Daily Archives: ஜூலை 21st, 2014

பிசாசு போய், பேய் வந்தது… டும் டும் டும்!-(விகடன்)

பத்து நாட்களுக்கு முன் புத்தம்புது பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘இப்படியே போனால், மன்மோகன் சிங் கடந்த இருபது ஆண்டுகளில் சாதிக்க முடியாததை… இரண்டே ஆண்டில் நரேந்திர மோடி சாதித்து விடுவார் என்றே தோன்றுகிறது. அட, இந்தியாவை வெளிநாட்டுக்காரர்களிடம் மொத்தமாக விலை பேசுவதைத்தான் சொல்கிறேன்’ என்று எழுதியிருந்தேன்.

அந்நிய முதலீட்டு மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் அரசுகூட இத்தனை வேகமெடுக்கவில்லை. பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறை, ரயில்வே துறை என்று அனைத்திலும் அதிரடியாக அந்நிய முதலீட்டை நோக்கி மோடி அரசு, அசுர வேகமெடுத்திருப்பதைத்தான் அதில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

Continue reading →

ஊழல் நீதிபதிக்கு நிர்ப்பந்தம் அளித்து பதவி உயர்வு வாங்கி கொடுத்ததாக திமுக மீது மார்க்கண்டேய கட்ஜு குற்றச்சாட்டு!

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசை கட்டாயப்படுத்தி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மாவட்ட நீதிபதி ஒருவரை, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பணி நியமனம் செய்ய வைத்ததாக திமுக மீது முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்து வரும் மார்கண்டேய கட்ஜூ, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர் ஆவார்.

Continue reading →

மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்!

கை, கால் மூட்டுக்களில் லேசான வலி வந்தால், டாக்டர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ‘இது வாத நோய்; இதற்கு மருந்தில்லை’ என, நினைக்க வேண்டாம். அலட்சியம் காட்டினால், முடக்குவாதமாகி, எலும்பு மூட்டுக்கள் இணைந்து, சிக்கலான நிலை ஏற்பட்டு விடும்
1. முடக்கு வாதம் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

Continue reading →

விண்டோஸ் 7 எக்ஸ்புளோரர்

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட , இதனை எப்படி செட் செய்திட வேண்டும் என்பதனை இங்கு பார்க்கலாம்.

Continue reading →

டாகுமெண்ட் இறுதியாக சேவ் செய்த நாள்

வேர்ட் புரோகிராமில், ஒவ்வொரு முறை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றினை சேவ் செய்திடுகையில், அந்த டாகுமெண்ட் குறித்த சில விஷயங்கள் தானாகவே அற்றைப்படுத்தப்படுகின்றன. இதில் ஒரு தகவல், அதனை இறுதியாக எடிட் செய்த தேதியாகும்.

Continue reading →

விண்வெளி இந்தியன்!

‘சந்திராயன்’, ‘மங்கள்யான்’… வரிசையில் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் பெயரிடப்படாத, தீவிரமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அடுத்த திட்டத்தின் பெயர், ‘மேன் ஆன் மிஷன்’ (இது தோராயமான பெயர்தான்!). விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்பி சில நாட்கள் மிதக்கவைத்து, மீண்டும் கீழே இறக்குவதுதான் மேன் ஆன் மிஷன். கிட்டத்தட்ட ஒரு டூர் அடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவது மாதிரி. என்ன… அது விண்வெளி ட்ரிப் என்பதால், எக்கச்சக்க டெக்னாலஜி அக்கப்போர், உலக நாடுகளின் பனிப்போர் எல்லாம் ஈர்த்துக் கவனம் பெறுகிறது; கோடிகளில் செலவு பிடிக்கிறது!

சரி… முதலில், எதற்கு மனிதனை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும்?

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-5

ஓர் எலி ஏன் சீக்கிரம் செத்துப்போகிறது? ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்நாள் ஏன் நாட்கணக்கில் மட்டுமே இருக்கிறது? மனிதன் எப்படி இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறான்? இவை எல்லாம் புதிரான தகவல்கள்.

எல்லா உயிர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் உள்ள இதயத் துடிப்புகள் சமமானவை. சில பிராணிகள் விரைவாகத் துடித்து முடிந்து போகின்றன. சில நிதானமாகத் துடித்து நின்று வாழ்கின்றன.

‘உடலின் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) நிறையைப் பொருத்து அமைகிறது’ என்று க்ளீபர் என்பவர் கண்டுபிடித்தார். அதாவது, ஒரு பசுவைவிட அணிலின் எடை ஆயிரம் மடங்கு குறைவு. ஆயிரத்தின் வர்க்கமூலம் 31. முப்பத்தொன்றின் வர்க்கமூலம் 5.5. எனவே, பசுவின் இதயத் துடிப்பு அணிலின் இதயத் துடிப்பைவிட 5.5 மடங்கு குறைவு. அதனால், அது அணிலைப்போல 5.5 மடங்கு அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கிறது. இதுவே உயிர் ரகசியம்.

Continue reading →