அதிக மக்கள் தொகை கொண்ட நகரம்: 2-வது இடத்தில் டெல்லி
சர்வதேச அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லி 2-வது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சர்வதேச மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் உலக நகரமயமாக்கல் குறித்து ஐ.நா. மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வெளியிட்ப்பட்டன. சர்வதேச அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் டோக்கியோவும், இரண்டாவது இடத்தில் டெல்லியும் உள்ளது.
6-வது இடத்தில் மும்பை உள்ளது. தற்போதைய அளவில் இந்திய நகரங்களில் மக்கள்தொகை 410 மில்லியன் என்ற அளவில் இருப்பதாகவும் 2050ம் ஆண்டில் இந்த அளவு 814 மில்லியன் ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நகர மக்கள்தொகையில் இந்தியா மற்றும் சீனாவின் பங்களிப்பு 30 சதவீதம் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதன் மாறி விட்டான்!-2
பெரும்பாலான பாலூட்டிகள் பார்வையாலும் குரல் யூகங்களாலும் தங்கள் வகையை அடையாளம் காண்கின்றன. கூட்டம் கூட்டமாக வாழும் பாலூட்டிகள் இன்னொரு உயிரைப் பார்த்தும் முகர்ந்தும், மற்றவற்றைத் தெரிந்துகொள்கின்றன. பூச்சிகள், சுவையாலும் மனத்தாலும் தங்கள் இனத்தை அறிகின்றன. பறவைகளோ பார்வையாலும் பாட்டாலும் உணருகின்றன. மீன்களோ, ஒலியையும் கொஞ்சம் ஒளியையும் வைத்து அறிகின்றன. மின்மினிப் பூச்சிகள் இவற்றுக்கெல்லாம் விதிவிலக்கு. ஆண் பூச்சிகள், இனத்துக்குத் தகுந்தவாறு வித்தியாசமாக ஒளிரும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. எது தங்கள் சாதி என்று பகுத்தறியவும், தங்கள் வகையைச் சார்ந்த பெண் பூச்சிகளை ஈர்க்கவுமே இந்த ஏற்பாடு. சில பூச்சிகள் அவற்றை உண்பவற்றை ஏமாற்ற இறகுகளில் வித்தியாசமான வண்ணங்களை விரித்து வைத்து, அவற்றின் சுவையான உடலைக் காத்துக்கொள்கின்றன. மொனார்க் வண்ணத்துப் பூச்சிகள், சுவையில்லாத பட்டாம்பூச்சிகளின் வண்ணத்தை மிமிக்ரி செய்து பறவைகளிடம் இருந்து தப்பிக்கின்றன.
ஆர்கானிக் ஃபுட்
‘உணவே மருந்து’ என்பது போய் இன்று மருந்துகளையே உணவாக உட்கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். மூன்று வயது குழந்தைக்கு மூக்குக்கண்ணாடி, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டு வலி என அனைவருமே ஏதோ ஒரு நோயை சுமந்து திரிகின்றனர். உண்ணும் உணவே பெரும்பாலான நோய்களுக்கு நுழைவாயில் என்ற நிலையில் உணவின் மீது நாம் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
”உணவு என்பது வெறுமனே பசியைத் தணிக்கும் ஏற்பாடு அல்ல. அதுதான் நம் உடல் இயங்குவதற்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. உணவு தரமாக இல்லை என்றால், உடலும் தரமற்றுப் போகும். அதன் விளைவுதான் நோய்கள். இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது தாவரங்கள்தான். ஆனால், எல்லா உயிர்களும் எல்லா தாவரங்களையும் உண்ணுவது இல்லை. மாடுகளுக்கு பிடித்த வைக்கோலை நாய்கள் சீண்டுவது இல்லை. நாய்களுக்குப் பிடித்த எலும்புத் துண்டுகளை மாடுகள் தொடுவதும் இல்லை. இப்படி அனைத்து உயிர்களும் தனித்த உணவு
செல்போன், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு, இன்டர்நெட்…. எங்கேயும் எப்போதும் உஷார் உஷார்..!
‘மக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்பிருக்கிறது’ என்றபடி காவல்துறையைக் குவித்தது… ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்று புகைப்படங்களை ஒட்டியது… எல்லாம் அந்தக் காலம். வீட்டில் இருந்தபடியே லேப்டாப், செல்போன் இவற்றைக் கொண்டே உலகின் எந்த மூலையிலும் கொள்ளையடிக்க முடியும்… பற்பல குற்றங்களை அரங்கேற்ற முடியும் என்பது இந்தக் காலம். எல்லாம், ‘டெக்னாலஜி பகவான்’ கடைக்கண் பார்வையால் ஏற்பட்டிருக்கும் ‘வளர்ச்சியே!’
‘நீங்கள், ஒரு ஷாப்பிங் மால் அல்லது திருவிழா கூட்டத்தில் நிற்கும்போது, உங்களுக்குத் தெரியாமலேயே உங்களுடைய மொபைல், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றில் இருக்கும் தகவல்கள் மொத்தத்தையும் திருடி, அதை வைத்தே ஒட்டுமொத்தமாக நொடிகளில் உங்களை மொட்டையடிக்க முடியும்’ என்று சொன்னால், அதிர்ச்சியாவீர்கள்தானே! ஆனால், இதுதான் உண்மை!
ஆண்ட்ராய்டு எல் அடுத்த தலைமுறை ஓஎஸ்!
கூகுள் நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ‘ஆண்ட்ராய்டு எல்’ என்கிற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஓஎஸ் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாகத் தொழில்நுட்பத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்திவந்த கூகுள், முதல்முறையாக ஓஎஸ் டிசைனிலும் பிரத்யேகமாகக் கவனம் செலுத்தியுள்ளது.
பொதுவாக, ஆண்ட்ராய்டின் ஸ்டேட்டஸ் பார் வசதி மிகவும் பிரசித்தி பெற்றது. காரணம், ஆண்ட்ராய்டின் ஸ்டேட்டஸ் பாரை முன்மாதிரியாகக் கொண்டுதான் ஆப்பிளின் ஐஓஎஸ் மற்றும் மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் ஓஎஸ் தங்களது ஓஎஸ்-ல் ஸ்டேட்டஸ் பாரைக் கொண்டுவந்தது.
ஆனால், தற்போது ஆண்ட்ராய்டு எல் மூலம் ஸ்டேட்டஸ் பார் அடுத்த கட்டத்தைத் தொட்டுள்ளது கூகுள். இந்த ஓஎஸ்-ல் உள்ள ஸ்டேட்டஸ் பார் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் தடவை இழுக்கும்போது மிஸ்டு கால், மெசேஜ், இ-மெயில் போன்ற பொதுவான நோட்டிபிகேஷன்கள் தெரியும். மீண்டும் ஸ்டேட்டஸ் பாரை இழுத்தால், போனுக்கான முக்கிய செட்டிங்குகள் திரையில் தோன்றும். இதை வைத்துக்கொண்டு சில நொடிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் செட்டிங்கை மாற்றிக்கொள்ளலாம்.
பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை
வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழ
பான்மை தரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
யானைமுகனைப் பரவி அஞ்சலி செய்விப்பாம்
பிள்ளையார் சுழி
நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம்மவர்களின் உயிரோடு கலந்த உறவாடும் தெய்வம் பிள்ளையார்.
‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’ என்பதும் ‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடரும் வினைகளே’ என்பதும் நமது ஊர்களில் சாதராணமாக பழகி வரும் மொழிகள்..
பிள்ளையார்
எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று நமது காரியங்கள் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. இப்படியெல்லாம் இருக்கிற பிள்ளையார் பற்றிய தவறான கருத்துக்களும் கூட நம்மவர்களிடத்தில் பரவியிருக்கிறதை வேதனையோட பார்க்க வெண்டியிருக்கிறது. முக்கியமாக, மதமாற்றிகளின் கேலிக்கு உள்ளாகும் கடவுள்களில் பிள்ளையாரும் முக்கியமானவர். இப்படித் தான் அண்மையில் நண்பர் ஒருவர் கிறிஸ்துவர் ஒருவர் சொன்னார் என்று பிள்ளையார் பற்றிய சில கருத்துக்களைச் சொன்னார்.
அதுவே இக்கட்டுரை எழுதுவதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.
பிள்ளையாரின் பிறப்பு
வியாசரைப் போற்றுவோம்!
ஜூலை -12 வியாசபூஜை
நம் பாரதத்தின் மிகப்பெரிய காவியமான மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். இவர் ராமபிரானின் குலகுருவான வசிஷ்டரின் கொள்ளுப்பேரன்; பராசர முனிவரின் மகன். இவரின் மகனான சுகப்பிரம்ம முனிவர், (கிளிமூக்கு கொண்டவர்) தந்தைக்கும் மேலாகப் புகழ் பெற்றவர்.
வியாசர் என்பது பதவியைக் குறிக்கும் ஒரு சொல். இதற்கு, ‘வேதங்களைப் பிரிப்பவர்’ என்று பொருள். வேதங்களை ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என, பிரித்தவர் வியாசர். ‘வியாசம்’ என்றால், கட்டுரை என்றும் பொருளுண்டு. கட்டுரையில் பத்தி பிரித்து எழுதுவது போல, வேதங்களைப் இவர் பிரித்தார்.
இவரது நிஜப்பெயர் கிருஷ்ண துவைபாயனர். ‘கிருஷ்ண’ என்றால், கருப்பு. இதனால் தான், பவுர்ணமிக்கு பின், அமாவாசை வரை வரும் பதினைந்து தேய்பிறை நாட்களை, கிருஷ்ண பட்சம் என்கின்றனர். அதாவது, இருட்டை நோக்கி செல்லும் காலம். ‘த்வைபாயனர்’ என்றால், தீவில் பிறந்தவர் என்று பொருள். வியாசர் நாற்புறமும் தண்ணீர் சூழ்ந்த ஒரு தீவில் பிறந்தவர்.
இவரது தாய் சத்தியவதி. சேதிநாட்டு அரசனான உபரிசரவசுவின் மகள். இவள் ஒரு மீனின் வயிற்றில் பிறந்ததால், உச்சைச்ரவஸ் என்ற மீனவ தலைவர் வீட்டில் வளர்ந்தாள். இவள் யமுனை நதியில், படகு ஓட்டி பிழைப்பை நடத்தி வந்த சமயத்தில், ஒரு நாள், பராசர முனிவர் அங்கு வந்தார். அந்த நேரம் மிக நல்ல நேரமாக இருந்ததால், பராசரார், ‘பெண்ணே… இந்த சமயத்தில் நாம் இணைந்தால், உலகம் போற்றும் ஒரு உத்தமக் குழந்தையைப் பெறலாம்…’ என்றார். சத்தியவதி மறுத்தாள். பின், அவளைச் சமாதானம் செய்து, அவளுடன் இணைந்தார். அவ்வாறு பிறந்த பிள்ளையே வியாசர். இதனால் தான், நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காதே என்பர்.
வழி தவறாக இருந்தாலும், நல்லது நடக்க, சில சமயங்களில், நிர்பந்தங்களை ஏற்க வேண்டி வருகிறது. வியாசர் பிறக்காவிட்டால், மகாபாரதம் கிடைத்திருக்காது. இன்று கூட குழந்தை இல்லாதவர்கள், வேறு ஒருவரின் அணுவை ஏற்று, சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெறுவது, தங்களுக்கு ஒரு வாரிசு வேண்டுமே என்பதற்காகத் தான். இதை, இன்று உலகம் அங்கீகரித்து விட்டது. இதுபோல் தான், அன்றும் நடந்துள்ளது.
விஷ்ணுவே, வியாசராக பிறந்தார் என்றும் சொல்வதுண்டு. இவர் வேதங்களைப் பிரித்தவர் என்பதால், வேதம் ஓதுவோர் இவரை, குருவாக ஏற்றுள்ளனர். மடாதிபதிகள் இவரது பூஜை நாளில், சாதுர்மாஸ்ய விரதம் (நான்கு மாத தவம்) துவங்குவர்.
பணக்காரனுக்கும் ஏழை எளியவரைப் போலவே வாழ்வில் துன்பங்கள் உண்டாகின்றன. ஏழை பணத்திற்காக அலைகிறான்; பணக்காரன் நிம்மதி தேடி அலைகிறான் என்பது போன்ற அற்புதக் கருத்துகளை உதிர்த்தவர் வியாசர். அவர் எழுதிய மகாபாரதத்தை படிப்போம். அதிலுள்ள சிறந்த தர்மநெறிகளைக் கடைபிடித்து வாழ்வோம்.