Daily Archives: ஜூலை 23rd, 2014

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினுக்கு சம்மன்?

 

”நீக்கப்பட் ​ட​நிர்வாகிகளை சேர்த்துக்​​கொண்டதன் மூலம், ‘அண்​ணாவின் அன்பு​வழி’யை அனைவருக்கும் சுட்டிக்காட்டி​யுள்ளார் கருணாநிதி!” என்று தி.மு.க தகவல்களுடன் துள்ளிக் குதித்து வந்தார் கழுகார்!

”கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. அதற்கு சில நிர்வாகி கள்தான் காரணம் என்று முடிவுசெய்த ஸ்டாலின், ஒரு பட்டியலைத் தயாரித்தார்.அதில், மாவட்டச் செயலாளர்​களான பழனிமாணிக்கம், முல்லைவேந்தன், இன்பசேகரன் உள்பட 33 பேர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் பழனிமாணிக்கம் நீங்கலாக அனைவரது பேட்டியையும் ஜூ.வி-யில் வெளியிட்டு இருந்தீர். ராஜ்யசபா உறுப்பினரான கே.பி.ராமலிங்கமும் நீக்கப்பட்டார். இவர்கள் அனைவரும் தங்கள் விளக்கத்தை தலைமைக்கு அனுப்பினர். இந்த நிலையில் முல்லைவேந்தன் மட்டும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். கே.பி.ராமலிங்கம் பற்றி எதுவும் சொல்லவில்லை. மற்ற அனைவரும் கட்சியில் சேர்க்கப்படுவதாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது!”

”ஆச்சர்யமான திருப்பம்தான்!”

Continue reading →

உணவு என்பது… ஸ்டேட்டஸ் அல்ல!

ப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த சில ஆண்டுகளாக இளம்வயதுக் குழந்தைகள், ‘கொழுப்பு’ என்கிற எமனின் உறவுக்காரனால் ஆட்டிப்படைக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களில் அதிகமானோர் ‘ஒபிசிட்டி’ உள்ளிட்ட பலவிதமான நோய்களின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதைப்பற்றி கவலையோடு பேசும் சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையைச் சேர்ந்த ‘டயட்டீஷியன்’ பவானி, ”இது நூற்றுக்கு நூறு உண்மை. குழந்தைகள் பலரும் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையைவிட, அதிக எடையிலேயே இருக்கிறார்கள். இதற்குக் காரணம்… குழந்தைகளின் தாறுமாறான உணவுப் பழக்கம் என்று சொல்வதைவிட, இதற்கு அவர்களை ஆளாக்கிய, அனுமதித்த பெற்றோர்களே!” என்று குற்றம் சாட்டுகிறார்.

Continue reading →

பட்ஜெட் 2014 : வரிச் சலுகைகளை லாபகரமாக மாற்றிக்கொள்ளும் சூட்சுமங்கள்!

 

மத்திய பட்ஜெட்டில் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் அறிவிப்புகள் இல்லை என்றாலும், நடுத்தர மக்களுக்கு வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் சலுகைகள் நிறையவே இருக்கின்றன.

அடிப்படை வருமானவரி வரம்பு, வீட்டுக் கடன் வட்டி, வருமான வரிவிலக்கு முதலீடு போன்றவற்றில் தலா ரூ.50,000 சலுகை அளிக்கப்பட்டு இருக்கிறது.

பட்ஜெட்டில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.5000 முதல் அதிகபட்சமாக ரூ.15,000 வரியில் மிச்சமாகும்.

மேலும், கடந்த ஆண்டு 5 லட்ச ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.2000 வரித் தள்ளுபடிஇந்த ஆண்டும் தொடரும். இதெல்லாம் மாதச் சம்பளக்காரர்களுக்கு சந்தோஷமான செய்தியே.

  எதில் முதலீடு செய்யலாம்?

Continue reading →

பேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்

பேஸ்புக்கில், என் நண்பர் நான் அனுப்பிய friend request ஒன்றை ஏற்றுக் கொண்டதாக எனக்குத் தகவல் அனுப்பியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் அது போன்ற ஒன்றை அனுப்பவே இல்லை. இது எதனால் ஏற்படுகிறது?” என வாசகர் ஒருவர்  கேட்டிருந்தார். வேறு சில வாசகர்களும், பேஸ்புக் குறித்து இதே போன்ற பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். இது குறித்து சற்று விரிவாக இங்கு காணலாம்.

Continue reading →