Daily Archives: ஜூலை 13th, 2014

வீட்டிலேயே செய்யலாம் ஆஹா… யோகா

 

30 வயதைத் தாண்டினாலே நம் நரம்புகளுக்குள் மெல்லிய பதட்டம் ஊடுருவத் தொடங்குகிறது. அண்டை வீட்டுக்காரர், அலுவலக நண்பர்கள், எப்போதேனும் சந்திக்க நேர்கிற பால்யகால நண்பர்கள் என யாருக்கேனும் ஷ§கரோ பி.பி.யோ இருந்தால், உடனே அவரை நம்முடன் ஒப்பிடத் தொடங்குகிறோம். ஒருபுறம் வாய்க்கு ருசியான உணவுகளை உண்ணத் துடிக்கிற நாக்கு,.. இன்னொருபுறம் சுற்றியுள்ள சூழலில் பிரமாண்டமாய் எழுந்து நிற்கும்  நம் ஆரோக்கியம் குறித்த அச்சம்… இரண்டுக்கும் இடையில் அல்லாடிப் போகிறோம். நமது முன்னோர்களின் உடல் உழைப்பு கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்துபோய், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத, வியர்வை சிந்துவதை நினைத்துப் பார்க்கவே முடியாததாய் மாறிவிட்டது நம் வாழ்க்கைமுறை.

ஒரு கட்டத்துக்குப் பிறகு டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவது என்பது அத்தியாவசியக் கடமைகளில் ஒன்றாகிவிடுகிறது. ஆனால், இப்படி நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதைவிட, கொஞ்சம் மெனக்கெட்டு, அதே உடலை யோகாசனம் செய்யப் பழக்கப்படுத்தினால் மருத்துவச் செலவும் மிச்சம். மன உளைச்சலும் இல்லை. இதற்காகத் தனி இடம் தேடி அலையவேண்டியதும் இல்லை.

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான யோகாசனப் பயிற்சிகளை சென்னை, திருவல்லிக்கேணி விவேகானந்தா கேந்திராவின் யோகப் பயிற்சியாளர் தங்கலட்சுமி விவரிக்க, மற்றொரு பயிற்சியாளரான நளினி அருமையாக அவற்றைச் செய்து காட்டினார்.

எளிய பயிற்சிகளைச் செய்யுங்கள். இனிய வாழ்க்கைக்கு மாறுங்கள்!

   இனியெல்லாம்… ‘யோக’மே!

சுவாசப் பயிற்சிகள்!

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-3

யார் எல்லோரோடும் கலக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களோ, அவர்களையே இயற்கை ஆசீர்வதிக்கிறது!

இந்த உண்மையை எளிமையான உதாரணம் மூலமாக விளக்குகிறேன். ஸ்டான்லி மில்லர், ஹெரால்ட் யூரே… ஆகிய இருவரும் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். ஏராளமான பரிசோதனைகளைச் செய்தவர்கள். மீத்தேன், அமோனியா, ஹைட்ரஜன், தண்ணீர் ஆகிய நான்கையும் கண்ணாடிக் குடுவைகளில் வைத்து அவர்கள் ஒரு பரிசோதனைச் செய்தனர். இது நடந்து அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. சுமார் ஏழு நாட்கள் அந்தச் சோதனை நடந்தது. அவற்றின் முடிவில், கார்பன் பற்றி சில கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்கள்.

10 சதவிகித கார்பன் கனிமங்கள் தன்னிச்சையாகப் பலவற்றோடு கலந்து உயிர் தோன்றுவதற்குத் தேவையான சர்க்கரை, கொழுப்பு, நியூக்ளிக் அமிலங்கள் போன்றவற்றை உருவாக்குகின்றன என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பு.  இத்தனைக்கும் மீத்தேனில் மட்டும்தான் கார்பன் இருக்கிறது. கார்பன் எதுவோடு வேண்டுமானாலும் கலக்கும் சக்தி கொண்டது என்று கண்டுபிடித்தார்கள். பூமியில் இரண்டு விழுக்காடு மட்டும்தான் கார்பன் இருக்கிறது. நம் உடலிலோ அது 20 விழுக்காடு. பூமியில் கார்பனைப்போல எத்தனையோ மடங்கு சிலிக்கான் இருக்கிறது. ஆனால், கணினியில் சில்லு செய்யப் பயன்படுத்தும் சிலிக்காவை, மனிதனின் செல்லைச் செய்ய இயற்கை தேர்ந்தெடுக்கவில்லை. யார் எல்லோரோடும் கலக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களோ அவர்களையே இயற்கை ஆசீர்வதிக்கிறது என்று இதனால்தான் சொல்கிறோம்!

Continue reading →

டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்!

பார்லர்

., ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ பார்லரின் சீனியர் டிரெயினர் பத்மா சொன்ன சம்மருக்கான பார்லர் சிகிச்சைகள்…

”க்ளோயிங் ரேடியன்ஸ் என்றொரு சிகிச்சை இருக்கிறது. இது, டல் சருமத்துக்கான ஸ்பெஷல் ஃபேஷியல். இது சருமத்தைப் பொலிவாக்குவதோடு, தளர்ந்த சருமத்தை இறுக்கமாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும்.

Continue reading →

விண்டோஸ் எக்ஸ் பி சிஸ்டத்திற்கு சீனாவில் பாதுகாப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்குத் தந்து வந்த பாதுகாப்பு சப்போர்ட் பைல்கள் தயாரித்து வழங்கும் வேலையைநிறுத்திக் கொண்டது. சீனாவில் பல கோடிப் பேர் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துவதாகவும், எனவே தொடர்ந்துபாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்ட சீன அரசின் வேண்டுகோளை, மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொள்ளவில்லை.

Continue reading →