Daily Archives: ஜூலை 22nd, 2014

தங்க நகை சீட்டுக்குத் தடையா?

தங்கம் விற்கிற விலையில் மொத்தமாகப் பணம் தந்து வாங்க முடியாதவர்கள், தங்க நகைச் சீட்டு திட்டத்தில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் வாங்கி வந்தனர். ஆனால், புதிய கம்பெனி சட்டத்தின் மூலம் சாதாரண மனிதர்களின் இந்த ஆசைக்கும் உலை வைத்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

புதிய கம்பெனி சட்டத்தின் விதிமுறைகளைத் தொடர்ந்து, சில நகைக் கடைகள் தங்க நகைச் சீட்டு திட்டங்களை நிறுத்தி இருக்கிறது அல்லது அதன் கால

Continue reading →

சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு…

1. அன்பு, அரவணைப்பு, பாராட்டு, அக்கறை,   உணவில் அழகூட்டுதல் போன்றவற்றை நீங்கள் சமையலுக்கு முன்னும் பின்னும் சேர்க்காமல் இருப்பதும் பசியின்மைக்குக் காரணங்களாகும். அதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.

Continue reading →

லேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசே லேப் டாப் கம்ப்யூட்டரை வழங்குவதனால், நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக லேப்டாப் இடம் பிடித்துள்ளது.

Continue reading →

நலம் 360’ – 6

மருத்துவர் கு.சிவராமன்

வாய்க்கால் வரப்பில் வேலை செய்யும் களத்துமேட்டுப் பெண்கள் முதல் வாட்ஸ்-அப்  பெண்கள் வரை கவலையுடன் பகிர்ந்துகொள்ளும் விஷயம், ‘என்ன செஞ்சாலும் என் குழந்தை சாப்பிடுவேனானு அடம் பண்ணுது’ என்பதுதான். ‘அதட்டி, மிரட்டி, கொஞ்சி, கெஞ்சி எல்லா ஆட்டமும் ஆடிப் பார்த்தாச்சு. தட்டுல போட்டது அப்படியே கெடக்கு. ஸ்கூலுக்கு டப்பால கொண்டுபோனது அப்படியே திரும்பி வருது. என்ன சார் செய்ய?’ என மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கும் பெற்றோரின் எண்ணிக்கை இப்போது அதிகம். ‘சிறுதானிய சுண்டல், பழம், காய்கறிகள்னு என்னென்னவோ சொல்றீங்க. ஆனா, குழந்தை வாயைத் திறந்தாத்தானே அதெல்லாம் கொடுக்க முடியும்’ என அம்மாக்கள் வருத்தப்பட, ‘எதுக்கு இந்தக் கவலை? அதான் அத்தனை நல்ல சத்துக்களையும் நாங்க துரித உணவுல, ஊட்டச்சத்து பானத்துல ஒளிச்சுவெச்சுத் தர்றோம்ல’ என அந்த வருத்தத்திலும் வணிகம் பார்க்க நினைக்கின்றன சத்துணவு நிறுவனங்கள். அந்த உணவு மற்றும் பானங்களின் பணப்பரிவர்த்தனை இந்தியாவில் 3,000 கோடிகளைத் தாண்டுகிறதாம்.

Continue reading →

பொறுமையின் பெருமை!

‘பொறுத்தார் நாடாள்வர்; பொங்கியோர் காடாள்வர்’ என்பது, பெரியோர் வாக்கு. இதற்கு மிகப் பெரிய உதாரணமே, மகாபாரத சகோதரர்கள் தான்.
பாண்டவர்கள், பொறுமையை கடைபிடித்ததால், நாட்டை ஆள முடிந்தது. கவுரவர்களுக்கு பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இல்லாததால், பாரதப் போரில் மடிந்தனர். அதனால் தான், சான்றோர், பொறுமையை, பூமா தேவிக்கு ஒப்பிட்டும், கோபத்தை, மனித குலத்திற்கு எதிரான சத்ரு என்றும் கூறினர். பொறுமையின் பெருமையை விளக்கும் இக்கதையை படியுங்கள்…
புத்தர் பெருமான், ஒருமுறை, காட்டெருமையாகப் பிறவி எடுத்திருந்தார். காட்டெருமையின் பலமோ அளவிட முடியாதது; அதைக்கண்டு, மற்ற மிருகங்கள் பயந்து நடுங்கும். அத்தகைய பலமிகுந்த காட்டெருமையாகப் பிறந்தும், புத்தர் காட்டில் வாழும் எந்த ஜீவராசியையும் பயமுறுத்தவில்லை; மிகவும் சாதுவாகவே இருந்தார்.
சாதுவாக இருந்தாலே, மற்றவர்கள் சீண்டிப் பார்ப்பது உலக நியதி தானே! அந்த தத்துவத்தின்படி, ஒரு குரங்கு, சாதுவாக இருந்த காட்டெருமையை சீண்டிக் கொண்டே இருந்தது. அது, காட்டெருமையின் முதுகில் ஏறி சவாரி செய்வதும், அதன் கொம்புகளைப் பிடித்து ஆட்டுவதும், வாலைப் பிடித்திழுப்பதும், கடிப்பதுமாக இம்சித்துக் கொண்டே இருந்தது.
இவ்வளவு செய்த போதும், காட்டெருமையாகப் பிறந்திருந்த புத்த பகவான், மிகவும் பொறுமையோடு இருந்தார்.
அவர் பொறுமையைக் கண்டு, தேவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. அவர்கள் புத்தரிடம் வந்து, ‘சாந்தத்தின் மொத்த உருவமே… உங்களைப் படாதபாடுபடுத்தும் அக்குரங்கை தண்டிக்காமல், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே… அந்தக் குரங்கிடம் பயமா?’ என்று, கேட்டனர்.
அதற்கு, பகவான் புத்தர், ‘அந்தக் குரங்கைக் கண்டு, நான் ஏன் பயப்படப் போகிறேன்… நான் தலையைக் கொஞ்சம் ஆட்டினாலே போதும். அக்குரங்கின் வாழ்நாள் முடிந்து விடும். இருந்தும், அக்குரங்கின் குற்றத்தை பொறுத்துக் கொள்கிறேன். ஏன் என்றால், நம்மை விட பலசாலியாக இருப்பவர்கள் செய்யும் குற்றங்களை பொறுத்துப் போவதற்கு பெயர் பொறுமை இல்லை… நம்மை விட பலம் குறைந்தவர்கள் நமக்கு செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதற்கு பெயர் தான் பொறுமை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்…’ என்றார்.
விநாடி நேரம் அவசரப்பட்டு பொறுமையை இழந்து, பின், வாழ்நாள் முழுவதும் அல்லல் படுகிறோம். பொறுமை, என்றுமே பெருமையைத் தான் தரும்; சிறுமையைத் தராது.