Daily Archives: ஜூலை 19th, 2014

இது ‘பிசி’ சிட்டிசன்களின் ‘பசி’ கதை’.. இருந்தா சும்மா இருப்பாங்களாம். பாய்ந்தால் புலியாய்ருவாங்களாம்

லண்டன்: வேலை வேலை என்று எப்போது பார்த்தாலும் வேலையில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு செக்ஸ் ஆசை என்பது குறைவாகத்தான்

Continue reading →

மிஸ்டர் கழுகு: கண்டுபிடிக்கவே முடியாதா?

”இரண்டு இதழ்களாக நான் சொல்லி வந்தது அவர்களது வாயில் இருந்தே வந்துவிட்டது பார்த்தீரா?” என்று சொல்லியபடி உள்ளே வந்தார் கழுகார்.

”சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் விவகாரத்தில், புதுவை கவர்னர் வீரேந்திர கட்டாரியாவின் பதவி காவு வாங்கப்பட்டுவிட்டது. இதனை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார். ‘என்னுடைய நீக்கத்துக்கான காரணங்களை ஜனநாயக முறைப்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக நான் கேட்டுத் தெரிந்துகொள்வேன். சங்கரராமன் வழக்கின் மேல்முறையீட்டில் புதுவை முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலாளர், சட்டத் துறை செயலாளர் ஆகியோர் கையெழுத்து போட்டிருந்தார்கள். தமிழக அரசின் பரிந்துரையும் அதில் இருந்தது. அதனால்தான், மேல்முறையீட்டு உத்தரவில் நான் கையெழுத்து போட்டேன். இந்த விவகாரத்தில் நான் ஏமாற்றப்பட்டேன்’ என்று வீரேந்திர கட்டாரியா வெளிப்படையாகவே புலம்பியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, சங்கரராமன் வழக்குதான் அவரது பதவியைப் பறித்துவிட்டது என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது!”

”உண்மை!”

Continue reading →

16 அடி தூரத்தில் வயர்லெஸ் சார்ஜ்

கொரியாவைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள், ஒரே நேரத்தில், 16 அடி தூரத்தில் வைத்து 40 ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்து, சாதனை படைத்துள்ளனர். கொரியா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தைச் சேர்ந்த (Korean Advanced Institute of Science and Technology (KAIST) இந்த வல்லுநர்கள், டயபோல் காயில் ரெசனண்ட் சிஸ்டம் ("Dipole Coil Resonant System” (DCRS))) என்ற ஒன்றை இதற்கென உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். இது ட்ரான்ஸ்மிட்டருக்கும், மின் சக்தியை ஏற்றுக் கொள்ளும் சாதனத்தில் உள்ள காயில்களுக்கும் இடையே செயல்பட்டது.
வயர் இணைப்பு எதுவும் இன்றி, மின்சக்தியைக் கடத்தும் ஆய்வு தற்போது பல பல்கலைக் கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில், 2007 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி. என அழைக்கப்படும், உலகின் முன்னணி பொறியியல் ஆய்வு மையமான மாசசுசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Massachusetts Institute of Technology (MIT)) இந்த வகையில் முதல் ஆய்வினை மேற்கொண்டது. பின்னர், பல பல்கலைக் கழகங்கள் இதனைத் தொடர்ந்தன. இவர்களில், கொரியன் ஆய்வு மையம், குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. இனி, வீடுகளில் வை-பி வழி இணைய இணைப்பு பயன்படுத்துவது போல, வயர் இணைப்பு இன்றி, ஒரே நேரத்தில் பல மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.

Continue reading →