Daily Archives: ஜூலை 12th, 2014

மிஸ்டர் கழுகு: ஜெ. Vs ஜெ. மீண்டும் போர்

 

கழுகார் உள்ளே நுழைந்ததும் பழைய ஃபைலைக் கேட்டு வாங்கி, நெடுநேரம் திருப்பிக்கொண்டு இருந்தார். சிறிது இடைவெளியில் எதையோ கண்டுபிடித்தவராகச் சிரித்துக் கொண்டபடி நம்மைப் பார்த்தார்.

27.04.14 இதழில் இருந்து எடுத்து கழுகார் வாசிக்கச் சொன்ன செய்தி இதுதான்…

”சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் வலை​தளத்தில், ‘கிறிஸ்துவ பாதிரியார்​களும் முஸ்லிம் மதத் தலைவர்களும், சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களுடைய ஓட்டுக்களை இழக்க வேண்டிவரும் என்றும் மிரட்டுகின்றனர். இதற்கு என்ன செய்யப்போகிறார் ஜெ.ஜெ?’ என்று பதிவிட்டுள்ளாராமே?”

Continue reading →

தடுப்பூசியின் அவசியங்கள்! தடுப்பூசி ரகசியங்கள் – 2

லகில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வரை ஒரு நோய்க்கான எதிர்ப்பு சக்தி என்பது, அந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அவருக்கு எதிர்ப்பு சக்தி பெறப்படுவதாக இருந்தது. உதாரணத்துக்கு… சின்னம்மை ஒருவருக்கு வந்து குணமான பிறகு, அந்த நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுவதால், அவரது வாழ்நாளில் அந்த நோய் மீண்டும் வருவது இல்லை. ஆனால், நோய் ஏற்படும்போது அவர் நோயின் தன்மையால் துன்பப்படுவார். அவருடன் நெருங்கிப் பழகும் குடும்பத்தினர்கள், நண்பர்கள் அல்லது மாசடைந்த சுற்றுச்சூழல் வழியாக மற்றவர்களுக்கும் நோய் பரவ வழி உண்டு. நோய் தீவிரமடையும்போது, அந்த நபர் உயிரிழக்கவும் நேரலாம்.

இந்த நிலைமை, 1796-ம் ஆண்டில், ‘எட்வர்ட் ஜென்னர்’ என்ற இங்கிலாந்து மருத்துவர், பெரியம்மை நோய்க்கு (Small pox) முதல்முறையாகத் தடுப்பூசியை அறிமுகப்படுத்தி, அந்த நோயைக் கட்டுப்படுத்திய பிறகு மாறிவிட்டது. ஒருவர், குறிப்பிட்ட நோய்க்கான தடுப்பூசியை முறையாகப் போட்டுக்கொண்டால், அந்த நோய்க்கு உண்டான எதிர்ப்பு சக்தி அவருக்குக் கிடைத்துவிடுகிறது; அதன் பிறகு, அவருக்கு அந்த நோய் வருவது இல்லை என்பது உறுதியானது. இதன் மூலம் தடுப்பூசிகளின் மகிமையை உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியது.

Continue reading →

முகத்தின் அழகு பழத்தில் தெரியும்!

 

‘முகம் அழகா இருக்கா..? டல்லா இருக்கா?’ என்று, அடிக்கடி கண்ணாடியைப் பார்க்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ”முகத்துல ஏன் கருப்புத் தட்டியிருக்கு? கண்ணுக்குக் கீழே கரு வளையமா? ஐய்யய்யோ நமக்கு வயசாயிடுச்சா! சுருக்கமா இருக்கே. என்ன பண்ணலாம்..?”  – இப்படி, கேள்விகள் கிளம்பிவந்து கவலை ரேகையை அதிகரிக்கும்.

Continue reading →

விலையைக் கொடுத்து… வினையை வாங்கி..! தொப்பையைக் கரைக்கும் பெல்ட்…

டலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, முந்தைய தலைமுறையினர் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம், உடற்பயிற்சி, யோகா என்று நேரம் ஒதுக்கினார்கள். அடுத்த தலைமுறை, ‘ஜிம்’ சென்றார்கள். இன்றைய இளையதலைமுறையினர் பீட்ஸா, பர்கர் என ஜங்க் ஃபுட்டுக்கு அடிமையாகி, ஆண்களும், பெண்களும் 30 வயதிலேயே இலவச இணைப்பாக தொப்பையை வாங்கிக்கொள்கிறார்கள். இதைச் சரிசெய்ய நேரமும், பொறுமையும் இல்லாத இவர்களை எல்லாம் கவரும் விதமாக, ‘உடலைக் குறைக்க, தொப்பையைக் கரைக்க’ என உணவாகச் சாப்பிடும் பவுடரில் இருந்து, உடற்பயிற்சிக் கருவிகள் வரை பலவும் சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன.

உச்சபட்சமாக, ‘உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடையைக் குறைக்கலாம். குறிப்பாக, தொப்பையைக் கரைக்கலாம்’ என்றெல்லாம் ஆசைகாட்டிக்கொண்டிருக்கின்றன, பல பெல்ட் வகைகள். மின்சாரத்தில் இயங்கக்கூடிய பெல்ட், மின்சாரம் மற்றும் காந்தம் உள்ள பெல்ட் என பலவகைகளில், அதுவும் மலிவு விலையில் கிடைக்கின்றன. இப்படி தொப்பையைக் கரைக்க இறங்கிய சிவகங்கையைச் சேர்ந்த வெங்கடேஷின் நிலையை, ஒரு சோறு பதமாகக் கேளுங்கள்.

Continue reading →

லக்கி டிரா… உஷார்!

 

மெயில் அனுப்பும்போது பிசிசி (bcc) என்கிற வகையில் அனுப்பினால், ஒருவரின் ஐ.டி மற்றவருக்குத் தெரியாது. டூ (to) மற்றும் சிசி (cc) மூலமாக அனுப்பினால், அனைவருக்கும் மற்றவர்களின் மெயில் ஐ.டி தெரிந்துவிடும். அதை அவர்கள் தங்களின் நட்பு வட்டத்துக்கு ஃபார்வர்டு செய்யும்போது, முகம் தெரியாத பலரின் பார்வைக்கும் அனைவரின் ‘ஐ.டி’யும் சென்று சேரும். இது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்க வாய்ப்பு உண்டு.

அலைபேசியில் உள்ள ‘ப்ளூ டூத்’ வசதியை தேவைப்படும்போது மட்டும் ஆன் செய்து, பின் மறக்காமல் ‘ஆஃப்’ செய்துவிட வேண்டும். மறந்தால், அனைத்து விவரங்களும் மற்றவர்களின் அலைபேசிகளுக்கு தானாகவே செல்லக்கூடும்.

டெபிட்/கிரெடிட் கார்டு ஆகியவற்றின் பின்பக்கத்தில், அவற்றின் பின் நம்பரை எழுதாதீர்கள். பெட்ரோல் பங்க், கடைகள் என்று எங்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினாலும், கார்டை பணியாளரிடம் கொடுத்து, கையோடு திரும்பப் பெறுங்கள். ஏனெனில், டெபிட்/கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடும் ஸ்கேனர்கள் நிறைவே இருக்கின்றன. 

தியேட்டர், மால்கள், திருவிழாக்கள் என்று பல இடங்களிலும் நின்று கொண்டு, ‘லக்கி டிரா… உங்கள் மொபைல் எண், இ-மெயில் ஐ.டி மட்டும் சொல்லுங்கள்’ என்று கேட்டு சிலர் நின்று கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் இதைச் செய்து கொண்டிருப்பார்கள். என்றாலும், நீங்கள் அவர்களிடம் கொடுத்த தகவல்கள், அடுத்தவருக்குச் செல்லாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

வலைதளத்தை யார் வேண்டுமானாலும் உருவாக்கமுடியும் என்பது போலிகளுக்கு வசதியாக இருக்கிறது. ‘வேலை வாங்கித் தருகிறோம்… கடன் தருகிறோம்… தொழில்கற்றுத் தருகிறோம்…’ என்று எப்படி வேண்டுமானாலும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடமுடியும். உஷார்… உஷார்.

ஒரு வங்கி அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தின் வலைதளம் போலவே போலியான வலைதளத்தை உருவாக்கி, நம்முடைய வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை திருடும் ‘ஃபிஷிங்’ வேலைகளும் அதிகரித்துள்ளன. சம்பந்தப்பட்ட வலைதளத்துக்குள் நீங்கள் சென்றதுமே… முகவரி இருக்கும் பகுதியில் பூட்டு வடிவம் ஒன்று தோன்றுவதுடன், முகவரி மற்றும் அந்த பூட்டு இருக்கும் பகுதியின் பின்புலமானது பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். இதை வைத்தே, ஒரிஜினல் என்று உறுதி செய்யலாம்.

டூப்ளிகேட் ஏ.டி.எம் மெஷின் அறிவீர்களா?!

இன்றைக்கு சந்துபொந்துகளில்கூட ஏ.டி.எம் மெஷின்கள் உள்ளன. அதில் சில, நாம் கேள்விப்படாத வங்கியின் பெயரில் இருக்கும். அவற்றில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பது கூடாது. காரணம், ஒருவேளை அது மோசடி ஏ.டி.எம் ஆகவும் இருக்கக் கூடும். அதில் நம் டெபிட் கார்டை செருகினால், பணம் வரும், அல்லது மெஷினில் பணம் இல்லை என்கிற தகவல் வரும். ஆனால், அடுத்த 15 நிமிடங்களுக்குள், நம் கார்டை ஒருவித ‘ஸ்கேனர்’ மூலம் சதிகாரர்கள் ஸ்கேன் செய்து, டூப்ளிகேட் கார்டு உருவாக்கிவிடுவார்கள்.

நம் அக்கவுன்டில் உள்ள பணம் அத்தனையும் கொள்ளையடிக்கப்படும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீரில் நடந்த ஒரு பெரும் நிகழ்ச்சியின்போது, இத்தகைய ஏ.டி.எம் அமைக்கப்பட்டு, கொள்ளை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிச்சம் தந்த எடிசன்!

‘நீ      ஒன்றுக்கும் லாயக்கற்றவன்’ என்று நம்மைப் பார்த்து யாராவது சொன்னால், நமக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். அவரோடு நிச்சயம் சண்டை போடுவோம். ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன் அப்படியல்ல; பள்ளிக்கூடத்தில் படிக்க லாயக்கற்றவர் என்று தன்னைத் தூற்றியவர்கள்முன் ஆயிரத்துக்கும் அதிகமான கண்டுபிடிப்பு களை நிகழ்த்தி, தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்தவர். ஆனால், அதற்காக அவர் தாண்டிவந்த தடைகள் பலப்பல.

Continue reading →

எக்ஸெல் பைலை மறைக்கவும் திறக்கவும்:

எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வரு கிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும். நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பைல் மறைக்கப்பட்டுவிடும். விண்டோ மெனு சென்று தற்போது திறந்திருக்கும் பைல்களின் பட்டியலைப் பார்த்தாலும் அதில் இந்த பைல் இருக்காது.
சரி. இப்போது அந்த பைலை மீண்டும் திறந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் (Unhide) என்பதனைக் கிளிக் செய்யலாம். அல்லது ஆல்ட் + டபிள்யூ + யு ஆகிய கீகளை அழுத்தலாம். அப்போது ஒரு விண்டோ திறக்கப்பட்டு அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள் அனைத்தும் காட்டப்படும். நீங்கள் எந்த பைலை மறைத்து வைத்ததிலிருந்து மீட்க விரும்புகிறீர்களோ அந்த பைலின் பெயர் மீது கிளிக் செய்து அதனைத் திறந்து பணியாற்றலாம்.
இப்போது ஒரு சந்தேகம் உங்களூக்கு வரலாம்? மறைக்கப்பட்ட பைலை மீண்டும் கொண்டு வராமல் எக்ஸெல் புரோகிராமை மூடிவிட்டால் என்ன நடக்கும்? அடிப்படையில் பார்க்கையில் எக்ஸெல் புரோகிராமை மூடும்போது, அப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைலை பதியவா என்று கேட்கும். மற்ற பைல்களை மூடும்போது சேவ் செய்ய அல்லது வேண்டாம் என நினைத்தால் அதற்கேற்றார்போல் யெஸ் / நோ கொடுத்து வெளியேறலாம்.
இங்கே வேறுபாடு என்னவென்றால் நீங்கள் மறைத்து பின் மீண்டும் திறக்காமல் விட்ட பைலைத் திறக்க பின்னொருமுறை கட்டளை கொடுத்தால், பைல் திறந்து உடனே மறைக்கப்பட்டுவிடும். மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் பட்டனை அழுத்த பைல் மீண்டும் பயன்படுத்தக் கிடைக்கும். எனவே அய்யோ போய்விட்டதே! என்ற கவலை வேண்டாம்.