Daily Archives: ஜூலை 25th, 2014

அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறையும்: ஆய்வில் தகவல்

புதுடில்லி : அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. டிவி மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Continue reading →

பிளீச்சிங், ஃபேஷியல் எது பெஸ்ட்?

‘பிளீச்சிங், ஃபேஷியல் செய்து கொள்வதால் என்ன பலன், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’ என்று, பிரபல நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் அழகுக்கலை நிபுணர் வீணாவிடம் கேட்டோம். 

”வயது என்பது கூடிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், நம் உடலையும், உள்ளத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால்தான் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும். ஒருவரைப் பார்க்கும்போது அவரது முகத் தோற்றம்தான் எப்போதும் நம் கண் முன் நிற்கும். இப்படி, ஒருவரின் மனதில் பதியும் முகத்தில் மாசு மரு, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பது ஒன்றே இளமையான தோற்றத்துக்கு வழி. முக அழகைக் கூட்டும் பிளீச்சிங், ஃபேஷியல் செய்தால், நம் ஒரிஜினல் அழகைப் பொலிவாகக் காட்டுமே தவிர, வெள்ளையாக மாற்றிவிடும் என நினைப்பது தவறு” என்றவர் ஃபேஷியல், பிளீச்சிங் செய்யும் முறைகளை விளக்கினார்.

Continue reading →

ஃபைனான்ஷியல் தவறுகள்… நீங்களும் செய்யாதீர்கள்!11

 நம் சொத்து நம்மிடமே!

எனது வாடிக்கையாளர் ஒருவரின் உயிலில் உள்ள சந்தேகங்களுக்குப் பதில் தேடி என்  வக்கீல் நண்பர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். என் வக்கீல் நண்பர் தன் அறையில்  வயது முதிர்ந்த ஒரு தம்பதியிடம் பேசிக் கொண்டிருந்தார். நீண்டநேரம் கழித்து, அந்தப் பெண்மணி அழுதபடி வெளியே வந்தார். உள்ளே போன நான், ஏன் அந்த அம்மா அழுகிறார் என்று நண்பரிடம் கேட்டேன்.  என் நண்பர் சொல்ல ஆரம்பித்தார்.

சொத்தை விற்று சொத்து வாங்கினார்கள்!

‘‘அந்தப் பெரியவர் அரசு வேலையி லிருந்து ஓய்வு பெற்றவர். தன் சேமிப்பில் நிலம் வாங்கி ஒரு சிறிய வீடு கட்டினார். தன் ஒரே மகனை பொறியியல் படிப்பு படிக்க வைத்தார். மகனும் நன்கு படித்து ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கைநிறையச் சம்பளம் வாங்கினார்.  மகனுக்கு திருமணமும் செய்துவைத்தார்கள். மருமகளுக்கும் அதே துறையில் வேலை என்பதால் நிறையவே சம்பாதித்தார்கள்.

Continue reading →

அறிவிப்பு பகுதியில் ஐகான்களை நீக்க

டாஸ்க் பாரில் வலது ஓரமாகக் காட்டப்படும் நோட்டிபிகேஷன் ஏரியாவில் உள்ள ஐகான்களை நீக்க முயற்சித்ததாகவும், முடியவில்லை என்றும், அதற்கான வழிகளைக் காட்டும்படி, பல வாசகர்கள் கேட்டு கடிதங்களை அனுப்பியுள்ளனர். சிலர், இவை எப்படி இங்கு வருகின்றன என்றே தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இவை இங்கு காட்டப்படாமல் இருக்க புரோகிராம்களை செட் செய்திடும்போதே அமைக்க முடியுமா என்றும் கேட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், எக்ஸ்பியிலிருந்து, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள். விரிவான தகவல்களை, இதன் சார்பாக இங்கு தருகிறேன்.
விண்டோஸ் 7 சிஸ்டம் தன்னுடைய நோட்டிபிகேஷன் ஏரியாவினை எப்படி அமைத்துள்ளது என்பது குறித்த தெளிவு இல்லாததனால், இந்த ஐயங்கள் ஏற்படுகின்றன. மைக்ரோசாப்ட் இதற்கு நோட்டிபிகேஷன் ஏரியா (notification area) எனப் பெயர் கொடுத்ததன் விளைவு என்று கூடச் சொல்லலாம்.

Continue reading →

மனிதன் மாறி விட்டான்!-6

உடலின் வளர்ச்சி ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வொரு மாதிரி, பல் முளைப்பதில் இருந்து பாத அமைப்பு வரை. நான்கு முழங்கால்கள் உள்ள பிராணி யானை மட்டும்தான். ஆனாலும், பாவம் அது மட்டும்தான் எம்பிக் குதிக்க முடியாது. மனிதனுக்கு இரண்டு முறை பற்கள் விழுந்து முளைக்கின்றன. யானைக்கு ஆறு முறை, சுறா மீன்களுக்கு வாழ்வின் இறுதி வரை விழுந்து விழுந்து முளைக்கின்றன. நாம் கடைசி வரை ஒரே எலும்புக் கூட்டோடு இருக்கிறோம். சிங்கி இறால் போன்றவை அடிக்கடி வெளிப்புற எலும்புக்கூட்டில் புதிய ஒன்றை வளர்த்துக்கொண்டு உதறி எறிகின்றன. மனிதனுக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள சில வயிற்றுப் பை உள்ள மார்ஸ¨பியலுக்கும் மாத்திரமே மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) ஏற்படுகிறது.  அதில் பெண் இனத்துக்கு அல்ல; ஆண் இனத்துக்குதான். மனிதர்களில் பெண்களுக்கு மெனோபாஸ் தோன்றுவதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. 200 பவுண்டு உள்ள கொரில்லாவுக்கு நான்கு பவுண்டு உள்ள குட்டி பிறக்கிறது. ஆறாயிரம் கிலோ உள்ள யானைக்கு, 100 கிலோ உள்ள கன்று பிறக்கிறது.  ஆனால், 100 பவுண்டு உள்ள பெண்ணுக்கு ஏழு பவுண்டு எடை உள்ள குழந்தை பிறக்கிறது. விகிதாசாரப்படி பார்த்தால் ஏழு சதவிகிதம். அப்போது அதற்கு எவ்வளவு சக்தி தேவைப்படும்.

Continue reading →

முன்னோர் அருள் கிடைக்க!

ஜூலை 26 – ஆடி அமாவாசை
சூரியனுடைய ஒளிக்கிரகணங்கள் ஒவ்வொன்றுக்கும், தனித்தனி பெயர் உண்டு. இதில், ‘அமா’ என்ற பெயர் கொண்ட கிரகணத்தில், சந்திரன் வந்து தங்கும் காலத்தையே, அமாவாசை என்பர்.
மாதம்தோறும் அமாவாசை வந்தாலும், அவற்றில் தை மற்றும் ஆடி அமாவாசைகள் தான் உயர்ந்தவை. ஆடி முதல் மார்கழி வரை, தேவர்களின் உறக்க காலமாகக் கருதப்படுகின்றது. இச்சமயத்தில், நம் முன்னோர்கள் பிதுர்லோகத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்க பூமிக்கு வருகின்றனர். நாம் அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்து, திருப்திப்படுத்த வேண்டும்.
இதில், நம்மில் சிலருக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. நம் முன்னோர்களில் பலர் பிறப்பற்ற நிலையடைந்து, கைலாயத்திலோ, வைகுண்டத்திலோ வசிக்கலாம். அப்படியிருக்க அவர்களுக்கு பசி தாகமே இருக்காது. இந்நிலையில், நாம் அவர்களுக்கு வீட்டில் படையல் மற்றும் பிண்டம் கரைத்து, அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டுமா என்று!
இந்த சந்தேகம் நமக்கு மட்டுமல்ல, ராமாயண காலத்தில் ஜாபாலி என்ற முனிவருக்கே ஏற்பட்டுள்ளது. அவர் தன் சந்தேகத்தை, ராமனிடம் கேட்டார்…
‘ராமா… மறைந்த பெற்றோருக்கு, இங்கே கொடுக்கிற பிண்டப் பிரதானம் அங்கே போய்ச் சேர்கிறதாம்… இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? அதை இங்கிருந்து அங்கு கொண்டு போய் சேர்ப்பது யார்?’ என்று, ஏளனமாக கேட்க, ராமனுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது.
ராமர், தன் வாழ்வில் எதற்குமே கோபப்பட்டதில்லை. தன் மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட, அவர் அந்தளவு கோபமடையவில்லை என்பது, ‘இன்று போய் நாளை வா’ என, அவனுக்கு கருணை காட்டியதிலிருந்து புரிகிறது. ஆனால், ஜாபாலி இவ்வாறு கேட்டதும், அவருக்கு கோபம் வந்து, ‘மகா தபஸ்வியான நீர் இப்படி கேட்கலாமா? முன்னோருக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம், பித்ரு தேவதைகளைப் போய் சேரும் என்பதை, வேதங்களே ஒப்புக்கொள்கின்றன. வேதமே நமக்கு பிரமாணம்; அதுவே சத்தியம். வேதம் சொல்வதில் உமக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விட்டதா?’ என்று, கேட்டார்.
ஆக, ராமபிரானாலேயே வலியுறுத்தப்பட்டது பிதுர் கடன் செய்வது. அமாவாசையன்று பிதுர்தேவதைகள் மூலம், நாம் அன்புடனும், பக்தியுடனும், நம்பிக்கையுடனும் அளிக்கும் பிண்டம், நம் முன்னோர்களை போய்ச் சேர்கிறது. இவ்வாறு உணவு பெறும் நம் முன்னோர், ‘நாம் நல்ல பிள்ளையைப் பெற்றோம்; நம் வம்சத்தவன் வேதங்களும், சாஸ்திரங்களும் சொல்வதைக் கேட்டு, தர்மத்தைக் கடைபிடிக்கிறான்’ என, நம்மை வாழ்த்துவர்.
அந்த வாழ்த்து, நம் குலத்தை, வாழையடி வாழையாகத் தழைக்கச் செய்யும். நமக்கு ஆபத்து வரும் காலத்தில், அரண்போல் நின்று காப்பாற்றும். இவ்வுலக வாழ்வுக்கு வேண்டிய செல்வத்தைத் தரும்.
அது மட்டுமல்ல… பிதுர் தேவதைகளை ஆராதித்தால், விஷ்ணுவையே ஆராதிப்பதற்கு சமம் என்ற கருத்தும் உண்டு. இதனால், அந்த லட்சுமி நாராயணனின் திவ்ய அருள் நமக்கு பூரணமாக கிடைக்கும்.
ஆடி அமாவாசையன்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்கள் ஆசியைப் பெறுங்கள்.