Daily Archives: ஜூலை 28th, 2014

பலா

ஆற்றல், நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழம் இது. 100 கிராம் பலாப் பழத்தில், 95 கலோரிகளே உள்ளது. இது மிகவும் எளிதில் செரிமானத்தைக் கொடுக்கும். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், குடலைப் பாதுகாக்கிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. குறைந்த அளவில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் பி உள்ளிட்ட ஃபிளவனாய்ட் உள்ளதால், பார்வைத் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இயற்கையான முறையில் கிடைக்கும் இந்த வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின்கள், நுரையீரல் மற்றும் சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.

Continue reading →

புரோட்டீன் ஷேக்… நல்லதா கெட்டதா?

‘புரோட்டீன் பவுடர் சாப்பிட்டா உடம்பு ஃபிட்டா இருக்கும்னு சொல்றாங்க… எனக்கு புரோட்டீன் பவுடர் வாங்கிக்கொடு’ இன்றைய இளைஞர்கள் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்ததும் வீட்டில் நச்சரிக்க ஆரம்பிக்கிற விஷயம் இது. ‘அன்றாட உணவில் இருக்கும் புரதத்தை நம்புவதைவிட புரோட்டீன் ஷேக், புரோட்டீன் பவுடர் பயன்படுத்துவது சிறந்தது’ என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது.

Continue reading →

ஜெயலலிதா குற்றமற்றவர்! பெங்களூரு லைவ்!

ஜெயலலிதாவின் 66 கோடி ரூபாய் சொத்துக்காக 25 நாட்களில் 80 மணி நேரம் தன் இறுதி வாதத்தை எடுத்துவைத்து நிறைவு செய்திருக்கிறார் வழக்கறிஞர் குமார். அவரது இறுதி வாதம் கடந்த 23-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முடிந்தது. அடுத்து சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கரின் இறுதிவாதம் தொடங்க இருக்கிறது. இவருக்கு உதவியாக அசோகன், சீனிவாசன், அன்புக்கரசு, பன்னீர்செல்வம், தனஞ்செயன், கருப்பையா ஆகிய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் பெங்களூருக்கு வந்திருக்கிறார்கள்.

குமாரின் இறுதி வாதத்தில் இருந்து…

”இந்த கம்பெனிகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இல்லை!”

”எனது கட்சிக்காரர் மீது போடப்பட்ட வழக்கில் உள்ள குறைபாடுகளை சுருக்கமாகச் சொல்கிறேன். பங்கு முதலீடு மூலமாக 10 நபர்கள் மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் ஆகிய மூன்று கம்பெனிகளில் சேர்கிறார்கள். அவர்களின் முதலீட்டாளர்களைக் காண்பிக்கும்படி வருமானவரிச் சட்டம் 148 மூலமாக நோட்டீஸ் அனுப்பியது வருமானவரித் துறை. சட்ட விதிகளுக்கு பதிலளிக்கும் விதத்தில், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய அனைத்து முதலீட்டாளர்களையும் காட்டியிருக்கிறார்கள்.

Continue reading →

ரத்தக் கொதிப்பைத் தவிர்க்கும் உணவு வகைகள்!

 

முருங்கைக் கீரையை நீர் நிறைய விட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோல செய்து, காலை உணவுடன் பருகலாம்.

மதிய உணவில் சமைக்காத சிறிய வெங்காயத் தயிர் பச்சடி, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி, வெள்ளரிப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம்.

Continue reading →

நலம் 360’ – 7

‘காசு, பணம், துட்டு, மணி, மணி…’ – என ஆடவைக்கும் வாழ்க்கைச் சூழலில், அமைதியாக வளர்ந்து ஆளைக் கொல்லும் அரக்கனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது ரத்தக் கொதிப்பு நோய். ‘இந்த நோய்க்குக் கூடுதல் கவனம் கொடுங்கள். உங்கள் நாட்டில், கிட்டத்தட்ட 25 வயதுக்கு மேல் உள்ள மக்களில் 25 சதவிகிதம் பேருக்கு பி.பி எகிறிப்போய் இருக்கிறது’ என்று இந்தியா மீது கரிசனக் கவலை தெரிவிக்கிறது உலகச் சுகாதார அமைப்பு. மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல்… எனத் தீர்ப்பதற்கு மிகக் கடினமான பல பிரச்னைகள உண்டாக்கும் இந்த ரத்தக் கொதிப்பு, முழுக்க முழுக்க தவிர்க்கக்கூடியதும் கட்டுப்படுத்தக்கூடியதும்கூட. நோய்குறித்த அலட்சியமும் தவறான புரிதலும் ‘துரத்தலும் தப்பித்தலுமான’ துரித வாழ்வியலும்தான் இந்த நோய் கும்மியடித்துக் குத்தாட்டம் போடுவதற்கான முக்கியமான காரணங்கள்.

Continue reading →

உணவு யுத்தம்!-26

 

பால் பவுடரின் கதை

மார்க்கோ போலோ தனது பயணக் குறிப்பில் சீனாவில் உள்ள போர் வீரர்கள் சூரிய வெப்பத்தில் பாலைச் சுண்டவைத்துப் பசை போலாக்கித் தங்களுடன் கொண்டு சென்றதாகக் கூறுகிறார். 1802-ம் ஆண்டு ரஷ்யாவின் ஒசிப் கிர்க்கோவ்ஸ்கி என்பவர் முதன்முதலாகப் பாலை காய்ச்சி பவுடர் செய்வதை அறிமுகப்படுத்தினார். 1832-ல் பால்பவுடர் விற்பனை தொடங்கியது.

Continue reading →