வேர்ட் டிப்ஸ்

வேர்டின் முதல் டைரக்டரியை மாற்ற: வேர்ட் முதலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் சேவ் செய்திட, மை டாகுமெண்ட்ஸ் போல்டரை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறது. ஆனால் நாம் வேறு ஒரு போல்டரில் இவற்றை சேவ் செய்திடத் திட்டமிட்டால், அதற்கும் வேர்ட் வழி தருகிறது.
1. ஆபீஸ் பட்டனை அழுத்தவும். அதன் பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இது, Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கும்.

2. டயலாக் பாக்ஸின் இடது பிரிவில், Save என்பதில் கிளிக் செய்திடவும்.
3. வலது பக்கத்தில் உள்ள Default File Location என்ற பீல்டில், Browse பட்டனை அழுத்தவும்.இப்போது வேர்ட் காட்டும் டயலாக் பாக்ஸில், பிரவுஸ் செய்து டைரக்டரிகளைத் தேர்ந்தெடுக்கலாம். எந்த டைரக்டரியை ஸ்டார்ட் அப் டைரக்டரியாகப் பயன்படுத்த விருப்பமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்தடுத்து இருமுறை ஓகே பட்டனை கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் தேர்ந்தெடுத்த டைரக்டரி, மாறா நிலை டாகுமெண்ட் பைல்களை சேவ் செய்திடும் டைரக்டரியாக அமைக்கப்படும்.
டேபிளில் பார்டர்கள் தேவையா?: வேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றபடி கோடுகளை செல்களைச் சுற்றி லும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு (Ctrl+ Alt+U) கீகளை அழுத்தினால் பார்டர் கோடுகள் நீக்கப்படும். இந்த கீகளை அழுத்தும் முன் கர்சர் ஏதேனும் ஒரு செல்லில் இருக்க வேண்டும்.
பாண்ட் டயலாக் பாக்ஸ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவசரமாக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட வகையில் பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், மெனு பார் சென்று Format கிளிக் செய்து பின்னர், Font தேர்ந்தெடுக்கிறோம். பின்னர், நமக்கு பாண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது சற்று நேரம் எடுக்கும் வேலை ஆகும்.
ஒரு சில சொற்கள் அல்லது வரிகளில், ஏதேனும் பார்மட்டிங் வேலையை மேற்கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படலாம். முதலில் பார்மட் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், அந்த பகுதியில், மவுஸ் கர்சரைக் கொண்டு, ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில், Font கிளிக் செய்தால் Font Dialogue Box கிடைக்கும். தேவையான பார்மட்டிங் பணியை நிறைவு செய்திடுங்கள். இறுதியில் ஓகே கிளிக் செய்து முடிக்கவும்.

Click Here

%d bloggers like this: