மிஸ்டர் கழுகு: சட்டமன்ற சர்ச்சை மக்கள் மன்றம் வரும் தி.மு.க.!
”2ஜி விவகாரம் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற விசாரணைப் படலத்தை எட்டி நடந்துவரும் நிலையில், ஏர்செல் மற்றும் மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் இப்போது தலைதூக்க இருப்பதாக டெல்லி தகவல்கள் சொல்கின்றன” என்ற தகவலை வீசியபடியே வந்தார் கழுகார்!
”தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு விஷயம் இப்போது பூதாகாரமாக ஆகத் தொடங்கியுள்ளது. ‘ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி அதன் பங்குகளை மேக்சிஸ் என்ற மலேசிய நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு விற்க வைத்தார். இந்த வியாபாரத்தின் மூலம் லாபம் சம்பாதித்த மேக்சிஸ் நிறுவனம், அதற்கு கைமாறாக சன் டி.வி-யின் பங்குகளை 600 கோடி ரூபாய்க்கு வாங்கியது’ என்ற
கல்லீரலில் கவனம் தேவை!
மலேரியா, சர்க்கரை நோய், எய்ட்ஸ், புற்றுநோய் பற்றி நமக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், சத்தமில்லாமல் கொல்லக்கூடிய, எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய ஹெபடைட்டிஸ் பி உள்ளிட்ட வைரஸ் கிருமிகளைப் பற்றி அதிகம் தெரியாது. ஆண்டுதோறும் 14 லட்சம் பேருக்கு, ஹெபடைட்டிஸ் ஏ தொற்று ஏற்படுகிறது. 2.4 கோடி பேர், ஹெபடைட்டிஸ் பி (எச்.பி.வி) கிருமித் தொற்றுடன் வாழ்கின்றனர். 7.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி மற்றும் இ வைரஸ் கிருமியால் லட்சக்கணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழங்கள் பலன்கள்
பழத்தைக் கொண்டாடியவர்கள் நம் ‘பழ’ந்தமிழர்கள். ‘முத்தமிழே…முக்கனியே…’ என கொஞ்சிப்பேசியவர்கள் நாம். இன்றைய பீட்சா, பர்கர் யுகத்தில் பழங்களை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தருபவை கனிகள்.
பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.
ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா? எடை குறைய என்ன வழி?
மச்சி, ரெண்டு கிலோ எடையைக் குறைக்கிறதுக்கு… ஊரெல்லாம் தெருத் தெருவா ஓடுறேன்டா! அந்த டி.வி. புரோகிராம்ல 30, 40 கிலோனு எப்பிடிடா குறைச்சாங்க?’ – விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில், நூறு நாட்களில் உடல் எடையை 40 கிலோ வரை குறைத்த ஒரு பெண்மணியைப் பார்த்து வந்த பொறாமைப் புலம்பல் இது. ‘ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலரின் கேள்வி இதுதான்!
கவிபாடும் கண்களுக்கு..!
பார்லர்
”இன்று, பெரும்பாலான இளம் பெண்கள் மொபைலையும், அலுவலகம் செல்லும் பெண்கள் கம்ப்யூட்டரையும், இல்லத்தரசிகள் டி.வி-யையும் பார்த்துட்டே இருக்காங்க. இதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இது கண்களோட அழகை மட்டுமில்ல… ஆயுளையும் கெடுத்துடும்” என்று எச்சரிக்கும் ‘க்ரீன் டிரெண்ட்ஸ், சீனியர் டிரெயினர் பத்மா, கண்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கான பார்லர் சிகிச்சை பற்றி சொல்கிறார்…
”கண்களுக்கான ரிலாக்ஸிங் ட்ரீட்மென்ட் ப்ளஸ் கண் கருவளையத்துக்கான சிகிச்சை என டூ இன் ஒன் பார்லர் சிகிச்சையான ‘ஐ ட்ரீட்மென்ட்’ பற்றி இங்கே பார்ப்போம். இதில், முதல்ல கண்களை க்ளென்ஸிங் மூலமா சுத்தப்படுத்தி, ஒரு பேக் போட்டுவிடுவோம். அதை அலசிய பிறகு, மசாஜ் க்ரீம் கொண்டு கண்களுக்கு நல்லா மசாஜ் கொடுப்போம். இது முடிஞ்சதும், ஐ ஜெல் மூலம் மசாஜ் கொடுப்போம். மீண்டும் ஒரு பேக் போட்டு விடுவோம். இந்த ட்ரீட்மென்ட் காரணமா கண்கள் புத்துணர்ச்சி பெறுவதோட, கருவளையமும் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுடும்” எனும் பத்மா, கண் அலங்காரத்துக்கு டிப்ஸ் தந்தார்.
வேர்ட் டிப்ஸ்
வேர்டின் முதல் டைரக்டரியை மாற்ற: வேர்ட் முதலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் சேவ் செய்திட, மை டாகுமெண்ட்ஸ் போல்டரை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறது. ஆனால் நாம் வேறு ஒரு போல்டரில் இவற்றை சேவ் செய்திடத் திட்டமிட்டால், அதற்கும் வேர்ட் வழி தருகிறது.
1. ஆபீஸ் பட்டனை அழுத்தவும். அதன் பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இது, Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கும்.