இரண்டறக் கலந்த பேஸ்புக்
கடந்த சில ஆண்டுகளாக, அபரிதமான வளர்ச்சி பெற்று, பேஸ்புக், அனைவரின் வாழ்க்கையோடு இணைந்து இயங்கி வருகிறது. பல பயனாளர்கள், இது ஓய்ந்து போகக் கூடாதா என்று எண்ணி வந்தாலும், எந்த வகையிலும் இது நம்மை விட்டுப் போகாது என்ற நிலையில் தான், பேஸ்புக் செயல்பாடும் அதன் பயனாளர்களும் உள்ளனர். ஏனென்றால், மனிதனின் பலவகையான தேவைகளை அது நிறைவு செய்கிறது. நம்மை உற்சாகப்படுத்துகிறது, எண்ணங்களைச் செலுத்துகிறது, எரிச்சலையும் தருகிறது, மனச்சோர்வையும் அளிக்கிறது – ஆம் அனைத்து வகையான உணர்வுகளையும் தருகிறது. பேஸ்புக் ஒரு மனிதனின் உள்ள உணர்வோட்டங்களை மாற்றி அமைக்கிறது. இது மனிதனை உற்சாகப்படுத்துகிறதா? இல்லை, ஊனப்படுத்துகிறதா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதைத்தான் இன்றைய சமூக உளவியலாளர்கள், பேஸ்புக் குறித்து கூறி வருகின்றனர். தங்கள் ஆய்வையும் இந்த காரணங்களைச் சுற்றியே அமைத்துள்ளனர். இங்கு பேஸ்புக் நமக்கு எவ்வாறு நல்லதைச் செய்திடும் எனப் பார்க்கலாம்.
1. நாம் அறியப்பட வேண்டும் என்ற உணர்வு: பள்ளிக் கூடங்களில் பயிலும்போது, நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, விளையாட்டு அணியில் நாம் இடம் பெற வேண்டும். நாம் அடையாளம் காணப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த உணர்வு நமக்கு அனைத்து வயதிலும் ஏற்படுகிறது. இந்த எண்ணத்திற்கான வடிகாலை பேஸ்புக் நமக்குத் தருகிறது. இதனால் தான், பேஸ்புக்கினை விட்டு விலகி இருப்போம் என்று திட்டமிடுபவர்கள் கூட, ஒரு நாளைக்கு மேல் விலகி இருக்காமல், மீண்டும் திரும்புகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எடையைக் குறைத்து அழகை உயர்த்தும் உன்னத வழிமுறைகள்!!!
அழகான உருவத்தைப் பெறுவது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். அதிலும் குண்டாக இருப்பவர்கள் தங்களுடைய உருவத்தை மாற்றி, மெலிதான அழகிய தேகத்தைப் பெற மிகவும் முயற்சி செய்வார்கள். ஒரே நாளில் உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது தான் ஒல்லியாக இருப்பதற்கான வழி என்று சொல்ல முடியாது. உண்மையில், பொருத்தமான சிறிய மாற்றங்களும் கூட உங்களுடைய எடை குறைப்பு முயற்சியில் பெருத்த மாற்றங்களைக் கொண்டு வரும். இங்கே தரப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நீண்ட நாட்களுக்கு பயன் பெறுங்கள். ஒரு காஸ்ட்லி ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்பதோ அல்லது தனியாக ஒரு பயிற்சியாளரை நியமித்துக் கொள்ளுங்கள் என்பதோ எளிய அறிவுரையாக இருக்க முடியாது. ஆனால், செய்யும் வேலையின்
மனிதன் மாறி விட்டான்!-4
அடுத்தவர்களை ஏமாற்றுவதற்காகச் சில குறியீடுகளை நாம் பயன்படுத்துகிறோம். அவற்றை நம்பி சிலர் வழி தவறி விடுவதும் உண்டு. நிதி மோசடிகள் இப்படித்தான். ஒத்துழைப்பது போல ஏமாற்றுவதும், மகிழ்ச்சியாக இருப்பதுபோல நடிப்பதும் இந்த வகையறாக்களே. இது மனிதர்களிடம் மட்டும் இல்லை, விலங்குகளிடம் உண்டு. பலசாலியான குரங்கு பக்கத்தில் இருக்கும்போது ஓர் உணவுப் பொருளில் அக்கறை இல்லாதது போல நடக்கிற சில குரங்குகள், அந்த பலசாலியான குரங்கு வேறுபக்கம் திரும்பியதும் அதைச் சட்டென்று மின்னல் வேகத்தில் எடுத்து விழுங்கி விட்டு அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொள்வது உண்டு. அதைப் போலவே சில இளம் ஆண் யானை, சீல்கள் (கடல் நாய்) பெண்களைப் போல பாவலா காட்டி பெண் கூட்டத்துக்குள் புகுந்து அக்கூட்டத்தின் தலைமைப் பெண் சீலோடு உறவு வைத்துக்கொள்வதும் உண்டு. எனவே ஏமாற்றுவது மனிதனுக்கு மட்டும் உள்ள ஏகபோக சொத்து அல்ல என்று ஆறுதல் அடையலாம்.
சந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை…
‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி
சந்திரனுடன் மற்றொரு கிரகம் சேர்ந்திருந்தால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்துப் பார்ப்போம்.
சந்திரன்- சூரியன்: சந்திரனுடன் சூரியன் சேர்ந்திருப்பது பித்ரு தோஷத்தைக் குறிப்பதாகும். அயல் தேசங்களுக்குப் போய் பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், செலவு செய்வதற்கு மிகவும் யோசிப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் இருக்கும். அலட்சிய மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் இவர்கள், பெற்றோரிடம் அதிக பாசம் செலுத்த மாட்டார்கள். இவர்கள் துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகளை விரும்பி உண்பர்.
கொடுத்து வைத்தவர்கள்!
கொடுக்க கொடுக்க வளர்வது கல்வி மட்டுமல்ல, தானமும் தான். இறை வழிபாட்டோடு, தானம் கொடுப்பதையும் கடை பிடித்தால், நம் கர்ம வினைகளிலிருந்து மீண்டு, முக்தி பேற்றை அடையலாம் என்பதற்கு, மகாபலி சக்கரவர்த்தியின் கதையே சான்று.
மகாபலி முற்பிறப்பில், பெண் பித்து கொண்டவனாகவும், முன்கோபியாகவும், எல்லாவகையான கெட்ட நடத்தை கொண்டவனாகவும் இருந்தான். ஒரு நாள் அவன், கிண்ணத்தில் சந்தனத்தையும், வாசனை மிகுந்த மாலையையும் எடுத்துக் கொண்டு, விலை மாது வீட்டை நோக்கி, சென்று கொண்டிருந்தான்.
அப்போது, கல் தடுக்கிக் கீழே விழுந்தவன், அடிபட்டு, தெருவில் மயங்கிச் சரிந்தான். அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. பின், சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவனுக்கு, விலைமாது மீது இருந்த மோகம் குறைந்து, தன் மீதே வெறுப்பு வந்தது. அந்நிலையில், அவன் பார்வையில், ஒரு சிவலிங்கம் தென்பட்டது. கையில் இருந்த சந்தனத்தை சிவலிங்கத்தின் மீது பூசி, மாலையைச் சார்த்திவிட்டு, வீடு திரும்பினான்.
காலகிரமத்தில் அவன் மரணமடைய, அவனை யமலோகத்தில் நிறுத்தினர் யமதூதர்கள்.
அவனின் பாவ, புண்ணிய கணக்கை பார்த்த சித்ரகுப்தன், ‘நீ செய்த பாவங்களுக்கு, அளவே கிடையாது; அத்துணை கொடும் பாவங்களை செய்துள்ளாய். ஆனால், சிவலிங்கத்திற்கு சந்தனம் பூசி, மாலை சாற்றிய ஒரே ஒரு புண்ணியம் மட்டும் உள்ளதால், அந்த புண்ணிய பலனாக, இந்திர பதவியில், மூன்று நாளிகை (72 நிமிடங்கள்) நேரம் இருக்கலாம்…’ என்றான்.
அதைக் கேட்டதும் அவன், ‘முதலில் புண்ணியப் பலனை அனுபவித்து விடுகிறேன்; அதன்பின், நரக தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்…’ என்றான்.
அதனால், அவனை இந்திரப் பதவியில் அமர்த்தினர்.
கொடும்பாவியான அவன், தானம் கொடுப்பதன் மகிமையை உணர்ந்து விட்டதால், மனதை, இந்திர போகங்களை அனுபவிப்பதில் செலுத்தாமல், அந்தப் பதவியில் இருந்த சிறிது நேரத்தில், தான – தர்மங்கள் செய்யத் தீர்மானித்தான். உடனே, இந்திர லோகத்தில் இருக்கும் காமதேனு உச்சைசிரவஸ், ஐராவதம், சிந்தாமணி, கற்பக விருட்சம் என அனைத்தையும், முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டான்.
குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரம் முடிந்ததும், யமதர்மனின் முன் நின்று, ‘புண்ணியப் பலனை அனுபவித்து விட்டேன்; நரகத்தை அனுபவிக்க தயார்…’ என்றான்.
அதற்கு யமதர்மன், ‘இந்திரப் பதவியிலிருந்த போது, நீ செய்த தானத்தின் பலனாக, உனக்கு நரக வாசம் போய், ஏராளமான புண்ணியத்தை அடைந்து விட்டாய். அதனால், அப்புண்ணியத்தின் பலனாக, கொடைவள்ளலான விரோசனனின் மகனாக மகாபலியாகப் பிறப்பாய்…’ என்ற, வரத்தைக் கொடுத்து விட்டார்.
அதன்படியே, அவன் மகாபலியாக பிறக்க, அந்த மகாபலியிடம் தான், வாமனர் வந்து, மூன்று அடி மண் கேட்டார்.
தானத்தின் மகிமையை விளக்குவதற்காக சொல்லப்படும் கர்ண பரம்பரை கதை இது. தானம் கொடுப்பவர்கள், புண்ணியத்தை, கொடுத்து வைப்பவர்கள். அவ்வாறு கொடுத்து வைப்போருக்கு தான், வட்டியும் முதலுமாக எல்லாமே திரும்ப கிடைக்கும். அதனால், நாமும் இயன்றவரை, அடுத்தவர்களுக்கு கொடுத்து வைப்போம்.