்ந்து சாப்பிடுவோம்.

காலமாற்றமும் விலைவாசி உயர்வும் கண்ணுக்கு முன்னே உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுக்குக்குள் அடங்காமல் போய்விடச் செய்ததை நினைத்தபடியே, சூடான கடலைகளை சாப்பிடத் தொடங்கினேன்.

ஒரு பொட்டலம் கடலையில் நிச்சயம் ஒரு சொத்தைக் கடலை இருப்பது எழுதப்படாத விதி. ஆனால், என் வாயில் அகப்பட்டது ஒரு கல். வேர்க்கடலை போன்ற அதே வடிவில் சிறிய கல் அது. இது எப்படி கடலை அளவிலே இருக்கிறதே… ஒருவேளை வறுக்கும்போது கலந்துவிட்டதோ என யோசித்தேன்.

Continue reading →

தாய்ப்பால் சுரக்கவைக்கும் சுரைக்காய்!

சுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, குளிர்ச்சியாக குடித்து வந்தனர் நம் முன்னோர். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் மருத்துவக் குணங்கள் ஏராளம். சுரைக்காயின் பலன்களைப் பற்றி தேனி சித்த மருத்துவர் வே.ஸ்ரீதேவி எடுத்துச் சொல்கிறார்.

‘சுரைக்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர் காய். இனிப்பு, கசப்பு என இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாகப்

Continue reading →

லெகிங்ஸ்… ஜெகிங்ஸ்… டிரெக்கிங்ஸ்…

டீன் ஏஜ் என்றில்லாமல், எல்லா வயதுப் பெண்களுமே ‘கம்ஃபர்டபிள் ஃபிட்’ என்றபடி லெகிங்ஸ் மோகத்தில் மூழ்க… இந்தியாவின் ‘ஹிட் உடை’ என்றாகியிருக்கிறது லெகிங்ஸ்! இத்தகைய லெகிங்ஸ் ஃபேஷன் பற்றி பேசும் சென்னையைச் சேர்ந்த இளம் ஆடை வடிவமைப்பாளர் லட்சுமி சூர்யா, ”லெகிங்ஸ்… பெண்களுக்கு மிக மிக வசதியான உடை. வியர்வையை உறிஞ்சுவதால், கால் இடுக்குகளில் அரிப்பு அவஸ்தை இல்லை; வேகமாக நடக்கலாம்; வண்டியில் பறக்கலாம்; குறைவான விலையில் வாங்கலாம்… இப்படி பலவிதங்களிலும் சௌகரியமான உடை. இதில் மூன்று வகை இருக்கிறது. லெகிங்ஸ், ஜெகிங்ஸ் மற்றும் டிரெக்கிங்ஸ்.

Continue reading →

வியப்பான எக்ஸெல் ஸ்குரோலிங்

: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது? மீண்டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். உங்களுக்கு வியப்பு! என்ன நடக்கிறது இங்கு? ஏறத்தாழ 100 வரிசைகள் தாண்டி நான் இருந்தேனே? எப்படி பழைய இடத்திற்கு வந்தேன் என்று தானே வியக்கிறீர்கள். புரோகிராம் ஏன் இப்படி தவறுதலாகச் செயல்படுகிறது? அதுதான் இல்லை. நீங்கள் ஸ்குரோல்பாரைப் பயன்படுத்தி அல்லது மவுஸின் ஸ்குரோலைப் பயன்படுத்தி கீழாக அல்லது மேலாகச் செல்கையில் திரையில் காணப்படும் காட்சி தான் மாறுகிறது. புதிய செல்களுக்கு நீங்கள் செல்லவில்லை. எனவே நீங்கள் ஆரோ கீயை அழுத்தியவுடன் அது நீங்கள் இருந்த செல்லுக்கு ஒரு செல் மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கிறது. எனவே தான் நீங்கள் ஸ்குரோல் செய்து சென்ற இடத்திலிருந்து உடனடியாகக் கர்சர் இருந்த செல்லுக்கு அருகே நீங்கள் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். ஸ்குரோல் செய்து அடைந்த இடத்திற்கு உங்கள் கர்சர் இருக்க வேண்டும் என்றால் மவுஸால் அதனை செலக்ட் செய்திட வேண்டும். இவ்வாறு ஸ்குரோல் செய்து சுற்றி வருவதும் நல்லதுதான். ஒரு செல்லில் தகவல் இடுகையில் மற்ற செல்களில் என்ன உள்ளது என்று பார்க்க விரும்பினால் என்டர் செய்து சென்றால் எங்கு நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தீர்கள் என்பது மறந்துவிடும் அல்லவா? எனவே ஸ்குரோல் செய்து சுழன்று சென்று பின் மீண்டும் செயல்படும் செல்லுக்கே வரலாமே.

பணம் கொட்டும் தொழில்கள் – உடனடி புளியோதரை மிக்ஸ்!

இந்த அவசர யுகத்தில் அன்றாட உணவுகளும் தப்பவில்லை. காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் சிலர் காலை உணவையே தவிர்த்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் அதிகம் செலவழித்து  ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். இதுமாதிரியான வர்களின் அவசர தேவைகளுக்காக உடனடி சப்பாத்தி, இடியாப்பம் மற்றும் பொடிவகைகள் வந்துவிட்டன. என்றாலும், பிடித்தமான குழம்பு மற்றும் தொக்கு வகைகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் பலரது ஏக்கமாக இருக்கிறது.

இந்தத் தொழில்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதில் பெரிய, பெரிய நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தாலும், தரமாகவும், சுவையாகவும் தந்தால் சிறிய நிறுவனங்களாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும். 

புளிக்குழம்பு, தொக்கு வகைகள், புளிசாத மிக்ஸ், லெமன்சாத மிக்ஸ் போன்றவை சில மாத காலத்துக்கு கெட்டுப்போகாத வகையில் தயாரிக்க முடியும். தவிர, இதுபோன்ற உடனடி மிக்ஸ் வகைகள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்றுவருவதால், இந்த தொழிலில் கவனம் செலுத்தலாம்.

Continue reading →

மிஸ்டர் கழுகு: தமிழ்நாடு தலைவர் ஆகிறார் ப.சி.?

 

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சிகளுக்குள் நடந்துவரும் களேபரங்களை அள்ளிக் கொண்டுவந்தார் கழுகார். ஒவ்வொரு கட்சியாக வரிசையாகக் கொட்டினார்!

”முதலில் தமிழக பி.ஜே.பி-யைப் பற்றிச் சொல்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநிலத் தலைவரும் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஜூலை 6-ம் தேதி நடந்தது. மத்தியில் ஆளுங்கட்சியாக ஆன பிறகு நடக்கும் கூட்டம் என்பதால், உற்சாகம் கரைபுரண்டது.

மாவட்டத் தலைவர்கள் எல்லோரும் தங்கள் தேர்தல் அனுபவங்களை எடுத்துச் சொன்னார்களாம். அதில் சர்ச்சைக்குரிய சமாசாரங்களை மட்டும் நான் சொல்கிறேன்!”

”சொல்லும்!”

Continue reading →