வரிக் கணக்கு தாக்கல்: ஈஸியா செய்யலாம் இ-ஃபைலிங்!

ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்யவேண்டியது கட்டாயம்.

இ-ஃபைலிங் செய்ய ஆரம்பிக்கும்முன், பான் கார்டு, ஃபார்ம் 16 (கம்பெனி வழங்கியது), ஃபார்ம் 16 ஏ (சம்பளம், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்காக டிடிஎஸ் பிடித்துக் கட்டப்பட்ட விவரம்), வங்கிக் கணக்குகளின் மொத்த பரிமாற்ற விவரம், மூலதன ஆதாய விவரம், வீட்டு வாடகை வருமானம், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்கள் போன்றவற்றைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

இ-ஃபைலிங் செய்ய இந்திய வருமான வரித் துறையின் இணையதளமான https://incometaxindiaefiling.gov.in/ க்கு சென்று பான் எண் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் லாகின் செய்து உள்ளே சென்றுவிடலாம். சரியான படிவத்தைத் தேர்வு செய்து, வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.

டவுன்லோடு செய்த படிவத்தில் விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து அப்லோடு செய்ய வேண்டும். உங்களின் டிஜிட்டல் கையெழுத்தை இ-ஃபைலிங் செய்ததற்கு ஆதாரமாக ஐடிஆர் V  படிவம் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். டிஜிட்டல் கையெழுத்து இல்லை என்றால் ஐடிஆர் V படிவத்தை பிரின்ட் எடுத்து கையெழுத்துப்போட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு சாதாரண தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் அக்னாலெட்ஜ்மென்ட் இல்லாமல் இணைத்து அனுப்ப வேண்டும்.

Income Tax Department – CPC
Post Bag No.1, Electronic City Post Office,
Bengaluru, Karnataka – 560 100
e-Filing: 1800 4250 0025
+91-80-26500025

ஆன்லைனில் இ-ஃபைலிங் முறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது, டிஜிட்டல் கையெழுத்து பயன்படுத்தவில்லை என்றால் இந்தப் படிவத்தை பெங்களூரில் உள்ள சிஇசி அலுவலகத்துக்கு 120 நாட்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இது பெங்களூரு அலுவலகத்துக்குச் சென்று சேராத வரையில் நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்தது கணக்கில் வராது.

இந்த இ-ஃபைலிங் செய்ய சுமார் 25 நிமிடங்களே ஆகும். தவிர, இ-ஃபைலிங் முறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்தால் ரீஃபண்ட் விரைவில் கிடைக்கும். மேலும், ஆடிட்டர்கள் மூலமும் இ-ஃபைலிங் செய்ய முடியும். இந்த வேலையை செய்துதர பல இணையதளங்கள் இருக்கின்றன.

அவை கட்டணமாக சுமார் 250 ரூபாய் தொடங்கி குறிப்பிட்ட தொகை வரை வாங்குகின்றன. மொத்தமாக ஒரு நிறுவனத்தில் உள்ள அனைவரும் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது இந்தக் கட்டணத்தில் சலுகை அளிக்கிறார்கள்.

இவர்களிடம் உங்களின் படிவம் 16 கொடுத்தால் போதும். அவர்கள் உங்கள் சார்பாக இ-ஃபைலிங் செய்துவிடுவார்கள். பெங்களூரில் உள்ள மத்திய பரிசீலனை மையத்துக்கு (சி.பி.சி) ஐ.டி.ஆர். V கூட அவர்களே அனுப்பிவைத்துவிடுவார்கள்.

<span>%d</span> bloggers like this: