இணைய வெளியில் ஒரு நிமிடத்தில்

இணையம் ஒரு சிறிய கிராமமாக உருவெடுத்துள்ளது. இங்கு இயங்கும் மக்களுக்குத் தொலைவு என்ற தடை எப்போதும் இல்லை. இதோ அதன் இயக்க நடைமுறைகள். இணையக் கிராமத்தில் ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடைபெறுகின்றன என்று பார்க்கலாம்.
ஒரு நிமிடத்தில் மின் அஞ்சல் பயன்படுத்துபவர்கள் அனுப்பும் தகவல்களின் எண்ணிக்கை 20 கோடியே 40 லட்சம்.

இணையத்தில் சிறந்த வர்த்தக நிறுவனமாக இயங்கும் அமேஸான் டாட் காம் நிறுவனம், ஒரு நிமிடத்தில் விற்பனை செய்திடும் பொருட்களின் மதிப்பு 83 ஆயிரம் டாலர்.
ஒரு நிமிடத்தில் ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்துவோர் 48 ஆயிரம் அப்ளிகேஷன்களைத் தரவிறக்கம் செய்திடு கின்றனர்.
ஒரு நிமிடத்தில் பேஸ்புக் பயனாளர்கள், 24 கோடியே 60 லட்சம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
ஒரு நிமிடத்தில், ட்விட்டர் தளத்தில், 2 லட்சத்து 77 ஆயிரம் தகவல்கள் பதியப்படுகின்றன.
ஸ்கைப் வழியே தொடர்பு கொண்டவர்கள், ஒரு நிமிடத்தில், 23 ஆயிரத்து 30 ஆயிரம் மணி நேரத் தொடர்பினை மேற்கொள்கிறார்கள்.
யு ட்யூப் தளத்தில், 72 மணி நேரம் ஓடக்கூடிய விடியோ படக் காட்சிகள், ஒரு நிமிடத்தில் ஏற்றப்படுகின்றன.
கூகுள் தேடல் தளத்திற்கு 40 லட்சம் தேடல் கேள்விகள் ஒரு நிமிடத்தில் கிடைக்கின்றன.
வாட்ஸ் அப் பயனாளர்கள், ஒரு நிமிடத்தில், 3 லட்சத்து 47 ஆயிரத்து 222 போட்டோக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் போட்டோ தளம் பயன்படுத்துபவர்கள், 2 லட்சத்து 16 ஆயிரம் போட்டோக்களைப் பதிக்கின்றனர்.
இணையக் கிராமத்தில் 240 கோடி மக்கள் இயங்குகின்றனர். இரண்டு ஆண்டுகளில், இணைய மக்கள் தொகை 14.3% அதிகரித்துள்ளது.
மேலும் இது போன்ற தகவல்களுக்கு http://www.domo.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைக் காணவும்.

%d bloggers like this: