வரிக் கணக்கு தாக்கல்: ஈஸியா செய்யலாம் இ-ஃபைலிங்!
ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்யவேண்டியது கட்டாயம்.
இ-ஃபைலிங் செய்ய ஆரம்பிக்கும்முன், பான் கார்டு, ஃபார்ம் 16 (கம்பெனி வழங்கியது), ஃபார்ம் 16 ஏ (சம்பளம், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்காக டிடிஎஸ் பிடித்துக் கட்டப்பட்ட விவரம்), வங்கிக் கணக்குகளின் மொத்த பரிமாற்ற விவரம், மூலதன ஆதாய விவரம், வீட்டு வாடகை வருமானம், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்கள் போன்றவற்றைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.
மிஸ்டர் கழுகு: புதுவையில் வீசிய சுனாமி
கடந்த இதழைக் கையோடு எடுத்து வந்திருந்த கழுகார், ”ஜெயலலிதாவுக்கும் ஜெயேந்திரருக்குமான போரில் முதல் தலை உருண்டுவிட்டது பார்த்தீரா?” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார்.
”காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டவர்களை புதுவை நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி வெளியான இந்தத் தீர்ப்புக்கு அப்பீல் போகும் கோப்பில் கடந்த 10-ம் தேதி புதுவை துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கையெழுத்துப் போட்டார். 11-ம் தேதி நள்ளிரவில் வீரேந்திர கட்டாரியாவை துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கும் முடிவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எடுத்தார். ‘மத்திய அரசின் நிலைப்பாடு என்னவென்று கேட்காமல் துணை நிலை ஆளுநர் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கோப்பில் எப்படிக் கையெழுத்துப் போடலாம்?’ என்று கொந்தளித்துவிட்டதாம் மத்திய அரசு!”
ஆ’ நெடில் அல்ல… ‘அ’ குறில்! ஒரு ஐ.டி. ரெய்டு
இன்ஜினீயரிங் கவுன்சலிங், தள்ளுமுள்ளு தகராறாகிவிட்டது இந்த வருடம். போகட்டும்… எப்படியும் ஏதோ ஒரு ‘நகரத்துக்கு மிக அருகில்’ அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் ஸீட் கிடைத்து, நான்கு வருடங்கள் முட்டி மோதி படித்து, அரியர்ஸ் களைந்து, ‘இன்ஜினீயர்’ பட்டத்துடன் வெளியே வந்து காலர் நிமிர்த்தவிருக்கும் நண்பர்களே… ‘ஐ.டி ஜாப்’ என்ற கலர் கலர் கனவுகளுடன் காத்திருப்பீர்கள். ஆனால், அந்த கார்ப்பரேட் காட்டுக்குள் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியுமா? ஒரு ஜாலி டிரெய்லர் அடிக்கலாமா?!
கம்ப்யூட்டருக்கு புதியவரா! மெமரி ஸ்டோரேஜ்
கம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும். இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ் வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். கம்ப்யூட்டர் இயங்க இவை இரண்டும் தேவை தானா? என்ற கேள்விக்கும் பதிலைப் பார்க்கலாம்.
ராம் (RAMRandom Access Memory): இதனை ஒத்த தொழில் நுட்ப சொற்கள் மெமரி, ரேண்டம் அக்சஸ் மெமரி, ஷார்ட் டெர்ம் மெமரி, டி.டி.ஆர். மெமரி, டி.டி.ஆர்.2 மெமரி, டி.டி.ஆர் 3 மெமரி மற்றும் மேலும் சில.