Advertisements

Daily Archives: ஜூலை 17th, 2014

தடுப்பூசி ரகசியங்கள்! – 3

டுப்பூசி என்பது எப்படி உருவாக்கப்படுகிறது? இதைத் தெரிந்துகொண்டால், அது எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது சுலபம். ‘முள்ளை முள்ளால் எடுப்பது’ என்ற சொலவடையை அடிக்கடி பயன்படுத்துவோமே, தடுப்பூசித் தயாரிப்பும் முள்ளை முள்ளால் எடுக்கிற வேலைதான். ஒரு தடுப்பூசியை உயிருள்ள, வீரியம் குறைந்த நோய்க் கிருமிகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அல்லது அழிக்கப்பட்ட கிருமிகளை முழுவதுமாகவோ, ஒரு பகுதியாகவோ பயன்படுத்தியும் தயாரிக்கலாம். இந்த மூலக்கூறுகளை ‘ஆன்டிஜென்’ (Antigen) என்கிறோம். இவைதான் ரத்தத்தில் ‘எதிர் அணு’க்களின் (Antibodies)  உற்பத்தியைத் தூண்டுகின்றன. இந்த எதிர் அணுக்கள் உடலுக்குள் நுழையும் கிருமிகளுடன் போராடி, நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றன. ஒரு தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் அது ‘தடுப்பூசி’ (Injectable Vaccine). அதையே சொட்டு மருந்தாக வாய்வழி செலுத்தினால், அது ‘வாய்வழித் தடுப்பு மருந்து’ (Oral Vaccine).

Continue reading →

Advertisements

உணவு யுத்தம்!-23

 

கடவுளும் காபி கடைகளும்

திரைப்படத் துறையைச் சேர்ந்த இளம் இயக்குநர் தனது புதிய திரைப்படம் குறித்து விவாதிப்பதற்காக என்னைச் சந்திக்க விரும்பினார். எங்கே சந்திக்கலாம் எனக் கேட்டேன். ‘காபி ஷாப்புக்கு வந்துவிடுங்கள், அங்கேதான் முழுப்படத்தின் திரைக்கதையும் எழுதினேன்’ என்றார். காபி பப் என்கிற நவீன காபி ஷாப்புகள் பண்பாட்டு மாற்றத்தின் நவீன அடையாளங்கள். அவர் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தின் காபி ஷாப்புக்குப் போயிருந்தபோது மேற்கத்திய இசையும் இலவச இணைய வசதியுள்ள மேஜை ஒன்றில் அவர் தனியே அமர்ந்திருந்தார்.

Continue reading →

”சுதாகரன் திருமணத்தை வாழ்த்த அழைக்கப்பட்டதால் ஜெயலலிதா சென்றார்!”- சொத்துக்குவிப்பு வழக்கின் சுவாரஸ்ய விவாதங்கள்

”சுதாகரன் கல்யாணத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி கரகாட்ட கோஷ்டிக்கு கொடுத்த தொகை முதல்  கட்-அவுட்கள் வைக்க செலவு செய்த தொகை வரை பெண் வீட்டாரும், கட்சிக்காரர்களும் செலவு செய்தார்களே தவிர இந்தச் செலவுகளுக்கும் என் கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது”- பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் எடுத்துவைத்த இறுதி வாதம் இது.

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் அசோகன், சீனிவாசன், அன்புக்கரசு, பன்னீர்செல்வம் ஆகியோர் மூத்த வழக்கறிஞர் குமாருடன் அவருக்கான பாயின்ட்களை எடுத்துக் கொடுக்கிறார்கள். குமாரின் வாதம் முடிந்ததும் சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் தன்னுடைய இறுதி வாதத்தை தொடங்க இருப்பதால் அவர் அதற்கான ஆயத்தப் பணிகளில் மூழ்கியுள்ளார். அதனால் அவர் நீதிமன்றத்துக்கு வருவதில்லை. இந்த வழக்கின் போக்கை கவனித்து வந்த தி.மு.க வழக்கறிஞர்களும் இப்போது நீதிமன்றத்துக்கு வருவதே இல்லை. 17 நாட்களைக் கடந்தும் தொடரும் வழக்கறிஞர் குமாரின் வாதத்தில் இருந்து….

Continue reading →

மெனோபாஸ் பருவத்தினருக்கான நலம் டிப்ஸ்!

1. உடற்பயிற்சி மிக அவசியம். இதுவரை நடைப்பயிற்சி இல்லை என்றாலும், இனி மிக அவசியம். அது மட்டுமே புற்றின் அபாயத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்!

2. மனப் பதற்றம், பயம், படபடப்பு, திடீர் வியர்வை அவஸ்தைகளுக்கு, பிராணாயாமமும், ‘சூரிய வணக்கம்’ யோகாசனப் பயிற்சியும் பெரும் பலன் அளிக்கின்றன. பாரம்பரிய மருத்துவ முறைகள், சூரிய வணக்கத்தின்போது உடலின் ஆறு சக்கரங்களை (யோகாவில் ஏழு என்கிறார்கள்) வலுப்படுத்தி, ஹார்மோன்களைச் சீராக்க உதவும்.

Continue reading →

நலம் 360’–5 (மருத்துவர் கு.சிவராமன்)

 

வ்வொரு பெண்ணும் பூப்பெய்தியதில் இருந்து, தோராயமாக 35 வருடங் களாகவது, மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்களை கொஞ்சம் வலி, கொஞ்சம் சிரமம், கொஞ்சம் பயம், கொஞ்சம் சுகவீனம் கலந்தே நகர்த்தி வருகிறார்கள். 47-51 வயதை எட்டும்போது மாதவிடாய் நின்று, ‘இனிமேல் இது இல்லை’ என்ற விடுதலையைத்தான் ‘மெனோபாஸ்’ என்கிறார்கள். இது நல்ல உடல்வாகைப் பெற்றிருக்கும் 35 சதவிகிதத்துக்கும் குறைவான பெண்களுக்குத்தான். மீதமுள்ள 65 சதவிகிதத்தினர் இந்த நாட்களில் படும் அவஸ்தைகள், அனுபவித்தால் மட்டுமே புரியும். சாதாரண ரத்தசோகையில் இருந்து, வாந்தி, தலைவலி, பிழியும் வயிற்று வலி, வயிற்று உப்புசம்… என உபாதைகள் அவஸ்தையாக, ‘சனியன்… இது எப்போ ஒழியும்?’ என்று உதிரத்துக்கு முன்னதாகவே கண்ணீர் ஊற்று எடுக்க, இறுதி யுத்தத்துக்குக் காத்திருப்பார்கள்.

Continue reading →

பொன்னாக மாறிய புற்றுமண்! அம்மன் அற்புதங்கள்…

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் வழியில் அழகுற அமைந்திருக்கிறது சாமுண்டிபுரம். கிராமத்தின் பெயருக்கு மட்டுமல்ல, அதன் சிறப்புக்கும் செழிப்புக்கும் காரணமாகத் திகழ்கிறாள், அங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசாமுண்டி அம்மன்.

மண்ணும் பொன்னான அற்புதம்!

ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் அது.  வளையப்ப செட்டியார் என்பவர், வளையல் வியாபாரத்துக்காகப் புறப்பட்டார். வழியில் புற்று ஒன்று தென்பட்டது. அதை அவர் கடக்கும் தருணத்தில், திடுமென புற்றுக்குள் இருந்து ஒரு கை நீண்டது. வளையப்பர் திடுக்கிட்டார். தொடர்ந்து ஒலித்த அசரீரி, ‘எனக்கும் வளையல் அணிவித்து விடு’ என்றது. அவ்வாறே செய்த வளையப்பரும், வளையல்களுக்குக் கூலி கேட்டார். ‘கீழேயிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொள்’ என்றது அசரீரி. அதன்படியே வளையப்பர் ஒரு பிடி மண்ணை அள்ளியெடுக்க, அந்த மண் பொன்னாக மாறி மின்னியது!

இந்தத் தகவல் ஊருக்குள் பரவியது. புற்றின் சாந்நித்தியத்தை அறிந்து சிலிர்த்த மக்கள், அன்றிலிருந்து அந்தப் புற்றையே அம்மனாகக் கருதி, வழிபடத் துவங்கினார்களாம். பிற்காலத்தில் கி.பி. 1558-ல், திப்புசுல்தான் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் சரித்திரத் தகவல் உண்டு.

வளைகாப்பு நாயகி!

ஸ்ரீசாமுண்டி, வளையல் பிரியை ஆயிற்றே! எனவே, வளையல் பிரார்த்தனையும் இங்கே பிரசித்தம். வீட்டில் வளைகாப்பு நடத்த முடியாத பெண்கள், கோயிலுக்கு வந்து அம்மனுக்கு வளையலும் பூமாலையும் வாங்கித் தருகிறார்கள். அவற்றை அம்மனுக்குச் சாற்றிய பிறகு, பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கே அம்மன் பிரசாதமாகத் திருப்பித் தருகிறார்கள். இது, வளைகாப்பு செய்வதற்குச் சமம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

பலிக்கும் பிரார்த்தனைகள்

அம்மனுக்கு மஞ்சள் கிழங்கு மற்றும் மஞ்சள் கயிறு மாலை அணிவித்து வழிபட்டு, 9 பேர் அல்லது 11 பேர் என்ற (ஒற்றைப்படை) எண்ணிக்கையிலான சுமங்கலிப் பெண்களுக்கு அந்த மஞ்சள் கயிற்றை வழங்கினால், தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும். அதேபோன்று, கோயிலைச் சுற்றியுள்ள நிலங்களில் அறுவடைக்கு முதல் நாள், நிலத்தில் விளைந்த பயிரின் விளைச்சலை அம்மனுக்கு வைத்து வழிபட்ட பிறகே அறுவடையை ஆரம்பிக்கிறார்கள். இதனால் மகசூல் அதிகமாகும் என்பது நம்பிக்கை.

நினைத்தது நிறைவேறும்

ஆடி வெள்ளி- செவ்வாய்க் கிழமைகளில் அம்மனுக்கு நடைபெறும் விசேஷ வழிபாடுகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு வழிபட, தொழிலில் விருத்தியும், இல்லத்தில் செழிப்பும் உண்டாகும். மேலும், ஆடி மாதத்தில், சாமுண்டி அம்மனை விளக்கேற்றி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் சமர்ப்பிப்பதும், அன்னதானம் செய்வதும் இங்கே விசேஷமாக நடைபெறுகிறது.

அம்மன் தெற்கு நோக்கி அருள்வது சிறப்பம்சம் என்கின்றனர். கணபதி, அக்னி பைரவர், கால பைரவர், ராக்காச்சி அம்மன் மற்றும் நாக கன்னியர்களையும் இங்கே தரிசிக்கலாம்.

அண்ணனுக்கு சீர்வரிசை!

கம்பம் நகரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீகம்பராய பெருமாள், சாமுண்டி அம்மனுக்கு அண்ணன் முறையாம். ஆனி மாதம் பெருமாள் கோயிலில் திருவிழா துவங்கும். முதல் நாள் கொடியேற்றத்தன்று அண்ணனுக்கு சீர்செய்வதற்காக அங்கு எழுந்தருள்வாள் சாமுண்டி அம்மன்.

நிறைவு நாளன்று அண்ணனுக்குச் சீர் செய்யும் அம்மன் பதில் சீர் தரும்படி கேட்க, பெருமாள் கோயிலில் இருந்து சாமுண்டி அம்மனுக்கு பதில் சீர் தரப்படுகிறது. ஆனால் அது தனக்குப் போதாது என்று கோபித்துக் கொண்டு அம்மன் தனது ஆலயத்துக்கு திரும்புகிறாள்!

சகோதர- சகோதரி உறவின் உன்னதத்தையும் அவர்களுக்கு இடையேயான உரிமைகளின் சிறப்பையும்… தெய்வத்தை முன்னிலைப்படுத்தி விளக்கும் இந்த விழா- வைபவத்தை வாழ்வில் ஒருமுறையேனும் நாம் தரிசிக்கவேண்டும்.